சிற்றிலக்கியங்கள்
முத்தொள்ளாயிரம்
1. முத்தொள்ளாயிரம் மூவேந்தர்களைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்டது.
2. புறத்திரட்டு என்னும் நூல்வாயிலாக 108 வெண்பாக்களும் பழைய உரை நூல்களில் மேற்கோள்களாக 22 வெண்பாக்களும் கிடைத்துள்ளன.
3. மூவேந்தர்களின் ஆட்சிச்சிறப்பு, படைச் சிறப்பு, போர்த்திறன், கொடை முதலிய செய்திகளை இப்பாடல்கள் விளக்குகின்றன.
4. இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
நந்திக்கலம்பகம்
1. கலம்பகம் என்பது தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
2. பாட்டுடைத் தலைவன்: மூன்றாம் நந்திவர்மனை;
3. காலம:; கி.பி. 9; நூற்றாண்டு.
4. இந்நூலை இயற்றியவரின் பெயரும் பிற விவரங்களும் அறியப் படவில்லை.
5. பதினெட்டு உறுப்புகளைக் கொண்டதால் கலம்பகம்(கலம் + பகம் ஸ்ரீ கலம்பகம், கலம் பன்னிரண்டு பகம் ஆறு) என்னும் பெயர் வந்தது எனக் கூறுவர்.
6. 18 உறுப்புகள்: புயவகுப்பு, தவம், வண்டு, அம்மானை, பாண், மதங்கு, கைக்கிளை, சிந்து, ஊசல், களி, மடக்கு, ஊர், மறம், காலம், தழை, இரங்கல், சம்பிரதம், கார், தூது, குறம், பிச்சியார், கொற்றியார் முதலியன உறுப்பு வகைகள்.
7. ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பாக்களும் தாழிசை துறை விருத்தங்களும் மடக்கும் இதில் விரவிவரும் பலவகை யாப்புகளாகும்.
8. இஃது அந்தாதித் தொடையால் நூறு பாடல்கள் வரை பாடப்பெறும்.