சமயப் பொதுமைச் சான்றோர்கள் – திரு.வி.க 

0
73
tamil study material 42

சமயப் பொதுமைச் சான்றோர்கள்

திரு.வி.க 

1. திரு.வி.கா – திருவாரூர் விருத்தாசலனார் மகன் கலியாணசுந்தரனார்

2. பிறந்த ஊர்: செங்கல்பட்டு மாவட்டம் ( துள்ளம்)

3. காலம்: 26.08.1883 – 17.09.1953

4. கல்வி:
· யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளையின் தமிழ் மாணாக்கர்
· மறைமலையடிகளிடம் இலக்கியமும் மயிலை மகாவித்துவான் தணிகாசல்                 முதலியாரிடமும் சித்தாந்த சாத்திரமும் பயின்றார்

5. பணி: வெஸ்லி கல்லூhயில் தமிழாசிரியாராக பணியாற்றினார்

6. இதழ்ப்பணி: தேசபக்தன், நவசக்தி

7. முதன்முதலாக சென்னையில் தொழிலாளர் சங்கத்தை நிறுவி தொழிலாளார்களுக்காக பாடுப்பட்டார்

8. தமிழ் மேடைப் பேச்சின் தந்தை என்று பாரட்டப்படுகிறார்

9. இளைஞர்களுக்குத் தமிழுணர்வூட்டும் நோக்கில், “இளைஞர்களே! உங்கள் தமிழ்த்தாய் நேற்றுப் பிறந்தவள் அல்லள்; இன்று பிறந்தவள் அல்லள். அவள் மிகத் தொன்மையுடையவள்; கலைகளையுடையவள். அவளையா கொல்வது? தாயைக்கொலை புரிவதா தமிழர் வீரம்? வீரத்துக்குரிய தங்கள் இளமுகம் நோக்கிக் கேட்கின்றேன். நேற்றும் இன்றும் பிறந்த நாடுகளையும் கலைகளையும் ஓம்பவும் பெருக்கவும் அவ்வந்நாட்டார் முயன்று வருகின்றனர். நாமோ, பழம்பெருநாட்டை மறைக்கப் பார்க்கின்றோம். தமிழ் இறந்தபின் தமிழ்மண் மட்டுமிருந்தென்ன? மொழி இறந்துபடின் நாடும் இறந்துபடுமன்றோ? உலகிற்கே ஒருபோது நாகரிகத்தை வழங்கிய மாண்பு வாய்ந்த ஒரு பெரும் நாட்டையா மறப்பது? அதனையா மறைப்பது?

10. “இளைஞர்களே! தமிழுலகின் இழிந்தநிலையை ஓருங்கள்; ஓர்ந்து (எண்ணி) உங்கள் பொறுப்பை உணருங்கள்; தமிழ்த்தாயைப் புதுப்போர்வையில் ஒப்பனை செய்து அரியாசனத்தமர்த்த சூள்கொண்டெழுங்கள், எழுங்கள்; பழந்தமிழ் வீரத்துடன் எழுங்கள்”” என்று அறைகூவல் விடுப்பார்.

இயற்றிய நூல்கள்:

இவரது சொற்பொழிவுகளெல்லாம் தமிழ்த் தென்றல் எனவும் இவரது பத்திரிகைத் தலையங்கங்கள் பலவும் தமிழ்ச்சோலை எனவும் இவரது சொற்பொழிவுகள் மேடைத்தமிழ் எனவும் செய்யுள் நூல்கள் அருள் வேட்டல் எனவும் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன.

உரைநடை நூல்கள்: முருகன் அல்லது அழகு, சைவத்திறவு, சைவத்தின் சமரசம், கடவுட் காட்சியும் தாயுமானவரும், இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம், தமிழ்நாடும் நம்மாடிநவாரும், நாயன்மார் வரலாறு, தமிழ்நூல்களில் பௌத்தம், காதலா? முடியா? சீர்திருத்தமா?, என் கடன் பணிசெய்து கிடப்பதே, இந்தியாவும் விடுதலையும், தமிழ்ச்சோலை, உள்ளொளி என்பன இவர் இயற்றிய இன்னபிற உரைநடை நூல்கள்.

செய்யுள் நூல்கள் : முருகன் அருள்வேட்டல், திருமால் அருள்வேட்டல், கிறித்துவின் அருள்வேட்டல், அருகன் அருள்வேட்டல், உரிமை வேட்டல், பொதுமை வேட்டல், பொருளும் அருளும் அல்லது மார்க்சியமும் காந்தியமும் ஆகியன இவரது

எழுபது வயதாகி உடல்தளர்ந்து படுக்கையில் இருந்தபோதும் வளர்ச்சியும் வாடிநவும் அல்லது படுக்கைப் பிதற்றல் என்னும் நூலை மு. வரதராசனாரின் உதவியுடன் வெளியிட்டார்.

8. மணமுடித்த ஆறே ஆண்டுகளில் அவர்தம் மனைவி கமலாம்பிகை அம்மையாரைஇழந்தார். தனிமையில் வாடிநந்துவந்த அவரிடம் நண்பர் ஒருவர், ‘மனைவியை இழந்து தனிமையில் வாடிநவது கடினமாக இல்லையா?’ எனக் கேட்டார். அதற்கு, நான் தனியாக வாழவில்லை; தமிழோடு வாடிநகிறேன் எனக் கூறினார்.

9. உரைநடை எழுதுவது எனது தொழில் என்னும் அளவிற்கு உரைநடைக்கு அவர் மதிப்புக் கொடுத்தார். அவருக்கு வாடீநுத்த மொழிநடை மலை எனத் தமிழுலகில் ஓங்கி உயர்ந்துள்ளது என்பார் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்.

9. பேனா மன்னருக்கு மன்னன். ஆவா; சிறந்த பக்தன். அவர் சாகவில்லை. ஏனெனில் பக்தனைக் கண்டு சாவுதான் செத்துப் போகிறது. அவர் வாழ்ந்து வந்த “ புதுப்பேட்டை விலாசம் தான் மாறியிருக்கிறது. புது விலாசம் மக்கள் உள்ளம் என்று கூறியவர்- பி.ஸ்ரீ

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here