பஞ்சாயத்து மற்றும் நகராட்சி மன்றம்

0
143
panchayat raj indian polity study material

 

பஞ்சாயத்து மற்றும் நகராட்சி மன்றம்

1. இந்தியாவில உள்ளாட்சி முறை சோழர்கால நிர்வாகத்தில்மிகவும் சிறப்புற்றிருந்தது.
2. சோழர்காலத்தில் கிராம மன்றங்களுக்கான உறுப்பினர்கள் குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டதை உத்திரமேரூர் கல்வெட்டு குறிப்பிடகிறது.
3. இந்தியாவில் பிரிட்டிஸ் காலத்தில் ரிப்பன் பிரவு உள்ளாட்சி மன்றங்களை ஏற்படுத்தினார்
4. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 40 வது உறுப்ப பங்சாயத்து அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றது.

பஞ்சாயத்து ராஜ் அமைப்பு:

பஞ்சாயத்து ராஜ் அமைப்பு முறை என்பது தன்னாட்சி அரசு முறையின் முக்கியமான அமைப்பாகும். இது 1992-ல் அரசியலமைப்பு திருத்தம் (73 rd constitutional amendment of 1992)மூலம் அரசமைப்பில் சேர்க்கப்பட்டது. இது உறுப்பு 40-க்கும் செயல்வடிவம் கொடுத்தது. இந்தியாவில முதன் முதலில் ‘1956-ல் பல்வந்தராய் மேத்தா” தலைமையில் குழு  அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள்.
1. மூன்றடுக்கு பஞ்சாயத்து ராஜ் முறை – கிராம அளவில் கிராம பஞ்சாயத்து வட்டார அளவில் பஞ்சாயத்து சமிதி மற்றும் மாவட்ட அளவில் ஜில்லா பரிஷத்.
2. அனைத்து திட்டமிடல் மற்றும் வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைகளை இவற்றின் மூலம் நடைபெற வேண்டும்.
3. அதிகாரம் மற்றும் பொறுப்பு மாற்றம் நேர்மையான முறையில் நடைபெற வேண்டும்.
4. பணிகள் மற்றும் பொறுப்புகளை செய்வதற்கு போதிய அளவில் நிதி ஆதாரம் அளிக்கப்பட வேண்டும். இவையனைத்து பரிந்துரைகளும் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பஞ்சாயத்து ராஜ் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
5. முதலில் ‘ராஜஸ்தான் மாநிலம”;  இதனை ஏற்று நடைமுறைப்படுத்தியது.
6. தேன்னிந்தியாவில் ஆந்திராவில் பஞ்சாயத்து முறை ஆரம்பிக்கப்பட்டது.

1977-ல் அசோக் மேத்தா குழு” அமைக்கப்பட்டது. இது நடைமுறையில் இருக்கும் அமைப்பின் பணிகளையும் மேலும் சிறப்பாக நடைமுறைப்படுத்த பரிந்துரை செய்தது. அவற்றில் சில
1. மூன்றடுக்கு முறை மாற்றியமைக்கப்பட்டு இரண்டடுக்கு முறையாக  மாற்ற வேண்டும்.
2. ஜில்லா பரிஷத் , மாவட்ட அளவிலும், அதற்கு கீழ் மண்டல பஞ்சாயத்து . இது15000 முதல் 20000 வரை மக்கள் தொகை கொண்டுள்ள கிராமங்களில் ஏற்படுத்த வேண்டும்.
3. ஜனதா அரசாங்கம் கவிழ்ந்ததனால் இந்த பரிந்துறையின் மேல ; எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. 1991-ல் காங்கிரஸ் அரசாங்கம் இதற்கு அரசியலமைப்பு அந்தஸ்து கொடுத்தது. 73-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் மூலம் நிறைவேற்றப்பட்டது.

73-வது சட்ட்டத்த்திருத்த்தச் சட்ட்டம் -1992:

இந்தச் சட்டடம் உறுப்பு 243 முதல் 243 (ஓ) மற்றும் புதிய பகுதி 9- யை 11-வது அட்டவணையில் சேர்ந்துள்ளது. இந்தச்சட்டம் பஞ்சாயத்து ராஜ் அமைப்பிற்கு அரசிலமைப்புப் அந்தஸ்து வழங்கியுள்ளது. மேலும் மாநிலங்கள ; இவ்வமைப்பை ஏற்படுத்துவது கட்டாயமாக்கியும் உள்ளது. இந்தச் சட்டம் ஜம்மு-காஷ்மீர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து மற்றும் அட்டவணையில் உள்ள பகுதிகள் சிலவற்றிலும் இதனை நடைமுறைப்படுத்த முடியாது. இச்சட்டம் பஞ்சாயத்து அமைப்புகளில் மூன்றடுக்கு அமைப்பை கொடுத்துள்ளது.
1. 73வது திருத்தச் சட்டம் பஞ்சாயத்துக்களுக்கும் 74வது திருத்தச்சட்டம் நகராட்சிகளுக்கும் அரசியலமைப்பு ரீதியான அங்கீகாரம் வழங்குகின்றன.
2. பஞ்சாயத்து அமைப்புகள் சட்டம் இயற்றக்கூடிய துறைகள் எண்ணிக்கை: 29 (11 வது அட்டவணையில் வரையறுக்கப்பட்டுள்ளது)
3. பஞ்சாயத்துக்கள் நகராட்சிகளை நிறுவுவதற்காக ஏற்ற சட்டங்களை இயற்றும் அதிகாரம் மாநில சட்டமியற்றும் அவைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
4. ஒரு பஞ்சாயத்து கலைக்கப்பட்டால், ஆறு மாதங்களுக்குள் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும்.
5. பஞ்சாயத்துத் தேர்தல்களை நடத்துவதற்காக ஒவ்வொரு மாநிலதத்pலும் மாநில தேர்தல் ஆணையர் ஒருவர் இருப்பார்.
6. பஞ்சாயத்துக்களின் பொருளாதார நிலைமையைப் பற்றிக் கவனிக்க ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாநில நிதி ஆணையம் அமைக்கப்படும.;

நகராட்சிகள் (Municipalities)
1. நகர தன்னாட்சி அரசாங்கத்தின் அங்கம் நகராட்சி ஆகும். 74-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் 1992-ல் இயற்றப்பட்டு அதன் மூலம் பகுதி IXA- வானது அரசமைப்பில் புதிததாக சேர்க்கப்பட்டது. அதில் ஷரத்து 243-p முதல் 243 ZG வரை இணைக்கப்பட்டது.
2. நகராட்சி அமைப்புகள் சட்டம் இயற்றக்கூடிய துறைகள் எண்ணிக்கை: 18 (12 வது அட்டவணையில் வரையறுக்கப்பட்டுள்ளது)
3. இச்சட்டத்தின் படி நகராட்சி உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பபடுகிறார்கள்.
4. மாநில சட்டமன்றமானது நகராட்சி தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறையை அளிக்கும்.
5. வார்டு குழுக்களை  அமைக்க வேண்டும். நகராட்சி நிலப்பபகுதியை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வார்டுகளாக பிரிக்க வேண்டும். அவ்வாறு பிரிக்கப்படும் போது அந்த நகராட்சி நிலப்பகுதியின் மக்கள் தொகை 3 இலட்சம ; அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
6. இச்சட்டம் மாவட்ட திட்டக் குழுவை அமைக்க வழிவகை செய்கின்றது. இது வளர்ச்சிக்கான திட்டத்தினை மாவட்ட முழுவதும் நடைமுறைப்படுத்துகின்றது.
7. மேலும் பகுதி IX ல் கூறியதுபோல் காலம், தகுதி, தேர்தல், அதிகாரம் , பணிகள், நிதி போன்றவை அனைத்து பகுதி IXA-வில் அடங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here