மாநில ஆளுநர் ( உறுப்பு: 152-161)

0
61
state governor-indian polity

மாநில ஆளுநர் ( உறுப்பு: 152-161)

1. இந்திய குடியரசு தலைவர் ஆளுநரை நியமிக்கிறார்.
2. பதவிக்காலம்: 5 ஆண்டுகள்
3. உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி முன்பு பதவி பிரமணம் பெற்றுகொள்கிறார்.
4. பதவிக்காலம் முடியும் முன்பே இவரை ஒரு மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு; குடியரசு தலைவரர் மாற்றவோ அல்லது பதவி நீக்கம் செய்யலாம்.
5. 1956 ல் செய்யப்பட்ட 7 வது அரசமைப்புத் திருத்தத்தின்படி 2 அல்லது அதற்கு மேற்ப்பட்ட மாநிலங்கட்கு ஒரே ஆளுநரை குடியரசுத் தலைவர் நியமிக்கலாம்.
6.ராஜினாமா, மரணம், நீக்கம் ஆகிய ஏதேனும் ஒரு காரணத்தால் ஆளுநர் பதவி காலியானால் குடியரசுத்தலைவர் புதிய ஆளுநரை நியமிக்கும் வரை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தற்காலிக ஆளுநராக பணியாற்றுவார்

தகுதிகள்:-

7. இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
8. 35 வயது நிறம்பியவராக இருத்தல் வேண்டும்
9. நாடாளுமன்றத்திலோ சட்ட மன்றத்திலோ உறுப்பினராக இருத்தல் கூடாது
10. மத்திய மாநில அரசின் எந்த பதவியிலும் ஊதியம் பெறுவராக இருத்தல் கூடாது.
11. ஆளுநராக நியமிக்க படுவர் நியமிக்கபடும் மாநிலத்தை சார்ந்தவராக இருத்தல் கூடாது.

நிர்வாக அதிகாரம்:-
12. சட்டமன்ற மேல் சபையின் ஆறில் ஒரு பங்கு உறுப்பினர்களை நியமனம் செய்ய ஆளுநருக்கு உரிமையளிக்கிறது
13. மாநில அரசின் எல்லா நிர்வாகமும் ஆளுநரின் கையில் உள்ளது இவரது பெயரில் முக்கிய முடிவுகள் எடுக்கபடுகின்றன.
14. மாநில அரசின் முதன் மந்திரி, மாநில சட்ட அதிகாரி, மாநில தேர்தல் ஆணையர் மாநில பொது பணி குழுதலைவர், பல்கலை கழகங்களின் துணை வேந்தர் முதலமைச்சர் ஆலோசனை பெயரில் மற்ற அமைச்சர்கள் ஆகியோரை நியமிக்கிறார்.
15. மாநில அரசின் செயல்பாடுகள் குறித்து குடியரசு தலைவருக்கு அறிக்கை அனுப்புகிறார்.
16. மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி நடைபெறும் போது மாநில நிர்வாகத்தை நேரடியாக மேற்கொள்கிறார்.
17. மாநில சட்ட மேலவை இரண்டாவது அவை உறுப்பினர்களில் 1ஃ6 பங்கு பகுதியினரையும் சட்ட பேரவையில் ஒரு ஆங்கில இந்திய உறுப்பினர் நியமணம் செய்கிறார்.

சட்டமியற்றும் அதிகாரம்:-

18. ஒரு மாநிலத்தை பொறுத்தவரை ஆளுநரின் இசைவில்லாமல் சட்டமாக்கப்பட முடியாது. ஆளுநர் சில மசோதாக்களை குடியரசுத் தலைவரின் இசைவிற்காக ஒதுக்கீடு செய்ய உறுப்பு 200 உரிமையளிக்கிறது.
19. ஆளுநரின் பரிந்துரை இல்லாமல் ஒரு பண மசோதா மாநிலச் சட்டசபையில் அறிமுகப்படுத்த முடியாது.
20. பட்ஜெட் என்று அழைக்கப்படும் வருடாந்திர நிதி அறிக்கையை ஆளுநர் சட்டமன்றத்தின் இரு அவைகளிலோ அல்லது ஒன்றிலோ சமர்ப்பிக்க வேண்டும்.
21. ஆரசின் ஆண்டு வரவு-செலவு திட்டம் ஆளுநரின் அனுமதி பெற்ற பின்னரே சட்ட மன்றத்தில் சமர்பிக்கபடும்.
22. எதிர்பாராத செலவுகளை மேற்கொள்ள சில்லரை செலவு நிதியில் இருந்து நிதி வழங்கிட அரசியல் சட்டம ஆளுநருக்கு அதிகம் வழங்கியுள்ளது.
23. சட்ட பேரவை நடைபெறாத சமயங்களில் சமயங்களில் அவசரச் சட்டத்தை பிறப்பிக்கும் அதிகாரம் உண்டு
24. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மாநில அரசு செயல்படாத நிலையில் அரசியலமைப்பு சட்ட பிரிவு 356யை யுடன் படுத்தி மாநில அரசை கலைத்து விட்டு குடியரசு தலைவர் ஆட்சியை பிரகடனம் செய்யலாம். இப்பொழுது மாநிலத்தின் உண்மையான அதிகாரம் பெற்று திகழ்கிறார். இது குடியரசு தலைவரின் ஆட்சி என்றழைக்கப்படுகிறது.

நீதி வழங்கும் அதிகாரம்:-

25. மரண தண்டனையை தவிர்த்து மற்ற தண்டனைகளை குறைப்பது நிறுத்தி வைப்பது விட்டு கொடுப்பது நிவாரணம் வழங்குவது போன்ற அதிகாரம உடையவர்.
26. தண்டணையை அதிகபடுத்தும் அதிகாரம் இல்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here