TNPSC Current Affairs 2019 in Tamil 31.01.2019– Download as PDF

0
69
current affairs tamil jan 31

1. இலங்கையின் மாத்தளையில் உள்ள ராஜபக்சே சர்வதேச விமான நிலையத்தின் 70 சதவீத பங்குகளை இந்தியாவுக்கு அளிக்கும் ஒப்பந்தமானது இரு நாடுகளின் விமான நிலையங்களுக்கு இடையே கையெழுத்தாக உள்ளது.

  • இதன் மூலம் ராஜபக்சே சர்வதேச விமான நிலையத்தை இந்தியா 40 ஆண்டுகள் நிர்வகிக்கும்.

2.மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்த உள்ளுர் தயாரிப்புகளை மேம்படுத்துவதற்காக, நாட்டின் முதல் புவியியல் குறியீடு (GI) நிலையத்தை கோவாவின்டபோலிம் சர்வதேச விமான நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

  • மேலும் பல்வேறு இடங்களில் இந்நிலையம் தொடங்கப்பட உள்ளது.

TNPSC Current Affairs: January 2019 – National News Image

3. குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் அரசு மருத்துவனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு, “பரிசு பெட்டகம்” வழங்கும் திட்டத்தை மகாராஷ்டிரா மாநில அரசு தொடங்கியுள்ளது.

4. டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல் (Transparency International) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள,உலகம் முழுவதும் ஊழல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில், மொத்தம் 180 நாடுகளில்இந்தியா 78வது இடத்தில் உள்ளது.

  • கடந்த ஆண்டு இந்தியாவானது 81வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

5. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் ஆல்-ரவுண்டர்களின்தரவரிசை (Test All-Rounder Ranking) பட்டியலில் மேற்கு இந்திய அணி கேப்டன் ஜாசன் ஹோல்டர் முதலிடம் பிடித்துள்ளார்.

  • இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

TNPSC Current Affairs: January 2019 – Sports News Image6. பாகிஸ்தானின், குவாம்பர் – ஹாதாத்கோட் பகுதியின் சிவில் கோர்ட் நீதிபதியாக “சுமன் குமாரி” என்ற இந்து பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • இந்து மதத்தை சேர்ந்த முதல் பெண் நீதிபதி இவரே ஆவார்.

7. ஒலியை விட அதிக வேகமாக அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் “டிஎப் 26 (DF 26)” என்ற ஏவுகணையை “சீனா”வானது வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.

  • இந்த ஏவுகணையானது 3 ஆயிரம் கிலோ மீட்டர் முதல் 5700 கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.

8. அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் உயரிய விருதான “கர்நாட் விருது”, இந்திய இரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

  • மத்திய எரிசக்தி துறை அமைச்சராக பியுஷ் கோயல் இருந்த போது 18 ஆயிரம் மின் இணைப்பு வழங்கியதை பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here