பதினென் கீழ்க்கணக்கு நூல்கள்:இன்னா நாற்பது-இனியவை நாற்பது

0
145
tamil study material 2

பதினென் கீழ்க்கணக்கு நூல்கள்:

இனியவை நாற்பது
• ஆசரியர்: மதுரை தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார்
• இவர் காலம் கி.பி.5 ஆம் நூற்றாண்டு என்பர்.
• 41 வெண்பாக்கள் உள்ளன.
• கடவுள் வாழ்த்தில் மும்மூர்த்திகளும் வணங்கப்பட்டுள்ளனர்
• இந்நூலில் உள்ள 4 பாடல்கள் மட்டும் 4 கருத்துகளை கூறுகின்றது. மற்ற 36 பாடல்களும் 3 இனிய பொருள்களையே கூறுகின்றது.

மேற்கோள்
• ஒப்ப முடிந்தால் மனை வாழ்க்கை முன்னினிது
• உயர்வுள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே
• மான மழிந்தபின் வாழாமை முன்னினிதே
• வருவாயறிந்து வழங்கலினிதே
• குழவி தளர் நடைகாண்டலினிது.
• குழலி பிணியின்றி வாழ்தல் இனிதே
• கழறும் அவையஞ்சான் கல்வி இனிதே
• மயரிக ளல்லராய் மாண்புடையாhச் சேரும் திருவந்தீர் வின்றேல் இனிது.

இன்னா நாற்பது
• 41 வெண்பாக்கள் கொண்டது.
• ஆசிரியா:; கபிலர் (கள்ளுண்ணாமையையும் புலாலுண்ணாமையையும்; வற்புறுத்துவதால் இவர் மட்டுவாய் ஊன் சோறு உண்ட சங்ககாலக் கபிலர் அல்லர் என்பர்)
• கி.பி. 4; நூற்றாண்டைச் சேர்ந்தவர்
• கடவுள் வாழ்த்தில் சிவன், பலராமன், மாயோன், முருகன் ஆகிய நால்வரையும் குறிக்கின்றார். புலராமனைச் சுட்டுதல் சங்க காலத்தை ஒட்டிய குறிப்பை நல்குகிறது என்பார் தமிழண்ணல்
• இந்நூலில் 164 இன்னாத பொருட்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
மேற்கோள்
காமம் முதிரின் உயிர்க்கின்னா
கள்ளுன்பாண் கூறும் கருமப்பொருளின்னா
தேன் நெய் புளிப்பின் சுவையின்னா
பிறன் மனையாள் பின்னோர்க்கும் பேதைமையின்னா
ஊனைத்தின்று ஊனைப் பெருக்குதல் முன்னின்னா.

பழமொழி நானூறு

• நானூறு பாடல்கள் உள்ளன.
• திருக்குறளுக்கும் நாலடியார்க்கும் அடுத்த சிறப்புடையது.
• ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி இடம் பெற்றுள்ளது.
• ஆசிரியா:; முன்றுறை அரையனார். (அரையர் என்பது அரசரைக் குறிக்கும் சொல். இவர் முன்றுறை என்ற ஊரை ஆண்ட அரசனாக இருக்கலாம் அல்லது அரையன் என்பது புலவரின் குடிப்பெயராகவும் இருக்கலாம் என்பர்.)
• சமயம்:; சமண சமயம்
• கி.பி.5ஆம் நூற்றாண்டில் வச்சிரநந்தி மதுரையில் நிறுவியிருந்த திரமிள சங்கத்தில் இவரும் பயின்றார் என்று கூறப்படுகிறது.
• ஓவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழியை வைத்து அதனோடு ஒர கதையையோ வரலாற்று நிகழ்ச்சியையோ சுட்டி அறத்தை வற்புறுத்தும் இந்நூல் நீதிநூல்களுள் சிறப்புடைய ஒன்றாகும்.
• இதற்குப் பழைய உரை ஒன்றுண்டு. பேராசிரியர் திருமணம் செல்வக்கேசவராய முதலியார் இதனைப் பதிப்பித்துள்ளார்.
• ‘தமக்கு மருத்துவர் தாம்’ நுணலுந் தன் வாயாற் கெடும். ‘நிறைகுடம் நீர் தளும்பலில்’ முதலிலார்க்கூதியமில் என்பன பல இதில் வரும் பழமொழிகளுள் சில.
• பல்யானைச் செல்கெழு குட்டுவன் பாலைக் கௌதமனார்க்கு வீடளித்து, மனுநீதி கண்ட சோழன் கன்றூர்ந்த மகனைக் கொன்றது. தூங்கெயில் எறிந்த சோழன் கதை கரிகாலன் நரைமுடித்து முறை செய்தது, யானை கருவ+ரிற் சென்று கரிகாலனைக் கொணர்ந்தது பொற்கைப் பாண்டியன் தன்கையைக் குறைத்துக் கொண்டது, பாரி முல்லைக்குத் தேர் கொடுத்தது. பாரி மகளிரின் கொடைச் சிறப்பு, பேகன் மயிலுக்குப் போர்வை ஈந்தமை போன்ற பல செய்திகள் இந்நூலில் உண்டு.
• ஆற்றுணா வேண்டுவது இல்’ என்ற பழமொழியின் பொருள்’ கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டாம் என்பதாகும்.

மேற்கோள்
ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை அந்நாடு
வேற்றுநாடு ஆகா தமைவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவது இல்

முதுமொழிக்காஞ்சி
• காஞ்சி திணையின் துறைகளுள் ஒன்று.
• அறவுரைக்கோவை எனவும் வழங்கப்டுகிறது.
• ஒவ்வோர் அதிகாரத்திற்கும் 10 குறட்டாழிசைகள் வீதம் மொத்தம் 100 செய்யுட்களை உடையது என்பர்.
• ஆசிரியா:; மதுரைக் கூடலூர் கிழார்,
• ஐந்குறு நூற்றைத் தொகுத்த புலத்துறை முற்றிய கூடலூர் கிழாரும் இவரும் ஒருவரே என்பாரும் உண்டு.
• நிலையாமை பற்றிய காஞ்சித்திணையி; ‘முதுமொழிக் காஞ்சி’ என்பது ஒரு துறையாகும் உலக நிலையாமையை எடுத்துக்காட்டி, சான்றோர் தம் அறிவுடைமையால் கூறும் அனுபவ உரைகளே முதுமொழிக்காஞ்சி.
• முதுமொழி அறிவுடைய கூற்று எனப்படும். துறைப் பெயரைத் தாங்கிய இந்நூல் சங்க காலத்தை ஒட்டித் தோன்றி இருக்கலாம் என்பர்.
• சிறந்த பத்து பொருள்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் ‘சிறந்த பத்து” பாடல்களும், அவற்றின் பொருளும்:
1. ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம் ஓதலில் சிறந்தன்(று) ஒழுக்கம் உடைமை. கடல் சூழ்ந்த இவ்வுலக மக்கள் அனைவர்க்கும் கற்றலைவிட ஒழுக்கமுடைமையே சிறந்தது.
2. காதலில் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல் பிறர்க்கு அன்பு காட்டுவதிலும் செயல்களால் அவர் போற்றும்படி நடத்தலே மேலானது.
3. மேதையில் சிறந்தன்று கற்றது மறவாமை. அறிவுநுட்பத்தினும் கற்ற பொருளை மறவாமை மேன்மையானது.
4. வண்மையில் சிறந்தன்று வாய்மை யுடைமை வளமான வாழ்க்கையைக் காட்டிலும் வாய்மை உடையவராக வாழ்வது உயர்ந்தது.
5. இளமையில் சிறந்தன்று மெய்பிணி இன்மை. இளமையைக் காட்டிலும்; நோயற்ற வாழ்வே சிறந்தது.
6. நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று. அழகுடையவராக இருப்பதினும் நாணமுடையவராக இருப்பதே மேலானது.
7. குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று. குலப்பெருமையைவிட ஒழுக்கமுடைமையே சிறந்தது.
8. கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று. சிறந்த நூல்களைக் கற்றலைவிடவும் கற்றிந்த பெரியாரைப் பின்பற்றி யொழுகுதல் சிறப்பானது.
9. செற்றாரைச் செறுத்தலில் தற்செய்கை சிறந்தன்று. பகைவரைத் தண்டிப்பதைவிட அவருக்கு நன்மை செய்தல் சிறந்தது.
10. முன்பெரு கலின்பின் சிறுகாமை சிறந்தன்று. முற்காலத்துப் பெருகிய செல்வதைப் பின்னர்க் குறைவுடாமல் காத்தலே சிறந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here