பதினென் கீழ்க்கணக்கு நூல்கள்:திரிகடுகம்- சிறுபஞ்சமூலம்- ஏலாதி

0
184
tamil study material 1

பதினென் கீழ்க்கணக்கு நூல்கள்:

திரிகடுகம்:
• ஆசிரியா:; நல்லாதனார்
• காலம்: கி.பி 2ம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.
• ஊர்: திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ‘திருத்து’ என்னும் ஊரினர் என்பர்.
• இவரை செருஅடுதோள் நல்லாதன் எனப் பாயிரம் குறிப்பிடுவதால், இவர் போர் வீரராய் இருக்கலாம் என்பர்.
• திரிகடுகம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று நூறு வெண்பாக்களை உடையது.
• மனிதர்களின் உடல் நோய் நீக்கும் சுக்கு, மிளகு. திப்பிலியால் ஆன மருந்தாகிய திரிகடுகம் போல் இந்நூலும் பாடல்தோறும் மூன்று கருத்துகளைக் கொண்டு மக்களின் மனநோயைப் போக்குகிறது.
• இந்நூலில் திருமால் வணக்கம் பாடுவதால் இவர் வைணவர் எனப்படுவர்
• இந்நூலின் முதற்பாட்டு திரிகடுகம் என்ற சொல்லையே குறிப்பிடுவதால் இந்நூலுக்கு திரிகடுகம் என்று பெயர் ஏற்ப்பட்டது என்பர்
• ஓவ்வொரு பாடலின் 3வது அடியின் இறுதியில் “இம்மூவர்” அல்லது இம்மூன்று என்று இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்

அறவுணர்வு உடையாரிடத்து உள்ளவற்றைக் கூறும் திரிகடுகம் மேற்கோள் பாடல் இல்லார்க்கொன் றீயும் உடைமையும், இவ்வுலகில் நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – எவ்வுயிர்க்கும் துன்புறுவ செய்யதாத தூய்மையும் இம்மூன்றும் நன்றறியும் மாந்தர்க் குள.

சிறுபஞ்சமூலம்

• கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்தின் வேர்கள் சிறந்த மருந்தாக உடல் நோயைப் போக்குவதுபோல், இந்நூலின் வரும் ஒவ்வொரு பாடலும் ஐந்து நீதிகளைத் தொகுத்து கூறி அவற்றால் மக்கள் துயரை நீக்குவதால் இது ‘சிறுபஞ்சமூலம்’ எனப்பட்டது.
• கடவுள் வாழ்த்துடன் 102 வெண்பாக்கள் உடையது.;
ஆசிரியா:; காரியாசன்
• காரியாசன் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் என்று சிறப்பாயிரம் தெரிவிக்கின்றது.
• சிறப்பாயிரம் மூலம் இவர் சமணர் என்பது தெரிகின்றது.
• கி.பி.470 ல் வச்சிரநந்தி நிறுவிய திரமிள சங்கத்தில் கல்வி கற்றவர்.
• கணிமேதாவியாரும் மாக்காயனாரின் மாணவர்.
• ஆயுர்வேத நூற்பயிற்சியும் வட மொழியறிவும் உடையவர் இவர்.
மேற்கோள்களும் நூற்கருத்தும்
• தோற் கன்றைக் காட்டிப் பசுக்களைக் கறக்கும் கொடிய பழக்கத்தைக் கண்டிக்கிறது.
• பிறர் ‘சாக’ எனப் பழிக்கும் படி வாழாமல் ‘வாழ்க’ எனப்போற்றும்படி வாழ வேண்டும்.
• குழந்தைக்கு ஊட்டும் சோற்றைப் ‘பலி’ என்ற சொல்லாமல் இவர் குறிக்கின்றார்

மேற்கோள்
கண்வனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை,
எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல் பண்வனப்புக்
கேட்டார்நன் றென்றல் கிளர்வேந்தன் தன்னாடு வாட்டான்நன் றென்றல் வனப்பு

ஏலாதி

• பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ஏலாதி.
• இந்நூல் சிறப்புப் பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் உட்பட 81 வெண்பாக்களை கொண்டுள்ளது.
• ஏலம் என்னும் மருந்துப் பொருளை முதன்மையாகக் கொண்டு, இலவங்கம் சிறுநாவற்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு ஆகியவற்றினால் ஆன மருந்துப் பொருளுக்கு ஏலாதி என்பது பெயர்.
• ஏலாதி மருந்தைப் போல இந்நூலும் பாடல்தோறும் நான்கடிகளில் ஆறு அருங்கருத்துகளை கூறுகிறது.
• ஏலாதி மருந்து உண்ணுபவரின் உடற்பிணியைப் போக்கும். அதுபோல, இந்நூலின் கருத்துகள் கற்போரின் அறியாமையை அகற்றும்.
ஆசிரியர்: கணிமேதாவியார்
• ஏலாதியை இயற்றியவர் கணிமேதாவியார்.இவரின் வேறு பெயர் கணிமேதையர் என்பதாகும். இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர்.
• ஏலாதியில் சமண சமயத்திற்கே உரிய கொல்லாமை முதலிய உயரிய அறக்கருத்துக்களை வலியுறுத்திக் கூறுகிறார்.
• காலம:; கி.பி.5; நூற்றாண்டு.
• இவர் திணைமாலை நூற்றைம்பது என்ற நூலையும் இயற்றியுள்ளார்.

பாடல்
வணங்கி வழியொழுகி மாண்டார்சொல் கொண்டு
நுணங்கிநூல் நோக்கி நுழையா – இணங்கிய
பால்நோக்கி வாழ்வான் நுழையா – இணங்கிய
பழியில்லா மன்னனாய் நூல்நோக்கி வாழ்வான் நுனித்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here