சிற்றிலக்கியங்கள்: முக்கூடற்பள்ளு- திருக்குற்றால குறவஞ்சி-பெத்லகேம் குறவஞ்சி-காவடிச் சிந்து

0
291
tamil study material 8

சிற்றிலக்கியங்கள்:

முக்கூடற்பள்ளு

1. தொண்ணூற்றாறு சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று பள்ளு.

2. இந்நூலின் ஆசிரியர் பற்றிய விவரம் தெரியவில்லை.

3. நாடகப் பாங்கில் அமைந்த இந்நூலை இயற்றியவர் என்னயினாப் புலவர் என சிலர் கூறுவர்.

4. நீர் நிறைந்த பள்ளமான சேற்று நிலத்தில் உழவுத் தொழில் செய்து வாழும் பாமர மக்களாகிய பள்ளர்களின் வாழ்க்கையைச் சித்திரித்துக் கூறுவது பள்ளு.

5. சந்தநயம் அமைந்த பாக்களைக் கொண்ட இந்நூலில் திருநெல்வேலி மாவட்டப் பேச்சு வழக்கு காணப்படுகிறது.

6. திருநெல்வேலிக்கு வடகிழக்கில் தென்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகள் கூடும் இடத்திற்கு வடக்கே உள்ள சிற்றூர் முக்கூடல்.

7. முக்கூடற்பள்ளு நூலில் அக்கால மக்களின் உழவுத் தொழில் பற்றியும், அச்சமுதாயத்தைப்பற்றியும் காளைகளின் பல்வேறு பெயர்கள், விதைகளின் பெயர்கள், மீன் வகைகள் என மருத நிலவளம் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.

திருக்குற்றால குறவஞ்சி

1. குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் திரிகூடராசப்பக் கவிராயர்.

2. திரிகூடராசப்பக் கவிராயரின் ஊர்: தென்காசி- மேலகரம்

3. திருக்குற்றால மலையில் கோவில் கொண்டிருக்கும் குறும்பலா ஈசரின் சிறப்பு, அவர் மீது காதல் கொள்ளும் வசந்தவல்லியின் அழகு குற்றால மலை வளம், குற்றாத்தியின் குறி சொல்லும் திறன் போன்றவை சிறப்பாக இடம்பெறுகின்றன.

4. வசந்தவல்லி பந்தாடும் அழகைக் கூறும் பாடல்கள் சந்தநயம் மிக்கவை.

பெத்லகேம் குறவஞ்சி

1. வீதியில் உலா போன மன்னனையோ, கடவுளையோ கண்டு தலைவி மையல் கொள்வதும், அச்சமயம் குறவன்குறத்தி அங்கு வந்து மலைவளம், நாட்டுவளம் பற்றி புனைந்து குறி கூறுதலும் என நாடக வடிவில் அமைத்துப் பாடுவது குறவஞ்சி.

2. உலாவரும் மன்னர் இயேசுவாகவும் தலை சீயோன் மகளாகவும் உருவகித்து பாடப்பெற்றது பெத்தலேகம் குறவஞ்சி.

3. பெத்தலேகம் குறவஞ்சியின் ஆசிரியர் தஞ்சை வேதநாயக சாஸ்திரியார்

4. ;பிறந்த ஊர்: திருநெல்வேலியில் 1774-ல் பிறந்தார்.

5. எழுதிய பிற நூல்கள்: ஞானத்தச்சன், ஞானஉலா, ஆரணாதிந்தம்

காவடிச் சிந்து

1. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு அருகிலுள்ள கழுகுமலையில் கோயில் கொண்டுள்ள முருகனின் சிறப்பை கூறும் வகையில் பாடப்பட்டது காவடிச் சிந்து.

2. இந்நூலை இயற்றியவர் அண்ணாமலையார் (1861-1890).

3. இவரது பிற நூல்கள:; வீரை அந்தாதி, கோமதி அந்தாதி, வீரைப் பிள்ளைத் தமிழ் முதலியன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here