உயர் நீதிமன்றம்( உறுப்பு: 214-235)

0
156
high court indian polity study material

 

உயர் நீதிமன்றம் (HIGH COURT)

( உறுப்பு: 214-235)

1. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு உயர்நீதி மன்றம் இருக்கும் ( உறுப்பு 214)
2. ஒரு மாநிலத்தின் நீத்த்துறை உயர்நீதி மன்றத்தினையும் கீழ் நீதிமன்றங்களையும் உள்ளடக்கியதாகும்.
3. ஒன்றுக்கு மேற்ப்பட்ட மாநிலங்களுக்கு சேர்த்து பொதுவான நீதிமன்றத்தை அமைக்கலாம் ;.(உறுப்பு 231)
4. ஒவ்வொரு உயர்நீதிமன்றமும் ஒரு மதிப்புறு நீதிமன்றமாகும்.(உறுப்பு 215)
5. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை பற்றி இந்திய அரசியலமைப்புச் சட்டம் எதுவும் குறிப்பிடவில்லை. அதை குடியரசுத் தலைவரின் விருப்புரிமைக்கு விட்டுவிட்டது. ஆகையால், குடியரசுத்தலைவர் நேரத்திற்கு நேரம் தகுந்தபடி நீதிபதிகளின் எண்ணிக்கையை முடிவு செய்துகொள்வார்.

நீதிபதிகளின் தகுதிகள்: 
1. இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
2. இந்திய நிலப்பகுதியில் குறைந்தபட்சம் 10 வருடங்களுக்காவது; நீதித்துறை சார்நத பதவியில் இருந்து இருக்க வேண்டும்.
3. உயர்நீதிமன்றதத்ல் குறைந்தது பத்தாண்டுகளுக்காவது வழக்கறிஞராக (அல்லது உயர்நீதிமன்றங்களின் வழக்கறிஞராக )இருத்தல் வேண்டும்.
4. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு என்ற குறைந்த பட்ச வயது நிர்ணயிக்கவில்லை.

நீதிபதியை மாற்றுதல் மற்றும் பதவி நீக்கம்

1. கொலீஜீஜியம் முறை:கொலீஜியம் முறை என்பது உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் மற்றும் மாறுதல் போன்ற நடவடிக்கைகளை செய்யும் அமைப்பு ஆகும். இந்திய தலைமை நீதிபதி, நான்கு மூத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மூன்று உறுப்பினர்கள். உயர்நீதிமன்றம் சார்பாக(உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட) இவர்கள் அனைவரையும் உள்ளடக்கியது கொலீஜியம் ஆகும்.
2. ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியினை அவருடைய அனுமதி இல்லாமலேயே குடியரசுத் தலைவர் ஒரு உயர் நீதி மன்றத்திலிருந்து மற்றொன்றுக்கு மாற்றலாம்.( உறுப்பு 222)
3. இதற்கு இந்திய தலைமை நீதிபதிகளை முழுமையாக கலந்தாலோசிக்க வேண்டும்.
4. இந்திய தலைமை நீதிபதியி கருத்தினை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் மேலும் அவரது கருத்து குடியரசுத் தலைவரைக் கட்டுப்படுத்தும்.

உயர்நீதிமன்ற்த்தின் அதிகாரம்

அசல் அதிகார வரம்பு:
கீழ்க்காணும் சச்சரவுகள் உயர்நீதிமன்றத்தின் அசல் அதிகார வரம்பு கீழ்நேரடியாக வரும்.
1. திருமணம், விவாகரத்து, நிறுவன சட்டங்கள் மற்றும் நீதிமனற் அவமதிப்பு.
2. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் தேர்தல் சம்பந்தமான சச்சரவுகள்.
3. வருவாய் வசூலிப்பு சம்பந்தமான வழக்குகள்.
4. குடிமக்களின் அடிப்படை உரிமைகள்.
5. கல்கத்தா, மெட்ராஸ், பம்பாய் மற்றும் டெல்லி ஆகிய நான்கு உயர்நீதி மன்றங்களும் உரிமையியல் வழக்குகளில் அசல் அதிகார வரம்பு உள்ளது.

அடிப்படை உரிமைகளை காத்தல் ((Writ Jurisdiction)
1. உறுப்பு 226- உயர்நீதிமன்றத்தின் நீதிப்பேராணை பற்றி கூறுகின்றது. இவை ஆட்கொணர்வு நீதிப்பேராணை, செயலுறுத்தும் நீதிப்பேராணை, தடையுறுத்தல் நீதிப்பேராணை, தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை மற்றும் நெறிமுறை உணர்த்தும் நீதிப்பேராணை. இது பாதிக்கப்பட்ட அடிப்படை உரிமையை நிலைநாட்டும் பொருட்டு உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here