முதலமைச்சர் மற்றும் மாநில அமைச்சர்கள் (உறுப்புகள்: 163-167)

0
72
chief ministers-indian polity

முதலமைச்சர் மற்றும் மாநில அமைச்சர்கள் (உறுப்புகள்: 163-167)

முதலமைச்சர்
1. மாநிலத்தின் ஆட்சிதுறையில் ஆளுநருக்கு உதவ ஒர் அமைச்சரவை இருக்கலாம் என்பரை அரசியலமைப்பின் 163 வது உறுப்பு கூறுகிறது.
2. மாநில அமைச்சரவவையின் தலைவராகத் திகழ்பவர் மாநில முதலமைச்சர் ஆவார்
3. அரசியலமைப்பு சட்டம் 164-வது உறுப்பின்படி மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மை கொண்ட கட்சியின் தலைவரை முதலமைச்சராகவும் அவரது ஆலோசனை பெயரில் மற்ற அமைச்சர்களையும் ஆளுநர் நியமிக்கிறார்.
4. முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையே உண்மையான நிருவாக பொருப்பினை பெற்று இருக்கிறது இந்த அமைச்சரவை மாநில சட்ட பேரவைக்கு பொறுப்பானதாகும்.

நியமனமும் நீக்கமும்:
1. மாநில முதலமைச்சர் ஆளுநரால் நியமிக்க படுகிறார்
2. சட்டபேரவையில் எந்த கட்சி அல்லது எந்த அணி பெரும்பான்மை பெற்று உள்ளதோ அந்த கட்சியின் தலைவர் அல்லது அந்த அணியின் தலைவரை ஆளுநர் முதலமைச்சராக நியமிக்கிறார்
3. எந்த ஒரு கட்சியும் அல்லது எந்த ஒரு அணியும் சட்ட சபையில் அறையிறுதி பெரும்பான்மை அல்லுது இறுதிபெரும்பான்மை பெறவில்லை எனில் சட்ட சபையின் தனி பெரும் கட்சி தலைவருக்கு அமைச்சரவை அமைக்குமாறு அழைப்பு விடுக்கலாம்
4. ஆளுநர் குறிப்பிடும் கால அளவுக்குள் தனக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை நிருபிக்க வேண்டும்
5. முதலமைச்சர் பதவி விலகல் ஒட்டு மொத்த அமைச்சரவை விலக்கல் ஆகும்
6. பதவி காலம் 5 ஆண்டுகள்
7. அமைச்சராக நியமிக்கப்படுவர் மாநிலச்சட்டமன்றத்தில் உறுப்பனராக இருக்க வேண்டும்.

முதலமைச்சர் பணிகளும் அதிகாரங்களும்:-

1. அமைச்சரவவைக் கூட்டங்களுக்கு முதலமைச்சர் தலைமை தாங்குகிறார்.
2. அமைச்சர்களுக்கு துறையை ஒதுக்கீடு செய்வது
3. ஆளுநர் அறிக்கையின்படி துறைகளை அமைச்சர்களுக்கு மாற்றம் செய்வது.
4. பதவி காலம் முடியும் முன்பே சட்ட பேரவையை கலைக்க ஆளுநருக்கு அறிவுறுத்துவது.

அமைச்சரவை:

5. அமைச்சரவை மாநில சட்டமன்றதிற்கு பொறுப்புடையதாகும்
6. அனைத்து உறுப்பினர்களும் மாநில சட்டமன்றத்தில் உறுப்பினராய் இருத்தல் வேண்டும்
7. நியமிக்கப்படும் போது ஒர் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினராக இல்லாவிடில் நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும்.
8. முதலமைச்சர் பதவியில் இருக்கும் வரை அமைச்சரவை பதவி நீடிக்கும்
9. அமைச்சரவை பல சட்டமுன்வரைவுகளை உருவாக்குதல்
10. அமைச்சர்கள் சட்டமன்றக் கூட்டத்திற்கு வருகை தந்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்கள்.
11. அவசரச் சட்டங்களை உருவாக்கி அவற்றின் மீது ஆளுநருக்கு ஆலோசனை வழங்குகிறது.
12. குற்ற மன்னிப்பு தண்டனை குறைப்பு போன்ற நீதித்துறை விவகாரங்களிலும்; கீழ்மட்டத்திலுள்ள நீதித்துறைப் பணிகள் பற்றிய நியமனம் பதவி உயர்வு, மற்ற விவகாரங்கள் ஆகியவற்றிலும் அமைச்சரவை ஆளுநருக்கு ஆலோசனை கூறலாம்
13. முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்ற மாநில அமைச்சரவை முழுவதும் பதவி விலக வேண்டும். இது ஒட்டு மொத்த பொறுப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here