பக்தி இலக்கியங்கள்-தேம்பாவணி, சீறாப்புராணம்

0
129
tamil study material 15

பக்தி இலக்கியங்கள் -தேம்பாவணி

1. தமிழில் தோன்றிய கிறித்தவ பெருங்காப்பியம் வீரமாமுனிவரால் இயற்றப்பட்டது

2. தேம்பாவணி ஸ்ரீ தேம்பா +அணி (வாடாத மாலை) அல்லது

3. தேன் + பா + அணி (தன் போன்ற இனிய பாடல்களால் ஆன மலை) என இரு பொருள்களில் வழங்கப்படுகிறது.

4. இயேசுபெருமானின் வளர்ப்புத் தந்தையான ஜோசப் எனும் சூசையப்பரைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டது.

5. கிருத்துவர்களின் கலைக்களஞ்சியமாகக் கருதப்படுகிறது

6. 3 காண்டங்களையும் 36 படலங்களையும் 3,615 பாடல்களையும் கொண்டது.

7. தேம்பாவணியில் ஜோசப்பை ‘வளன்’ என்றும், ஜானை, ‘கருணையன்’ என்றும் ஐசக்கை ‘நகுலன்’ என்றும் தமிழில் வீரமாமுனிவர் மொழிபெயர்த்துள்ளார்.

 

பக்தி இலக்கியங்கள்- சீறாப்புராணம்

1. உமறுப்புலவர் எழுதிய சீறாப்புராணம் இறைவனின் திருத்தூதரான நபிகள் நாயகத்தின் வரலாற்றினைக் கூறும் நூல் (சீறா-வாழ்க்கை புராணம்-வரலாறு)

2. 3 காண்டம் (விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜ்ரத்துக் காண்டம்)

3. 92 படலங்களில் 5027 விருத்தப்பாக்களைக் கொண்டு அமைவது.

4. விலாதத்துக் காண்டத்தில் ‘புலி வசனித்த படலம்’ இடம்பெற்றுள்ளது

சீறாப்புராணத்தை இயற்றியவர் உமறுப்புலவர்

1. எட்டயபுரம் கடிகை முத்துப் புலவரின் மாணவர்.

2. அப்துல்காதிர் மரைக்காயர் என்ற இயற்பெயர் கொண்ட வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளிற்கு ஏற்ப உமறுப்புலவர் சீறாப்புராணம் எழுதத் தொடங்கினார். நூல் முற்றும் முன்னமே சீதக்காதி மறைந்தார்.

3. வள்ளல் சீதக்காதி ‘செத்தும் கொடுத்த சீதக்காதி’ எனப் புகழப்படுகிறார்

4. சீதக்காதி பின் அபுல்காசிம் என்ற வள்ளல் உதவியால் சீறாப்புராணம் நிறைவுற்றது.

5. உமறுபுலவர் எழுதிய மற்ற நூல்: முதுமொழி மாலை (80 பாக்கள)

6. காலம்: 17 ம் நூற்றாண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here