நாடாளுமன்றம் ( உறுப்புகள் 73 -123)

0
161
parliament indian polity

நாடாளுமன்றம் ( உறுப்புகள் 73 -123)

1. குடியரசுத்தலைவர், மாநிலங்களவை மற்றும் மக்களவை என்ற இரண்டு அவைகள் ஆகியவற்றைக் கொண்டதாக இந்திய நாடாளுமன்றம் அமைந்துள்ளது. (உறுப்புகள்: 79)

2. மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் தலைவர் ஒருவரும் துணைத்தலைவர் ஒருவரும் இருக்க வேண்டும் என அரசியலமைப்புக் கூறுகிறது.

மாநிலங்களவை

1. உறுப்பு 80 படி மேல்சபை அமைப்பை கூறுகிறது.
2. துணைக்குடியரசுத்தலைவர் இதன் தலைவர் (உறுப்பு;89)
3. மாநிலங்களவையின் துணைத்தலைவராக தமக்குள்ளேயே ஒருவரை அந்த அவையின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்வர்

4. மாநிலங்கவை உறுப்பினர்கள் அந்தந்த மாநில சட்டமன்ற உறுப்பினார்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
5. மாநிலங்களவைத்துணைத் தலைவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான ஏற்பாடு பிரிவு 90ல் சொல்லப்பட்டு உள்ளது.

6. அரசியலமைப்பின்படி மாநிலங்களவையில் 250 க்கும் மிகாத உறுப்பினர்கள் இருப்பர். இவர்களில்
7. தற்போது உள்ள உறுப்பினர்கள்: 245 (233 + 12)
8. தேர்ந்தெடுக்கப்படுவோர்: 238

9. குடியரசுத்தலைவரால் நியமனம் செய்யப்படுவோர்: 12
10. அதிகபட்ச உறுப்பினர் கொண்ட மாநிலம்: உத்திர பிரதேசம் (31)
11. மணிப்பூர், மிஜோரம், சிக்கம், திரிபுரா போன்ற சிறிய மாநிலங்களில் இருந்து தலா ஒரு உறுப்பினரும் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

12. தமிழ்நாட்டு மாநிலங்கவை உறுப்பினர்கள்: 18
13. மாநிலங்களவையை கலைக்க முடியாது.
14. அவையில் பணமசோதாவைத் தவிர எந்த மசோதவையும் கொண்டு வரலாம். 14 நாட்களுக்குள் 2 வாரத்துக்குள் தனது பரிந்துரையை வேண்டுமேயானால் தெரிவிக்கலாம்.

தகுதி

1. இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
2. 30 வயது நிரமியவராக இருக்க வேண்டும்
3. பதவிக்காலம் 6 வருடங்கள்.
4. ஒவ்வொரு 2 வருடத்திற்கு ஒருமுறை மூன்றில் ஒருபங்கு உறுப்பினர்கள் ஓய்வு பெறுகிறார்கள். மாநிலங்கவை அமைச்சர்களை நம்பிக்கை இல்லா தீர்மானம் விலக்க இயலாது.

அதிகாரங்கள்:

5. அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்வதில் மாநில சபையின் ஒப்புதல் அவசியம் தேவை. திருத்தம் ஒன்றை மாநில சபை ஏற்கவில்லையென்றால் இரு சபைகளின் இணைப்புக் கூட்டத்தை குடியரசுத் தலைவர் கூட்டி பெரும்பான்மை ஆதரவுடன் திருத்தம் நிறைவேற்றப்படும்.
6. புதிய இந்தியா ஆட்சித் துறைப் பணியை (யுடட ஐனெயை ளுநசஎiஉந) ஏற்படுத்த வேண்டுமென்று மாநில சபைதான் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். (உறுப்பு-312)

7. நாட்டின் நலனுக்கானது என்ற காரணத்திற்காக மாநில அதிகாரம் பட்டியலிலுள்ள ஒரு பொருளைப் பற்றி மத்திய பாராளுமன்றம் சட்டம் இயற்றலாம் என்று மாநிலங்கள் சபை தீர்மானம் செய்ய அதிகாரதம் உண்டு (உறுப்பு-249)
8. மேல்சபை சாதாரண மசோதாவை 6 மாதம் காலத்திற்கு மட்டுமே நிறுத்தி வைக்க முடியும்.குடியரசுத் துணைத்தலைவருக்கான பதவிநீக்கத்திற்கான தீர்மானம் இங்கு மட்டுமே நிறைவேற்ற இயலும்.

மக்களவை
1. 1952 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ம் தேதி முதல் கூட்டம் நடைபபெற்றது.
2. மக்களவையின் தலைவரையும் (சபாநாயகர்) துணைத்தலைவரையும் (துணை சபாநாயகர்) தமக்குள்ளேயே அந்த அவையின் உறுப்பினர்களே தேர்ந்தெடுப்பர்.
3. மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டது. 18 வயது நிரம்பிய இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும், சட்டத்தின்படி தகுதியிழப்புச் செய்யப்படாத பட்சத்தில் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்றவராவார்.
4. மாநிலங்களில் உள்ள தொகுதிகளில் இருந்து நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் 530 க்கு மிகாமலும் நேரடி ஆட்சிப்பகுதிகளில் இருந்து நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள்
5. தேர்ந்தெடுக்கப்படுவோர்: 543 (மாநிலம் -530; யூனியன் பிரதேசம் -13)
6. குடியரசுத்தலைவரால் நியமனம் செய்யப்படுவோர்: 2( ஆங்கிலோ இந்தியர்)
7. அதிகபட்ச உறுப்பினர் கொண்ட மாநிலம்: உத்திர பிரதேசம் (80)
8. தமிழ்நாட்டு மாநிலங்கவை உறுப்பினர்கள்: 39

தகுதி
9. இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
10. 25 வயது நிரமியவராக இருக்க வேண்டும்
11. பதவிக்காலம் 5 வருடங்கள்.

மக்களவைக்குரிய சிறப்பு அதிகாரங்கள்
1. பண மசோதா லோக்சபாவில் மட்டுமே அறிமுகப்படுத்த இயலும்.
2. இராஜ்யசபாவானது பட்ஜெட்டை பற்றி விவாதிக்க மட்டுமே இயலும் மாறாக மானிய கோரிக்கை மீது வாக்கு அளிக்க இயலாது. இது லோக்சபாவிற்கு மட்டுமே உரியது.`
3. தேசிய நெருக்கடியை மீண்டும் திரும்ப பெறுவதற்கன தீர்மானம் மக்களவில் மட்டும் இயற்ற இயலும்.
4. இராஜ்யசபாவின் அமைச்சர்களை நம்பிக்கைல்லா தீர்மானம் விலக்க இயலாது. ஏனெனில் அமைச்சரவையானது முழுமையாக லோக்சபாவிற்கே பொறுப்பாகும்

உரிமைகள்;

5. பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் நேரத்திலும், கூட்டத் தொடருக்கு முன்பும், பின்பும் 40 நாட்களில் உறுப்பினராக கைது செய்தால் கூடாது.

6. உறுப்பினர் நாடாளுமன்றத்தின் எல்லைக்குள் இருக்கும்போது அவை தலைமை தாங்குபவரின் அனுமதியின்றி கைது செடீநுயவோ அல்லது பிற நடடிக்கைகளை எடுக்க இயலாது.

7. நாடாளுமன்றத்தில் மட்டும் அவர்கள் விருப்படி பேச அதாவது பேச்சுரிமை வழங்கப்பட்டுள்ளது. அதற்காக நீதிமின்றங்களில் பதில் சொல்ல தேவையில்லை.

உறுப்பினராவதற்கு தகுதியில்லாதவர்கள்
1. இந்திய குடிமகனாக இல்லாதவர்
2. நீதிமன்றத்தால் இரண்டாண்டுகளுக்கு குறையாமல் தண்டனை பெற்றவர்.
3. துரோகம் மற்றும் லஞ்ச ஊழல் செய்து அரசு பணியிலிருந்து நீக்கப்பட்டவர்.
4. தேர்தல் செலவுகளை குறித்த காலத்திலும் குறித்த வகையிலும் சமர்ப்பிக்காதவர்
5. திவால் ஆனவரும், மனநல்ம் பாதித்தவரும்
6. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளில் ஊதியம் பெறும் வேலை பார்பவர்.
7. தேர்தல் குற்றங்களுக்காகக் தண்டிக்கப்பட்டவர்கள்

கூட்டத்தொடர் மற்றும் மசோதா
1. ஒரு கூட்டத்தொடருக்கும் இன்னொரு கூட்டத் தொடருக்கும் இடையே ஆறுமாத கால இடைவெளி இருக்கக்கூடாது. பொதுவாக ஒவ்வொராண்டும் மூன்று நாடாளுமன்றத்தில் கூட்டங்கள் நடைபெறும் அவை
பட்ஜெட் கூட்டத்தொடர் (பிப்ரவரி.மே)
மழைக்காலக் கூட்டத்தொடர் (ஜுலை, செப்டம்பர்)
குளிர்காலக் கூட்டத்தொடர் (நவம்பர், டிசம்பர்)

2. மாநிலங்களவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மட்டும் மூன்று-நான்கு வாரகால இடைவெளியுடன் இரண்டு பகுதிகளாக நடைபெற்று ஒராண்டில ; நான்கு கூட்டத்தொடர்களாக நடைபெறும்.

3. எந்த ஓர் அவையானாலும் அதனை நடத்திச் செல்வதற்கு அவையின ; மொத்த உறுப்பினர்களில் பத்த்தில் ஒரு பங்ககு உறுப்ப்பினர்க்கள் கட்ட்டாயம் ஆஜாராகி இருக்க்க வேண்டும்
4. பண மசோதாக்கள் மற்றும் ஏனைய நிதி மசோதாக்கள் தவிர வேறு எந்த மசோதாவானாலும் அதனை ஏதேனும் ஒர் அவையில் முதலில் அறிமுகப்படுத்தலாம்.
5. அவ்வாறு அறிமுகப்படுத்தப்படும் மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் முன்னர் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் திருத்தங்கள் ஏதுமின்றியோ இரண்டு அவைகளும் ஒப்புக்கொண்ட திருத்தங்களுடனோ, ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
6. பண மசோதாவைத் தவிர ஏதேனும் ஒரு மசோதா சம்பந்தமாக இரணடு; அவைகளுக்கும் இறுதியாகக் கருத்து வேறுபாடுகள் இருக்குமானால் அவற்றைத் தீர்ப்பதற்காகக் குடியரசுத் தலைவர் இரண்டு அவைகளில் கூட்டுத் கூட்டத்தை அழைக்கலாம்.
பண மசோதா
1. ஒரு மசோதா பணமசோதாவா என்ற ஐயம் தோன்றினால், அதில் மக்க்களவைத் தலைவரின் தீர்ப்பே இறுதியானது.
2. பணம்சோதாவைக் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பும்போது, ஆத ஒரு பணமசோதா என்று மக்களவை தலைவர் சான்றளிக்க வேண்டும்.
3. பணமசோதோவைக் குடியரசுத்தலைவரின் பரிந்துரையின் பேரில். மக்க்களவையில் மட்டுமே அறிமுகப்ப்படுத்த்த முடியும்
4. மக்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் மாநிலங்களவைக்கு அனுப்பப்படும் பணமசோதாவின் மீது ஏதேனும் திருத்தங்களுக்கான பரிந்துரைகள் இருக்குமானால் அவற்றை 14 நாட்களுக்குள் மாநிலங்களவை
5. மக்களவை ஏதேனும் ஒரு திருத்தத்தையோ, திருத்தங்கள் அனைத்தையுமோ நிராகரித்துவிடலாம். திருத்தங்களை மக்களவை ஏற்றுக் கொணட் படியே இரண்டு அவைகளும் அந்த மசோதாவை ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படும்.
6. மாநிலங்களவையில் இருந்து 14 நாட்களுக்குள் அந்த மசோதா திருப்பி அனுப்பாவிட்டாலும், மக்களவை ஏற்றுக்கொண்ட வடிவத்திலேயே அந்த மசோதா இரண்டு அவைகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கருதப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here