சிற்றிலக்கியங்கள்:முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ்-மூவருலா

0
145
tamil study material 6

சிற்றிலக்கியங்கள்:

பிள்ளைத் தமிழ்

1. தொண்ணூற்றாறு சிற்றிலக்கியங்களுள் ஒன்று பிள்ளைத் தமிழ்.

2. இறைவனையோ, அரசரையோ குழந்தையாகப் பாவித்து, அவரின் குழந்தைப் பருவத்தைப் பத்துப் பருவங்களாகப் பகுத்து, பருவத்துக்குப் பத்து ஆசிரிய விருத்தங்கள் என நூல் பாடல்களைக் கொண்டது பிள்ளைத் தமிழ்.

3. இதனை பிள்ளைக்கவி என வெண்பாபாட்டியலும்இ பிள்ளைப்பாட்டு எனப் பன்னிருப்பாட்டியலும் கூறுகின்றன.

          பிள்ளைத் தமிழ் வகைகள்:
1.ஆண்பாற் பிள்ளைத் தமிழ்
2.பெண்பாற் பிள்ளைத் தமிழ்

4. பத்துப் பருவங்களில் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி ஆகிய ஏழு பருவங்களும் இருபாற் பிள்ளை தமிழுக்கும் பொதுவானவை.

5. இறுதி மூன்று பருவங்களான சிற்றில், சிறுபறை, சிறுதேர் ஆண்பாலுக்கும், அம்மானை, கழங்கு(நீராடல்) ஊசல் என்பன பெண்பாலுக்கும் உரியன.

6. பருவத்திற்கு 10 பாடல்கள் வீதம் 100 பாடல்கள் பாடப்படும்.
பிள்ளைத்தமிழ் நூல்களில் சில:

7. குலோத்தங்கன் பிள்ளைத் தமிழே (ஓட்டக்கூத்தர் – 12 ம் நூற்றாண்டு) முதல் பிள்ளைத்தமிழ் நூல் ஆகும்.

8. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் – குமரகுருபரர் (7 ம் நூற்றாண்டு)

9. திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் – பகழிக்கூத்தர் (பிள்ளைத் தமிழாயினும் பெரிய தமிழ் என்று பாரட்டப்படுகின்றது)

10. காந்தியம்மை பிள்ளைத்தமிழ்-அழகிய சொக்கநாதர் (19 ம் நூற்றாண்டு)-பெண்பாற் பிள்ளைத்தமிழ்

முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ்
11. புள்ளிருக்கு வேளுரில் எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமான் முத்துக்குமாரசுவாமியின் மீது பாடப்பட்டமையால் இது முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் எனப்பட்டது

12. குழந்தையின் பதின்மூன்றாம் திங்களில் நிகழ்வது வருகை பருவம் ஆகும்.
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழின் ஆசிரியர் குமரகுருபரர்.

13. பெற்றோர்; சண்முகசிகாமணிக் கவிராயர் – சிவகாமசுந்தரியம்மை ஆவர்.

14. பிறந்த ஊர்: திருவைகுண்டம்

15. இவரது பிற நூல்கள:; மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், காசிக்கலம்பகம்.

மூவருலா

1. திருவீதி உலாவரும் தெய்வத்தைக் கண்டு தேவரடியார்கள் மயங்குவதாகப் பாடுவது மரபு. அரசர்கள் உலாவரும்போது ஏழு பருவ மங்கையரும் கண்டு காதல் கொண்டு மயங்குவதாகப் பாடப்பட்டது உலா.

2. உலா என்பது, தொண்ணூற்றாறு சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.

3. காப்பியங்களில் பாட்டுடைத் தலைவன் உலா வரும் செய்தி உண்டு. ஐந்து வயது முதல் நாற்பது வயது வரை உள்ள பெண்கள், உலா வரும் தலைமகனைக் கண்டு காதல் கொள்வதாகப் பாடுவர்.

4. பேதை (5-7), பெதும்பை (8-11), மங்கை (12-13), மடந்தை (14-19) அரிவை (20-25), தெரிவை (26-31), பேரிளம் பெண் (32-40) ஆகிய மகளிரின் இயல்பும் ஆடல் பாடலும் உலாவில் பாடப்படும்.

5. மூவருலாவில் விக்கிரம சோழனுலா, குலோத்துங்க சோழனுலா, இராசராச சோழனுலா ஆகிய மூன்று உலாக்கள் இடம்பெற்றுள்ளன.

ஓட்டக்கூத்தர்:

1. கூத்தர் என்பதுதான் இவரது இயற்பெயர், இவர் ‘ஓட்டம்’ (பந்தயம்) வைத்துப் பாடுவதில் வல்லவராதலால் ஒட்டக்கூத்தர் என்று அழைக்கப்பட்டார்.

2. ஊர்: மலரி ( மலரிவருங் கூத்தன் என தண்டியலங்காரம் மேற்கோள் காட்டுகிறது)

3. மரபு: கைக்கோளர் மரபு

4. விக்கிரம சோழனின் அவைக்களப் புலவர்

5. சிறப்பு பெயர்: கவிச்சக்ரவர்த்தி, கவிராக்ஸசன், காளக் கவி, சருவஞ்ஞ கவி,

6. இயற்றிய பிற நூல்கள்: மூவருலா, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், தக்கயாகப் பரணி, ஈட்டி எழுபது, அரும்பைத் தொள்ளாயிரம், காங்கேயன் நாலாயிரக்கோலை, இராமாயண உத்தரகாண்டம்

விக்கிரமசோழன் உலா
1. விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், இராஜராஜன் ஆகிய மூன்று மன்னர்களின் அவையிலும் செல்வாக்கோடு விளங்கிய ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்டது விக்கிரம சோழன் உலா.

ராஜராஜன் சோழன் உலா: இராஜராஜன் சோழன் உலாவைப் பாடியவர் ஒட்டக்கூத்தர்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here