மாநில சட்டமன்றம் (உறுப்பு: 168-213)

0
143
Untitled design (5)

மாநில சட்டமன்றம் (உறுப்பு: 168-213)

1. இந்திய மாநிலங்களில் ஒரவை அல்லது ஈரவை கொண்ட மாநில சட்டமன்றங்கள் அமைந்துள்ளன்.
2. ஈரவை கொண்ட மாநிலம்: கர்நாடகம், மகாராஷ்டரம், உத்திர பிரதேசம், ஜம்மு காஷ்மீர்,
3. 1986 நவம்பர் 1 தமிழ்நாட்டில் சட்ட மேலவை ஒழிக்கபட்டது.
4. சட்டமேலவை விட சட்டபேரவை அதிகாரம் மிக்கது.
5. மாநில பட்டியலில் மற்றும் பொது பட்டியல் உள்ள துறைகளுக்கு தேவையான சட்டங்களை இயற்றுகிறது.
6. பாராளுமன்றத்தில் ஒரு மசோதா சட்டமாவதற்கு மேற்கொள்ளபடும் முறையே மாநில சட்ட மன்றங்களிலும் கையாளப்படுகின்றது.

சட்ட கீழவை:
1. மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கபட்ட உறுப்பினர்களை கொண்டு உள்ளது.
2. மக்கள் தொகை அடிப்படையில் உறுப்பினர் எண்ணிக்கை அதிகபட்சம் 500 குறைந்த பட்சம் 60 அமைந்திருக்கும்.
3. தனி தொகுதி:; தாழ்த்தப்பட்டவர்கள் ஆதிதிராவிடர் பழங்குடியினர் சில இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது
4. உறுப்பினராக வயது தகுதி: 25 வயது
5. பதவிகாலம்: 5 ஆண்டுகள்
6. சட்டமன்ற அவைகளின் நடவடிக்கைகளுக்கு அமைச்சர்கள் பொறுப்பாவார்கள.; பொறுப்பில் உள்ள அமைச்சர் சட்ட மன்ற உறுப்பினர்களால் கேட்கபடும் கேள்விக்கு பதில் தர வேண்டும்

சபாநாயகர்:-

7. சட்ட பேரவைக்கு தலைமை வகிப்பவர் : அவை தலைவர் அல்லது சபாநாயகர்
8. சபாநாயகர் துணை சபாநாயகர் சட்ட பேரவை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கபடுகின்றனர்.
9. சபாநாயகர் இல்லாத சமயங்களில் துணை சபாநாயகர் பொறுப்பேற்று நடத்துவார்.

சட்டமேலவை:-

1. உறுப்பினராக வயது தகுதி: 30 வயது
2. பதவிகாலம்: 6 ஆண்டுகள்
3. சட்ட மேலவை உறுப்பினர் எண்ணிக்கை: சட்ட கீழவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 1 / 3 பங்குக்கு மேல் இருக்க கூடாது ஆனால் 40க்கு குறையாமல் இருக்க வேண்டும்.
4. 1/3 பங்கு உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளால் தேர்ந்துஎடுக்கபடுகின்றனர்இ 1/12 உறுப்பினர் மாநில பல்கலை கழக பட்டதாரி, 1/12 உறுப்பினர் ஆசிரியர்களால் நியமனம்இ 1/3 பங்கு சட்ட பேரவையில் தேர்வு செய்ய படுகின்றனர் மற்றும் 1/6 இலக்கியம் கலை அறிவியல் சமூக சேவை போன்ற துறைகளின் சிறப்பு அறிவும் நடமுறை அனுபவமும் உள்ளவர்களை ஆளுநர் நியமனம் செய்கிறார்.
5. மாநிலங்களின் சட்ட மேலவை நிரந்தரமானதாகும். ஆனால் மாநில சட்ட மன்றங்களின் பரிந்துறையின் பேரில் நாடாளுமன்றத்தால் கலைக்க படலாம்.
6. சட்ட மேலவை உறுப்பினர்களின் மூன்றில் ஒரு பகுதியினர் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ஒய்வு பெறுகின்றனர்.
7. இந்த இடங்களுக்கு தேர்தல் மூலமாகவோ ஆளுநரின் நியமனம் மூலமாகவோ அடுத்த 6 ஆண்டு காலத்திற்கு உறுப்பினர் நிரப்ப படுகின்றனர்.
8. மேலவையை மேலவை தலைவர் நடத்துகிறார். மேலவை தலைவர் இல்லாத காலங்களில் துணை தலைவர் நடத்துகிறார். இருவரும் மேலவை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கபடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here