சிற்றிலக்கியங்கள் – பரணி இலக்கியம் -கலிங்கத்துப்பரணி-தக்கயாகப்பரணி

0
252
tamil study material 10

சிற்றிலக்கியங்கள்

பரணி இலக்கியம் 

  1. போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் ‘பரணி’ எனப்படும். இதை பன்னிரு பாட்டியல், ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவ னுக்கு வகுப்பது பரணி’ என்று கூறுகிறது.
  2. போரில் தோற்றவர் பெயரில் பரணி நூல் எழுதப்படும்.

கலிங்கத்துப்பரணி

1. தமிழில் தோன்றிய முதல் பரணி இலக்கியம்

2. கலிங்கத்துப்பரணியில் 599 தாழிசைகள் உள்ளன.

3. கலிங்க மன்னன் ஆனந்தபத்மன் மீது முதல் குலோத்துங்கச் சோழன் படைத்தலைவன் கருணாகரன் போர் தொடுத்து பெற்ற வெற்றியைப் பாராட்டி, தோல்வியுற்ற கலிங்கநாட்டின் பெயரால் கலிங்கத்துப்பரணி எழுதப்பட்டது.

4. ஜெயங்கொண்டாரின் சமகாலப் புலவரான ஒட்டக்கூத்தர் கலிங்கத்துப்பரணியைத் பாடற் பெரும்பரணி, தேடற்கருங்கவி, கவிச்சக்ரவர்த்தி பரவ என்று போற்றியுள்ளதுடன் அவரது நூலையும் ‘தென்தமிழ்த் தெய்வப்பரணி’ என சிறப்பித்துள்ளார்.

ஆசிரியர் குறிப்பு:

1. கலிங்கத்துப்பரணியை இயற்றியவர் ஜெயங்கொண்டார்.

2. ஊர்: திருவாரூர் மாவட்டம் – தீபங்குடி

3. குலோத்துங்க சோழனின் அரசவை புலவர்.

4. காலம்: கி.பி.: 12ம்; நூற்றாண்டு.

5. இவர் எழுதிய நூல்கள்: இசையாயிரம், உலா, மடல்.

6. ‘பரணிக்கோர் சயங்கொண்டார்’ – பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பாராட்டியுள்ளார்.

7. “எனக்கு மிக விருப்பமான இலக்கியம் கலிங்கத்துப்பரணி” -; அண்ணா

தக்கயாகப்பரணி: (ஒட்டக்கூத்தர்)

1. தக்கன் செய்த வேள்வியை அழித்தபோது அப்போர்க்கள நிலையைச் சிவபெருமானே உமைஅம்மைக்குக் காட்டுவதாகப் பாடப்பட்டது.

2. வீரபத்திரத்தேவர் தன் தலைவன் சிவபெருமானது ஆணைப்படி தக்கனையும் உடன் இருந்த திருமால், பிரம்மன், இந்திரன் முதலிய தேவர்களையும் எதிர்த்துப் போரிட்டுப் பெற்ற வெற்றியைக் கூறுகின்றது.

3. போரில் தோல்வியுற்ற தக்கனின் பெயரால் தக்கயாகப் பரணி எனறு பெயர் பெற்றது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here