சிற்றிலக்கியங்கள்:தமிழ்விடு தூது-அழகர் கிள்ளைவிடு தூது-திருவேங்கடத்தந்தாதி

0
307
tamil study material 7

சிற்றிலக்கியங்கள்:

தமிழ்விடு தூது

1. கலிவெண்பாவில் உயர்திணைப் பொருளையோ அஃறிணைப் பொருளையோ தூது அனுப்புவதாகப் பாடுவது தூது இலக்கியம்.

2. மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்க நாதர் மேல் காதல் கொண்ட பெண்ணொருத்தி, தன் காதலைக் கூறி வருமாறு தமிழ்மொழியைத் தூது விடுவதாகப் பொருளமைந்தது தமிழ்விடு தூது.

3. இதனை இயற்றியவர் பெயர் அறிய இயலவில்லை.

4. தமிழ்விடு தூது எனும் பெயரால் இரு நூல்கள் உள்ளன (18-ம் நூற்றாண்டு). பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அமிர்தம் பிள்ளை எழுதியதொன்று முன்னைய நூலினை எழுதியவர் பெயர் தெரிந்திலது.

5. முந்தைய தமிழ்விடு தூது நூலில் தமிழின் பெருமை, இலக்கிய வரலாறு போல நிரல்பட விரித்துரைக்கப்படுகிறது என்பார் தமிழண்ணல்.

6. இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன். என்ற சொற்கள் ஒவ்வொரு தமிழனின் நெஞ்சத்து எதிரொலியாக ஒலிக்கக் காணலாம்.

அழகர் கிள்ளைவிடு தூது

1. திருமாலிருஞ்சோலை அழகர் மலையில் அமைந்துள்ள இறைவன் அழகரிடம் பலபட்டடைச் சொக்கநாத புலவர் கிளியைத் தூதுவிடுவதாக அமைத்து பாடியிருப்பது அழகர் கிள்ளைவிடுதூது.

2. அழகர் கிள்ளைவிடுதூது காப்பு வெண்பா ஒன்றையும் 239 கண்ணிகளையும் உடையது.

3. அழகர் கிள்ளைவிடு தூதுவை இயற்றியவர் : பலபட்டடைச் சொக்கநாத புலவர்

4. இவரின் பிற நூல்கள்: மும்மணிக்கோவை, யமகவந்தாதி, தென்றல் விடு தூது

தூது கூடுதல் குறிப்புகள்

1. அன்னம், மயில், கிளி, மேகம், பூவை, தோழி, குயில், நெஞ்சு, தென்றல், வண்டு ஆகிய பத்து மட்டுமே தூது விடுதற்குரியவை என்று ரத்தினச்சுறுக்கம் என்னும் நூல் கூறுகிறது.

2. பின்பு பணம், தமிழ், புகையிலை, காக்கை என தூதுவிடும் பொருள்கள் பெருகின.

3. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது வெள்ளைவாரணார் இயற்றிய ‘இராசகோபாலாச்சாரியாருக்கு கக்கை விடு தூது’ என்ற நூல் குறிப்பிடத்தக்கது.

திருவேங்கடத்தந்தாதி

1. தொண்ணூற்றாறு சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று அந்தாதி.

2. அந்தம் என்னும் சொல்லுக்கு முடிவு என்றும் ஆதி என்ற சொல்லுக்கு முதல் என்பதும் பொருள்.

3. ஒரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அடுத்த பாடலின் முதலாக வரும்படி அமைத்துப் பாடுவது அந்தாதி.

4. அந்தாதியைச் சொற்றொடர்நிலை எனவும் வழங்குவர்.

5. திருவேங்கடத்தில் கோயில் கொண்டிருக்கும் திருமால் அருளை வேண்டி பாடப்பட்டதால் திருவேங்கடத்தந்தாதி எனப்பட்டது.

6. திருவேங்கடத்தந்தாதியின் ஆசிரியர் அழகிய மணவாளதாசர் என்றழைக்கப்பட்ட பிள்ளை பெருமாள் ஐயங்கார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here