பதினென் கீழ்க்கணக்கு நூல்கள்: திருக்குறள்- நாலடியார்-நான்மணிக்கடிகை

0
152
tamil study material 3

பதினென் கீழ்க்கணக்கு நூல்கள்

திருக்குறள்
1. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
2. இயற்றியவர் திருவள்ளுவர்
3. திருவள்ளுவரின் வேறு பெயர்கள்– செந்நாப்போதார், தெய்வப்புலவர், நாயனார்
4. கி.மு. 31-ஐ தொடக்கமாககக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
5. முப்பால்: அவை 1. அறத்துப்பால், 2. பொருட்பால், 3. இன்பத்துப்பால்.
6. 2 அடி குறள் வெண்பாக்களால் ஆனது
7. 133 அதிகாரம் 1330 பாடல்கள் (அறம்-38 அதிகாரம், பொருள்-70 அதிகாரம், இன்பம்-25 அதிகாரம்)
8. உலக மொழிகளில் 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
9. மலையத்துவான் மகன் ஞானப்பிரகாசம் 1812-ல் திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டார்.
10. திருக்குறளுக்கு வழங்கும் சிறப்புப்பெயர்கள்-– உலகப்பொதுமறை, முப்பால், வாயுறை வாழ்த்து, பொதுமறை, பொய்யா மொழி, தெய்வ நூல், தமிழ் மறை, முது மொழி, உத்தர வேதம், திருவள்ளுவம்.
11. திருக்குறளை போற்றி புகழ்ந்து பாடும் நூல்: திருவள்ளுவமாலை.
12. உரை எழுதிய பதின்மர்-– தருமர், தாமத்தர், பரிதி, திருமலையர், பரிப்பெருமாள், மணக்கறவர், நச்சர், பரிமேலழகர், மல்லர், காளிங்கர். பரிமேலழகர் வரை சிறப்பு வாய்ந்தது

நாலடியார்

• பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்து நாலடியார் போற்றப்படுகிறது.
• சமண முனிவர்கள் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும்.

தொகுத்தவர்: ‘பதுமனார்’
உரை எழுதியவர்: தருமர், பதுமனார்

• நாலடியாரின் உரைகளை உள்ளடக்கயது-நாலடியார் உரைவளம் என்னும் நூல்
• 12 இயல்கள் – 40 அதிகாரம்- 400 வெண்பா
• அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என முப்பாலகப் பகுக்கப்பட்டுள்ளது.

• அறக்கருத்துக்களைக் கூறும் 400 பாடல்களைக் கொண்டுள்ளதால இந்நூலுக்கு ‘நாலடி நானூறு’ என்னும் சிறப்புப் பெயரும் உண்டு.
• நான்கடி கொண்ட வெண்பாக்களால் ஆனதால் நாலடி என்று கூறி,’ஆர்’ விகுதி சேர்த்து ‘நாலடியார்’ என இந்நூலக்கு பெயர் வழங்கிற்று.
• வேளாண்வேதம் எனவும் குறிக்கப்படுகிறது.
‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி,
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி’
‘பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்’ என்ற பழமொழிகள் இதன் பெருமையைப் குறிப்பன.

• டாக்டர் ஜி.யு.போப் இந்நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
• தஞ்சையை ஆண்ட பெருமுத்தரையர்களைப் பற்றி இந்நூலில் வரும் குறிப்பக் கொண்டு இதன் காலம் கி.பி.7ம்; நூற்றாண்டு என்பார் எஸ்.வையாபுரிப் பிள்ளை.

மேற்கோள்
நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்
சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய்விளைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்பு

நான்மணிக்கடிகை

• ஆசிரியர் ; விளம்பிநாகனார் (கி.பி 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது டி.வி.சதாசிவப்பண்டாரத்தார் கருத்து)

• இவர் விளம்பி என்னும் ஊரை சேர்ந்தவர்

• கடவுள் வாழ்த்து பாடலை கொண்டு இவர் வைணவர் என்று கருதப்படுகிறது.

• கடிகை என்றால் அணிகலன் (நகை) நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன் பொருள்

• ஒவ்வொரு பாட்டிலும் நான்கு மணிபோன்ற அறக்கருத்துக்கள் வர 104 வெண்பாக்களால் பாடப்பட்டதால் இது நான்மணிக்கடிகை எனப்பட்டது.

• இந்நூல ; ‘அம்மை என்ற வனப்பின் பாற்படும்’ – என்பார் நச்சினார்க்கினியர்

• இந்நூலின் 7 மற்றும் 100 பாடலை டாக்டர் போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உள்ளார்.

நான்மணிக்கடிகை – அருந்தொடர்கள்
அல்லவை செய்வார்க்கு அறங் கூற்றம்
வெல்வது வேண்டின் வெகுளி விடல
தன்னொடு செல்வது வேண்டின் அறஞ்செய்க
இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசைநடுக

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here