இரட்டுற மொழிதல் (சிலேடை)-காளமேகப் புலவர்-அழகிய சொக்கநாதர்

0
261
tamil study material 11

இரட்டுற மொழிதல் (சிலேடை)

1. இரண்டு +உற +மொழிதல் =  இரட்டுற மொழிதல் இரண்டு பொருள்படப்பாடுவது

2. ஒரு சொல்லோ அல்லது சொற்றொடரோ இருவகைப் பொருளைத்தருமாறு அமைத்துப் பாடுவது சிலேடை அல்லது இரட்டுற மொழிதல் எனப்படும்.

காளமேகப் புலவர்

1. சிலேடைக் கவி பாடுவதில் வல்லவர்

2. வசைபாடக் காளமேகம் என்று புகழப்பட்டவர்.

3. இயற்பெயர்; வரதன்.

4. கும்பகோணத்தை அடுத்த நந்திபுரத்தில் பிறந்தவர்

5. ‘வாசவயல் நந்தி வரதா திசையனைத்தும் வீசுகவி காளமேகமே’ என்று காளமேகத்தைப் பற்றி அதிமதுரகவி என்பவர் பாடுகையில் குறிப்பிடுவதைக் கொண்டு காளமேகத்தின் இயற்பெயர் வரதன் என்பர்.

6. இயற்றிய பிற நூல்கள:; திருவானைக்கா உலா, சரஸ்வதி மாலை, பரப்பிரம்ம விளக்கம், சித்திர மடல்

காளமேகப் புலவர் பாடிய சிலேடை
1. வைக்கோலுக்கும், யானைக்கும்,
2. பாம்புக்கும் வாழைப்பழத்திற்கும்,
3. பாம்புக்கும் எள்ளுக்கும்,
4. தேங்காய்க்கும் நாய்க்கும்,
5. மீனுக்கும் பேனுக்கும்,
6. பனைமரத்திற்கும் வேசிக்கும் எனப் பல்வேறு சிலேடை பாடியுள்ளார்.

பாம்பிற்கும் வாழைப்பழத்திற்கும் சிலேடையாக அமைக்கப்பட்டிருக்கும் காளமேகப் புலவரின் பாடல்

நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதன் முடிமேலிருக்கும்
வெஞ்சினத்துப் பற்பட்டால் மீளாது விஞ்சுமலர்த்
தேம்பாயுஞ் சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பாகும் வாழைப்பழம்

அழகிய சொக்கநாதர்
1. அழகிய சொக்கநாதப் புலவர் இருபத்தைந்திற்கும் அதிகமான தனிப்பாடல்களை எழுதியுள்ளார்.

2. அழகிய சொக்கநாதப் புலவர் சிலேடை அமைத்துப் பாடுவதில் வல்லவர்.

3. காலம்: கி.பி. 19-ம் நூற்றாண்டு.

4. மரமும் பழைய குடையும் என்பது இவரது சிலேடைப் பாடல்களில் ஒன்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here