ஐம்பெருங்காப்பியங்கள்: சிலப்பதிகாரம், மணிமேகலை,சீவக சிந்தாமணி,வளையாபதி, குண்டலகேசி

0
131
tamil study material 5

ஐம்பெருங்காப்பியங்கள்: 

• சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்பன தமிழில் ஐம்பெருங் காப்பியங்கள் எனப்படுகின்றன.

• ‘ஐம்பெருங்காப்பியம் என்ற சொற்றொடரை நன்னூல் 387-வது நூற்பாவில் மயிலை நாதர்தான் முதன் முதலாகப் பயன்படுத்துகிறார்.

• வடமொழியில் காணப்படும் ‘பஞ்ச காவியம்’ என்ற மரபை ஒட்டித் தமிழில் பிற்காலத்தில் எழுந்ததே ஐம்பொருங்காப்பிய மரபு என்பர்.

சிலப்பதிகாரம்

• சிலம்பு +அதிகாரம் ஸ்ரீசிலப்பதிகாரம்

• கண்ணகியின் சிலம்பால் விளைந்த கதையை முதன்மையாகக் கொண்டதால் சிலப்பதிகாரமாயிற்று.

• சிலப்பதிகாரம் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் எனும் முப்பெருங்காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது.

• புகார்க் காண்டம் – 10 காதைகள்;
• மதுரைக் காண்டம் – 13 காதைகள்;
• வஞ்சிக் காண்டம்- 7 காதைகள்

• இது ‘உரையிடப்பட்ட பாட்டுடைச் செய்யுள்’ எனவும் வழங்கப் பெறும்.

சிலப்பதிகாரத்திற்க்கு வழங்கும்வேறு பெயர்கள் :
முதற் காப்பியம் இரட்டை காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், குடி மக்கள் காப்பியம் ஒற்றுமைக் காப்பியம், நாடகக் காப்பியம்

• சிலப்பதிகாரம் தோன்றிய வரலாற்றைக் காட்சிக் கதையில் காணலாம். முலைவாழ் மக்கள் பலர்கூடி வேங்கை மரத்தடியில் துயருற்றிருந்து கணவனுடன் வானுலகம் சென்ற ஒரு பெண்ணைப் பற்றி பேரியாற்றங்கரைக்கு மலைவளம்; காணவந்திருந்த சேரன் செங்குட்டுவனிடம் கூறினர்.

• சேரன் செங்குட்டுவனுடன் அவன் மனைவி வேண்மாளும் இளங்கோவும் தண்டமிழாசான் சாத்தனும் சென்றிருந்தனர்.

• மலைவாழ் மக்கள் கூற்றைக் கேட்ட சாத்தனார் கண்ணகி வரலாற்றைத் தானறிவேன் என்று கூறி அதை மற்றவர்களுக்கு எடுத்து இயம்பினார்.

• கண்ணகி கதை புகார், மதுரை, வஞ்சி என்னும் மூவேந்தர் நகரங்களோடும் தொடர்புள்ளதைக் கருத்தில் கொண்டு இளங்கோவடிகள் இக்கதை “முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது” என்றார்.

• சீத்தலை சாத்தனார் இளங்கோவடிகளிடம் இக்கதையை அடிகள் “நீரே அருளுக” என்றார்.

• அரைசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற் றாவதூஉம் உரைசால் பத்தினிக் குயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்துவந்தூட்டும் என்பதூஉம் சூழ்வினைச் சிலம்பு காரணமாகச் சிலப்பதி காரம் என்னும் பெயரால் நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள் என்று கூறி இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்.

• முப்பது காதைகள் கொண்ட சிலப்பதிகாரத்தில் வேட்டுவரி, கானல்வரி போல் வரிப்பாடல்களாக அமைந்த காதைகளும் ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை போல் குரவையாடல்களாக அமைந்த காதைகளும் உள.

• மங்கலவாழ்த்து முதல் வரந்தரு காதை வரை கண்ணகியைப் பத்தினித் தெய்வமாக்கிக் காட்டுவதே இளங்கோவின் நோக்கமாகும். எனவே, ‘உரைசல் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்’ என்பதே சிலப்பின் உயிரோட்டம் என்பர்.

• கோவலன் மாதவியைப் பிரியும் போதும், கோவலனும் கண்ணகியும் புகார் நகரைப் பிரியும் போதும் கோவலன் உயிர் பிரியும்போது ஊழ்வினை உருத்துவந்து ஊட்டக் காண்கிறோம்.

• பாண்டியன் தான் செய்த தவறுக்காக இறப்பது “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்பதைக் காட்டுகிறது.

• சிலப்பதிகாரம் முழுமைக்கும் அரும்பத உரை ஒன்றும், 23 காதை வரை (கானல் வரி நீங்கலாக) அடியார்க்கு நல்லார் என்பவர் எழுதிய உரை ஒன்றும் கிடைத்துள்ளன.

ஆசிரியர் குறிப்பு:
• ஆசிரியர்: இளங்கோவடிகள்
• மரபு: சேர மரபினர்.
• தந்தை: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்,
• தாய் நற்சோணை.
• தமையன் சேரன் செங்குட்டுவன்.
• இளையவரான இளற்கோவே நாடாள்வார் என்று கணியன் கூறிய கருத்தைப் பொய்ப்பிக்கும் பொருட்டு இளங்கோ இளமையிலேயே துறவு பூண்டு குணவாயிற் கோட்டத்தில் தங்கினார்.
• காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு
• மூன்று நாடு, மூன்று நகரம், மூவேந்தர் என அனைத்தையும் நடுநிலைமையுடன் ஒருங்கே காட்டித் தமிழக ஒருமைப்பாட்டைத் தோற்றுவித்தலே இளங்கோவடிகளின் தலையாய நோக்கமாகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் ‘தமிழ்நாடு’ என்ற சொல்லை முதன்முதலாக பயன்படுத்தியவர் இளங்கோவடிகளே.

‘சிலப்பதிகாரம்’ என்று ஓர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு” – பாரதியாh
• ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” – பாரதியார்
• யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்இ வள்ளுவனைப்பபோல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை – பாரதியார்

மணிமேகலை

• கோவலன் கண்ணகி மாதவியுடன் வாழ்ந்த வாழ்க்கையைச் சிலப்பதிகாரம் கொண்டுள்ளமு. கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலையின் வாழ்க்கையைப் பேசுவது மணிமேகலைக் காப்பியமாகும்

சிலப்பதிகாரத்தின் கதையின் தொடர்ச்சியாக விளங்குவதால் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டை காப்பியம் என்பர்

• மணிமேகலை தமிழில் தோன்றிய முதல் பௌத்தக் காப்பியம்,

• மணிமேகலையின் ஆசிரியர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.

• சீத்தலைச் சாத்தனாரின் இயற்பெயர் சாத்தன். இவர் திருச்சிக்கு அருகில் உள்ள சீத்தலை என்னும் ஊரில் பிறந்தவர்.

• மதுரையில் கூலவணிகம்(கூலம் தானியம்) செய்ததால் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்று அழைக்கப்பட்டார்.

• இவர் இளங்கோவடிகளின் சமகாலத்தவர். இவர் கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவாராகவும் திகழ்நதார். இவர் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு என்பர்.

• சாத்தனாரைத் தண்டமிழ் ஆசான் சாத்தன் என்றும், நன்னூற்புலவன் என்றும் இளங்கோவடிகள் பாராட்டியுள்ளார்.

• மணிமேகலைக் காப்பியம் மணிமேகலையின் துறவு வாழ்க்கையைக் கூறுவதால் ‘மணிமேகலைத் துறவு’ என்றும் வேறு பெயர் பெற்றது.

• 30 காதைகளைக் கொண்டது.
• முப்பது, காதைகளுள், 24 வது காதையான’ஆபுத்திரன் நாடு அடைந்த காதையில் இடம்பெற்றுள்ள நல்வினைப்பயன் பற்றிய பாடல்.

நல்வினை யென்பது யாதென வினவின்
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச்
சீலம் தாங்கித் தானம் தலைநின்று
மேலென வகுத்த ஒருமூன்று திறத்துத்
தேவரும் மக்களும் பிரமரு மாகி மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர்

சீவக சிந்தாமணி

• சோழ மரபில் பிறந்த சமணத் துறவியான திருத்தக்தேவரால் இயற்றப்பட்டது

• காலம்: கி.பி.9 நூற்றாண்டு அல்லது 10 ம் நூற்றாண்டு

• விருத்தப்பாவிலான முதல் தமிழ்க் காப்பியம்.

• நாமகள் இலம்பகம் தொடங்கி’ முத்தி இலம்பகம்’ வரை 13 இலம்பகங்களையும் 3000 மேற்பட்ட பாடல்களையும் கொண்டது.

• சீவக சிந்தாமணிக்கு ‘மண நூல்’ என்ற வேறு பெயரும் உண்டு.

• இன்பச்சுவை தழுவி ஒரு சமணத் துறுவி பாடிவிட்டார்; என்ற அவச் சொல்லை நீக்குவதற்காக முற்றிலும் நிலையாமை கருதி ‘ நரிவிருத்தம்’ என்ற மற்றொரு நூலையும் ஆசிரியர் பாடியுள்ளார் என்பர்.

• தனது துறவின் தூய்மையை நிலைநாட்ட விரும்பி சுறவொழுக்கத்தில் தவறியிருப்பின் இவ்விரும்பு என்னைச் சுடுவதாக’ என கூறியவாறு பழுக்கச் காய்ச்சிய இரும்பைக் கையிலேந்தி நிறுபித்தார்.

• ‘சிந்தாமணியில் ஓர் அகப்பை முகந்து கொண்டேன் என்று கம்பர் கூறியதாக்க கூறுவர்.

• திருத்தக்க தேவரைத் ‘ தமிழ்க் கவிஞருள் அரசர்’ என்றும் சிந்தாமணியைக் கிரோக்கக் காப்பியங்களான ஒடிசி இலியட்டுக்கு இணையானது என்றும் போற்றுவார் ஜி.யு.போப்

வளையாபதி

• வளையாபதி சமண நூல் என்பர்.

• புறத்திரட்டிலிருந்தும் இலக்கண உரைளிலிருந்தும் ஏறத்தாழ எழுபது செய்யுட்கள் மட்டுமே தேடித் தொகுக்கப்பட்டுள்ளன.

• வைசிய புராணத்தில் ‘ வைர வணிகன் வளையாபதி பெற்ற சருக்கம்’ என்னும் பகுதி மூலம் வளையாபதி கதைப்பற்றி அறியப் படுகின்றது.

• ‘ஒட்டக்கூத்தர் கவியழகு வேண்டி வளையாபதியை நினைத்தார் என்று தக்கயாகப் பரணி உரையாசிரியர் எடுத்துக் காட்டுகிறார்.

• இதன் பா அமைப்பை நோக்க இது சீவகசிந்தாமணிக்குக் காலத்தால் முற்பட்டது என்பது டாக்டர் தெ.பொ.மீ அவாகளின் கருத்து

• மக்கட் பேற்றைச் சிறப்பிக்கும் வகையில் இந்நூலில் இடம்பெற்ற ஒருபாடல் அதற்கு சமமான பல உண்மைகளைப் பட்டியலிடுகிறது.

“பொறையிலா அறிவு போகப்புணர்விலா இளமை மேவத்
துறையிலா வனச வாவி துகிலிலாக் கோலத் தூய்மை
நறையிலா மாலை கல்வி நலமிலாப் புலமை நன்னீர்ச்
சிறையிலா நகரம் போலும் சேயிலாச் செல்வ மன்றே”

குண்டலகேசி

• மறைந்துபோன தமிழ் நூல்களுள் ஒன்றான இது ஒரு பௌத்த காப்பியம்.

• புறத் திரட்டில் பத்தொன்பது செய்யுட்கள் காணப்படுகின்றன.

• விருத்தப்பாவில் அமைந்த இக்காப்பியம் யாப்பருங்கல விருத்தியுரையில் எடுத்தாளப்படுவதால், இதன் காலம் பத்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்பர்.

• இதற்கு மறுப்பாக எழுந்த நீலகேசியின் காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டு ஆதலால், இதனை அதற்கு முற்பட்ட காலத்தாகக் கருதவேண்டும் என்பர் சிலர்.

• குண்டலக்கேசியின் ஆசிரியர் நாகுதத்தனார்.

• மணிமேகலை சமயவாதத்தைப் பற்றிப் பேசுகிறது. குண்டலக்கேசி, நீலகேசி, பிங்களகேசி, போல்வன இவ்வகையிலான வாதக் காப்பியங்கள் என்பர்.

• குண்டலகேசி பௌத்தத்தின் பெருமையையும் அதன் மறுப்பாக எழுந்த நீலகேசி சமணத்தின் பெருமையையும் வாத அடிப்படையில் நிலைநாட்ட முயல்கின்றன.

• குண்டலக்கேசி (சுருண்ட கூந்தலையுடையவள்) என்ற பெண்ணின் கதையையும் நீலகேசி உரையிலிருந்தே தெரிந்துகொள்கிறோம்.

• இதனை ஒரு தருக்க நூலாக யாப்பருங்கல விருத்தி கூறுகிறது. “பிறர் சாவதற்காக அழும் நாம் குழந்தைத் தன்மை செத்து இளைஞனாகி, பிறகு அப்பருவம் செத்து முதியவனாசி இவ்வாறு நாள்தோறும் சாசிறோம். அதற்கு அழதாதது ஏனோ?’ என வாழ்வின் நிலையாமையைக் கற்பனை மெருகோடு தரும் பாடல் ஒன்று

• பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ்வியல்பும் இன்னே மேல்வரும் மூப்பு மாகி
நாளும் நாம்சாகின் றாமால் நமக்குநாம் அழாத தென்னோ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here