உச்ச நீதிமன்றம் ( உறுப்பு: 124-146)

0
75
supreme court indian polity study material

உச்ச நீதிமன்றம் ( உறுப்பு: 124-146)

நீதிபதிகளின் நியமனம்

1. உச்ச நீதிமன்றம் ஓரு தலைமை நீதிபதியையும் மற்றும் 25 நீதிபதிகளையும் கொண்டு இருக்கும்.
2. நாடாளுமன்றமானது உச்சநீதிமனற் (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்தச்சட்டம், 2008 யின் படி நீதிபதிகளின் எண்ணிக்கையை 26 லிருந்து 31 (தலைமை நீதிபதியையும் உயர்த்தியது) ஆக உயர்த்தியது.
3. குடியரசுத்தலைவர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை நியமனம் செய்கிறார். அவரது ஆலோசனையின் பேரில் மற்ற நீதிபதிகளையும் குடியரசுத் தலைவரே நியமனம் செய்கிறார்.

நீதிபதியாவதற்க்கான தகுதிகள

1. அவர் இந்தியாவின் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
2. உயர்நீதிமன்றத்திலோ 2 அல்லது அவற்றிறகு மேற்பட்ட நீதிமன்றங்களிலோ தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு குறையாமல் நீதிபதியாக இருந்தவராக இருக்க வேண்டும்.
3. உயர்நீதிமன்றத்திலோ 2 அல்லது அவற்றிறகு மேற்பட்ட நீதிமன்றங்களிலோ 10 ஆண்டுகளுக்கு குறையாமல் வழக்கறிஞராக இருந்தவராக இருக்க வேண்டும்.
4. 65 வயது நிறைவடையும் வரை பதவி வகிக்கலாம்.
5. தனது பதவி விலகல் கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் வழங்கலாம்.
6. பாராளுமன்றத்தின் பரிந்துரையின் படி இவரை பதவி நீக்கம் செய்யலாம்.

நீதிபதியை பதவிநீக்கம் செய்யும் முறை:
1. நாடாளுமன்றத்தின் பரிந்துரைக்குப் பிறகே குடியரசுத் தலைவர் நீதிபதியை பதவி நீக்கம் செய்வார். இதற்கு சிறப்பு பெரும்பான்மையின்படி ஆதரவு தெரிவிக்கப்பட வேண்டும். (அவையின் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையும் மற்றும் 2ஃ3 மடங்கு வந்து ஓட்டளிப்பும் தரவேண்டும்) பதவி நீக்கம் நிரூபிக்கப்பட்ட ஒழுக்க நெறி மீறல்  மற்றும் இயலாமையின் காரணமாக அமையும்.
2. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஊதியம், படிகள், சலுகைகள், விடுமுறை, ஓய்வ+தியம் ஆகியவை அவ்வப்போது பாராளுமன்றத்தால் நிர்ணயிக்கப்படும்.
3. அரசியலமைப்புச் சட்டம் ஷரத்து 360-ஐ தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் நீதிபதியை நியமித்த பின் அவர்களது ஊதியத்தையோ அல்லது சலுகையையோ குறைக்க இயலாது.

உச்சநீதிமன்றத்தின் அதிகார வரம்பு

முதலேற்பு அதிகார வரம்பு(Original Jurisdiction)

பின்வரும் வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உண்டு.
1. மத்திய அரசிற்கும், மாநில அரசிற்கும் இடையில் வரும  வழக்குகள்.
2. மத்திய மற்றும் மாநில அரசு ஒருபுறமும் மற்றும் பிற மாநில அரசுகளுக்கு இடையில் வரும் வழக்குகள்.
3. மாநில அரசுகளுக்கு இடையில் எழும் வழக்குகள்.

5 வகையான நீதிப் பேராணைகள்
1. ஆட்கொணர் நீதிப்பேராணைகள்
2. கட்டளை நீதிப்பேராணைகள்
3. தடை நீதிப்பேராணைகள்
4. உரிமை வினா நீதிப்பேராணைகள்
5. தடைமாற்று நீதிப்பேராணைகள்

மேல்முறையிட்டு அதிகார வரம்பு:(Appellate Jurisdiction)

உச்ச நீதிமன்றம் தான் இந்தியாவிலேயே இறுதியான முறையீட்டு நீதிமன்றமாகும். சிவில், குற்றவியல் மற்றும் அரசியலமைப்பு தொடர்பான வழககு;கள் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். அதற்கு உயர்நீதிமன்றத்தின் ஒப்புதலும் தேவை.

நீதீதிமன்றத்தின் மறுசீராய்விற்க்கான அதிகாரங்கள்; (Power of Judicial Review)

அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக ஏதேனும் நடவடிக்கைகள் ஏற்பட்டிருந்தால் அது செல்லாது என அறிவித்து செயல்படாமல் தடுக்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் மேலாண்மை, கூட்டாட்சியின் சமநிலை, குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாத்தல் ஆகியவை அடிப்படை கொள்கைகளின்படி இது செயல்படுகிறது.

மற்ற அதிகாரங்க்கள்:
1. குடியரசுத் துணைத் தலைவரின் தேர்தலில் ஏற்படும் சிக்கல்களை தீர்த்து வைக்கிறது.
2. மத்திய குடிமையாட்சி தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் மீது எழும் புகார்களை குடியரசுத்தலைவர் பரிந்துரைத்த பிறகு அதனை விசாரிக்கிறது.
3. இந்தியாவின் அனைத்து நீதிமன்றங்களும் இது எடுக்கும் நடவடிகைகளுக்கு கட்டுப்படும்.
4. அரசியலமைப்பு சட்டத்தின் பொருள் விளக்கும் அதிகாரம் இதற்கு மட்டுமே உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here