ஓவியக்கலை

0
102
tamil study material 18

ஓவியக்கலை

 1. தமிழர் வளர்த்த நுண்கலை களின் வரிசையில் ஓவியக்கலை முன்னணியில் நிற்கிறது. பழங்கால மக்கள், தம் உள்ளக் கருத்துகளைப் புலப்படுத்த பாறைகளிலும் குகைகளிலும் கீறி எழுதினர். தம் எண்ணத்தைச் சித்திரம் வரைந்து வெளிப் படுத்தினர். இவற்றைத் தொல்பொருள் ஆய்வுகளாலும் இலக்கியச் சான்றுகளாலும் அறிந்துகொள்ள முடிகிறது.
 2. கி.மு. 2000 ஆண்டுகட்கு முற்பட்ட காலத்தில் மக்கள் இனக்குழுக்களாக வாழ்ந்தனர். தாம் தங்கிய மலைக்குகைகளிலும் பாறைகளிலும் கோட்டோவியங்கள் வரைந்தனர். அவற்றைத் தற்காலத் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் கண்டுபிடித்து வெளிக் கொணர்ந்துள்ளனர்.
 3. தமிழகத்தில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் ( மான், போர் செய்தல், விலங்கு வேட்டை ஆகியனவற்றைக் குறிக்கும்) குகைஓவியங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
 4. தமிழ்நாட்டில் சங்க காலத்திற்கு முன்னரே ஓவியங்கள் வரையப்பட்டன. தாம் வரைந்த ஓவியங்களை முதலில் கண்ணெழுத்து என்றே வழங்கியுள்ளனர்.
 5. தமிழ் இலக்கியத்தில் எழுத்து என்பதற்கு ஓவியம் எனப் பொருள் இருந்ததனைப் பரிபாடல், குறுந்தொகை செய்யுள் அடிகள் தெளிவுபடுத்துகின்றன.
 6. சீனமொழியிலும் எழுத்துகள் உருவங்களாக உள்ளன. எனவே, பழங்கால மக்கள் சித்திர எழுத்துகளால் கருத்துகளைப் புலப்படுத்தினர். அவையே நாளடைவில் மொழிக்குறியீடுகளாக வளர்ந்துள்ளன.
 7. ஓவியம் வரைதற்கு நேர்கோடு, கோணக்கோடு, வளைகோடு முதலியன அடிப்படையாகும். இவ்வாறு வரையப்படுபவை கோட்டோவியங்கள் எனப்படும். அவ்வரைகோடுகள்மேல் சிவப்பு, கறுப்பு, மஞ்சள், நீலம் முதலிய வண்ணங்கள் பூச, அழகிய ஓவியங்களாக உருவெடுக்கும்.
 8. தொல்காப்பியம் நடுகல் வணக்கம் பற்றிக் கூறுகிறது. நடுகல்லில் போரில் வீரமரணம் எய்திய வீரனது உருவம், பெயர், பெருமைக்குரிய செயல் முதலியனவற்றைப் பொறிக்கும் பழக்கம் இருந்தது.
 9. சிற்பி, தான் செதுக்கவிருக்கும் உருவத்தை முதலில் வரைந்து பார்த்த பின்னரே, அவ்வோவியத்தைக்கொண்டு கல்லில் உருவம் அமைத்தல் மரபு. இதன்படி ஆராய்ந்து நோக்கினால் செதுக்குவதற்கு ஓவியம் துணை புரிந்ததனையும், ஓவியம் முன்னரே வளர்ந்திருந்ததனையும் உணர முடிகின்றது.
 10. ஓவியக்கலை ஓவு, ஓவம், ஓவியம், சித்திரம், படம், படாம், வட்டிகைச் செய்தி எனப் பல பெயர்களால் வழங்கப்பெற்றது.
 11. ஓவியக் கலைஞர் ஓவியர், ஓவியப்புலவன், கண்ணுள் வினைஞன், சித்திரக்காரர், வித்தக வினைஞன், வித்தகர், கிளவி வல்லோன் என அழைக்கப்பட்டார்.
 12. ஓவியர் எண்ணங்களின் எழுச்சியைப் பல வண்ணங்களின் துணைகொண்டு எழுதுவோராதலின் கண்ணுள் வினைஞர் எனப் புகழப்பெற்றார்
 13. நச்சினார்க்கினியர் தம் உரையில் ஓவியருக்கு, ‘நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்’ என
 14. ஓவிய நூலின் நுணுக்கத்தை நன்கு கற்றுப் புலமைபெற்ற ஆசிரியர் ஓவியப் புலவன் எனப் போற்றப்பட்டார்.
 15. ஓவியக் கலைஞர் குழுவை ஓவிய மாக்கள் என்றழைத்தனர்.
 16. ஆண் ஓவியர் சித்திராங்கதன் எனவும், பெண் ஓவியர் சித்திரசேனா எனவும் பெயர் பெற்றிருந்தனர்.
 17. ஆடல் மகள் மாதவி, ‘ஓவியச் செந்நூல் உரை நூற்கிடக்கையும் கற்றுத்துறை போகப் பொற்றொடி மடந்தையாக இருந்தனள்’ எனச் சிலம்பு பகர்கிறது. இதிலிருந்து ஓவியக் கலைக்கெனத் தனி இலக்கண நூல்கள் இருந்தன என்பதனைத் தெரிந்துகொள்ளலாம்.
 18. வரைகருவிகள் பல்வகைக் காட்சிகள், உருவங்கள் வரைய ஓவியர் அக்காலத்தில் பல்வகைக் கருவிகளைப் பயன்படுத்தினர். வண்ணந்தீட்டும் கோல் தூரிகை, துகிலிகை,வட்டிகை எனப்பட்டது.
 19. வண்ணங்கள் குழப்பும் பலகைக்கு வட்டிகைப் பலகை எனப் பெயரிட்டிருந்தனர்.
 20. வரைவிடங்கள் அக்காலத்தில் ஓவியங்கள் வரைவதற்கென்று தனியே இடங்கள் அமைந்து இ ரு ந் தன. இ ங் ஙனம் ஓவிய ம் வ i ர ய ப் ப ட் ட இ ட ங் க ள் சி த் தி ர க்கூட ம் , சித்திரமாடம், எழுதுநிலை மண்டபம், எழுதெழில் அம்பலம் என வழங்கப்பட்டன.
 21. இறை நடனம் புரிவதற்கே சித்திர சபை ஒன்றனை ஏற்படுத்தியுள்ளனர்.
 22. புறநானூற்றில், ஓவத்தனைய இடனுடை வனப்பு என வீட்டின் அழகை ஓவியத்திற்கு ஒப்ப வைத்துக் கவிஞர் போற்றுகிறார்.
 23. சுடுமண் சுவர்மீது வெண்சுதை (சுண்ணாம்பு) பூசிச் செஞ்சாந்துகொண்டு ஓவியங்கள் தீட்டினர். அதுமட்டுமன்றி மரப்பலகை, துணிச்சீலை, திரைச்சீலைகளில் ஓவியம் எழுதினர்.
 24. நாடகமேடைகளில் பல வண்ணங்களில் கவின்மிகு காட்சிகள் தீட்டப்பட்ட திரைச்சீலைகள் தொங்கினவற்றை `ஓவிய எழினி’ கொண்டு அறிகிறோம்.
 25. வண்ணங்கலவாமல் கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவதனைப் புனையா ஓவியம் என்றழைத்தனர். இன்றும், இது மென்கோட்டு ஓவியமாக நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 26. ஆடு முதலான பன்னிரண்டு இராசிகளையும், விண்மீன்களையும் வரைந்த செய்தி, நெடுநல்வாடை என்னும் சங்க நூல் தரும் அரிய செய்தியாகும்.
 27. ஓவியங்களில் நிற்றல், இருத்தல், கிடத்தல் ஆகிய மனித இயல்புகளையும் வீரம், அமைதி, சினம், வியப்பு, உவகை முதலிய மெடீநுப்பாடுகளையும் உத்தமம், மத்திமம், அதமம் மற்றும் தசதாளம், நவதாளம், பஞ்சதாளம் முதலிய அளவுகளையும் வலியுறுத்துவது தமிழருக்கே உரிய ஓவிய மரபுகளாக விளங்குகின்றன.
 28. சங்க காலத்தில் செழித்திருந்த ஓவியக்கலை இடைக்காலத்தில் சிதைந்து மறைந்துபோகத் தொடங்கியது. மறைந்து கொண்டிருந்த ஓவியக்கலைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டியவர்கள் பல்லவப் பேரரசர்களாவர்.
 29. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட முதலாம் மகேந்திரவர்ம பல்லவன், கலையார்வம் மிக்கவன்.
 30. மகேந்திரவர்மன் காலத்தில் ஓவியக்கலை எழுச்சியுற்று உயர்நிலையை எட்டியது. இம்மன்னனே சிறந்த ஓவியனாகப் புகழ்பெற்றிருந்தான்.
 31. கல்வெட்டுகள் இம்மன்னனைச் சித்திரக்காரப்புலி எனப் புகடிநகின்றன.
 32. தட்சிணசித்திரம் என்னும் ஓவிய நூலுக்கு இம்மன்னன் உரை எழுதியுள்ளான்.
 33. மகேந்திரவர்மன் காலத்திற்குப் பின்னர் த் தமிழ க த்தில் ஆட்சிபு ரி ந் த அரசர்கள் ஓவியக்கலையை வளர்த்து வந்துள்ளார்கள். பனமலை, திருமலை, மாமல்லபுரக் குகைக்கோவில், மாமண்டூர், காஞ்சிக் கைலாசநாதர் கோவில் முதலிய இடங்களில் பல்லவர் கால ஓவியங்கள் சிதைந்த தோற்றத்துடன் காணப் ப டு கி ன் ற ன .
 34. திருநந்திக்கரையில் சேரர் கால ஓவியங்கள் கிடைத்துள்ளன.
 35. புதுக்கோட்டைக்கு அருகே சித்தன்னவாசல் என்னும் குகைக்கோவில் ஓவியங்கள், ஓவியக் கருவூலங்களாக வைத்துப் போற்றத்தகுந்தன. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் அவனிப சேகர ஸ்ரீவல்லபன் என்ற பாண்டிய மன்னன் காலத்தில், மதுரை ஆசிரியர் இளம்கௌதமன் இவ்வோவியங்களை வரைந்தார் எனக் கல்வெட்டுச் செய்தி அறிவிக்கின்றது. அங்குள்ள தாமரைத்தடாகம், ஆடல் அணங்குகள், அரசன், அரசி ஓவியங்கள் நம் கண்ணைக் கவர்வன.
 36. திருவரங்கம், திருப்பதி, தில்லை, திருவாரூர், குடந்தை, மதுரை, காஞ்சி முதலிய பல இடங்களில் விசயநகர நாயக்க மன்னர்களின் ஓவியங்கள் காணப்படுகின்றன.
 37. கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் காலத்தில் ஓவியக்கலை நன்கு வளர்ச்சி பெற்றது. ஓலைகளிலும், கண்ணாடிகளிலும், தந்தங்களிலும் ஓவியங்கள் தீட்டப்பெற்றன. வண்ணங்களின் வனப்புக்கேற்ப இரத்தினங்கள் பதிக்கப்பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here