அவசரகால நிலைகள்
இந்திய அரசியல் அமைப்பு 3 வகையான நெருக்கடி நிலைமைகளை பற்றிக் குறிப்பிடுகிறது.
1. தேசிய நெருக்கடி நிலைமை
2. மாநில நெருக்கடி நிலைமை
3. நிதி நெருக்கடி நிலைமை
தேசிய நெருக்க்கடி நிலைமை:
1. இந்தியாவின் பாதுகாப்பு வெளித்தாக்குதலாலோ ஆயதக் கலகங்களாலோ அல்லது போரினாலோ அச்சுறுத்தப்படுகிறது என குடியரசுத் தலைவர் திருப்தியுற்றால் அவர் இந்தியா முழுமைக்குமோ அல்லது இந்திய நாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கோ நெருக்கடி நிலைமை பிரகடனப்படுத்தலாம் என உறுப்பு 352 (1) கூறுகிறது.
2. தேசிய நெருக்கடியின் கால அளவு: 6 மாதங்கள் மட்டும்
3. 6 மாதத்திற்கு பிறகு மேலும் 6 மாதத்திற்க நீட்டிக்க அதிகாரம் பெற்றவர் குடியரசுத் தலைவர் ஆவார்.
4. நெருக்கடி நிலைமை பிரகடனமானது பாராளுமன்றத்தின் இரு அவைகளின் முன்பும் சமர்ப்பிக்கப்படவேண்டும் அதனை இரு அவைகளும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அப்பிரகடனமானது ஒரு மாதத்திற்குள் தன் செயல்திறனை இழந்து விடும். என உறுப்பு 352 (4) கூறுகிறது.
5. ஏற்கனவே ஒரு நெருக்கடி நிலைமை பிரகடனம் இருப்பினும், மேலும ; ஒரு நெருக்கடி நிலைமை பிரகடனத்தை குடியரசுத்தலைவர் அறிவிக்கலாம் என உறுப்பு 352 (9) கூறுகிறது.
6. தேசிய நெருக்கடியின் போது குடியரசுத் தலைவர் அடிப்படை உரிமையை நீக்கலாம்
7. இந்தியாவில் இதுவரை அமல்படுத்தப்பட்ட தேசிய நெருக்கடி நிலைகள்: 2
8. 1962 முதல் 1966–காரணம் சீனப்போர்
9. 1971 முதல் 1977 – உள்நாட்டு கலவரம்
மாநில நெருக்க்கடி நிலைமை:
1. உறுப்பு 356ன் படி குடியரசுத்தலைவர், ஒரு மாநில ஆளுநர் அனுப்பிய அறிக்கையினைப் பெற்றதின் பேரிலோ அல்லது அம்மாநில அரசாங்கம் அரசியலமைப்பு சட்ட வகைமுறைகளின்படி நடத்த முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது என அவர் திருப்தியுற்றாலோ, அந்த மாநிலத்தில் அவர் நெருக்கடி நிலைமையைப் பிரகடனப் படுத்தலாம்.
2. உறுப்பு 356ன் படி மாநில நெருக்கடி நிலைமை பிரகடனமானது பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அவையின் முன்பும் வைக்கப்பட வேண்டும். அதனை இரண்டு மாத காலம் முடிவடையும் முன் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் அங்கீகரிக்கவில்லை என்றால் அது இரண்டு மாத காலம் வரை அமலில் இருக்கும்.
3. அத்தகு பிரகடனத்தை அதனைத் தொடர்ந்த ஒரு பிரகடனத்தினால் திரும்பப்பெற்றுக் கொள்ளலாம் அல்லது மாற்றியமைக்கலாம்.
4. இந்த பிரகடனமானது மக்களவையினால் அங்கீகரிக்கப்பட்டுவிடட்hல். அது ஆறுமாதங்கள் வரை அமலில் இருக்கும்.
5. இந்த ஆறுமாத காலம். பாராளுமன்றத்தால் நீட்டிக்கப்படலாம். ஆனால் எந்த நெருக்கடி நிலைமை பிரகடனும் மூன்று ஆண்டுகாலம் முடிவடைந்தவுடன், குடியரசுத் தலைவருக்கோ அல்லது பாராளுமன்றத்திற்கோ, அப்பிரகடனத்தைத் தொடர்ந்திருக்கச் செய்ய அதிகாரம் இல்லை.
6. ஐனாதிபதி ஆட்சியன் போது அந்த மாநில் சட்ட விவகாரங்கள் விவாதிக்கப்படும் இடம் நாடாளுமன்றம் ஆகும்
7. ஐனாதிபதி ஆட்சியன் போது அந்த மாநில் பட்ஐட் தாக்கல் செய்யும் இடம் நாடாளுமன்றம் ஆகும்
8. ஐனாதிபதி ஆட்சியன் போது அந்த மாநில் பட்ஐட்டை தாக்கல் செய்பவர் ஐனாதிபதி ஆவார்.
9. முதன் முதலில் ஐனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலம்: பஞசாப் (1951)
10. அதிக முறை ஐனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலம்: பஞசாப
11. அதிக முறை ஐனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டவா:; இந்திரகாந்தி
நிதி நெருக்கடி நிலைமை
1. இந்தியாவின் நிதி நிலைமை அல்லது கடன் நிலைமை அச்சுறுத்தப்படக்கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது என குடியரசுத்தலைவர் திருப்தியுற்றால் அவர் நிதி நெருக்கடி நிலைமையை பிரகடனப்படுத்தலாம் என உறுப்பு 360 கூறுகிறது.
2. மாநில அரசு ஊழியர்கள், உச்ச மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள். இவர்களின் ஊதியத்தை குறைக்க குடியரசுத்தலைவர் பரிந்துரைக்கலாம.; _ மாநிலச் சட்டமன்றங்களாய் நிறைவேற்றும் எல்லா நிதி மசோதாக்களையும் தமது பரிசீலனைக்கு அனுப்புமாறு குடியரசுத் தலைவர் உத்தரவிடலாம். இந்த மாதிரியான நெருக்கடி நிலைமை இதுவரை பிரகடனப்படுத்தப்படவில்லை.
3. 6 மாதத்திற்க ஒருமுறை நாடாளுமன்ற அனுமதி தேவை இல்லை
4. நெருக்கடி நிலையின் போது அடிப்படை உரிமை உறுப்பு 21 பாதிக்கப்படாது.