TNPSC Current Affairs 2019 in Tamil 29.01.2019– Download as PDF

0
57
current affairs tamil jan 29

அபெர்” என்று அழைக்கப்படும் பொதுவான டிஜிட்டல் நாணயம்அறிமுகம்

 • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியாவின் மத்திய வங்கிகள், “அபெர்” என்றழைக்கப்படும் ஒரு பொதுவான டிஜிட்டல் நாணயத்தை அறிமுகம் செய்த்து, இது இரு நாடுகளுக்கும் இடையில் பிளாக்செயின் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டட் லெட்ஜெர் தொழில்நுட்பம் மூலம் நிதி குடியேற்றங்களில் பயன்படுத்தப்படும். 

மேற்கு ரயில்வே ஆர்பிஎப் ஊழியர்களுக்கு ‘செக்வே‘ வழங்கியது

 • மும்பையில் உள்ள முக்கிய இரயில் நிலையங்களில் பணிபுரியும் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எஃப்) ஊழியர்களுக்கு ‘செக்வே’ எனப்படும் இரு சக்கர, தன்னியக்க சமநிலை, பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களை வழங்கியுள்ளது.

மாநிலத்தின் முதல் ஆஸ்ட்ரோ டர்ப் கால்பந்து தளம் திறப்பு

 • கோஹிமாவில் உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் நாகாலாந்து மாநிலத்தின் முதல் ஆஸ்ட்ரோ டர்ப் கால்பந்து தளத்தை புகழ்பெற்ற கால்பந்து வீரரான டாக்டர் டி.ஏஓ. அவர்களின் 100வது பிறந்தநாள் விழா கொண்டாட்டமாக திறந்துவைத்தனர்.

3000 கோடி ரூபாய் மதிப்புள்ள நான்கு நெடுஞ்சாலை திட்டங்கள்தொடங்கப்பட்டது

 • சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ராஜஸ்தானில் 3 ஆயிரத்து 237 கோடி ரூபாய் மதிப்புள்ள நான்கு தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 

அமேரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தையை தொடர சீனாவின்உயர் அதிகாரி வாஷிங்டன் வந்தார்

 • சீனாவின் உயர் வர்த்தக அதிகாரி வாஷிங்டன் வந்தடைந்தார்; உலகின் முதல் இரண்டு பொருளாதார நாடுகள் முக்கியமான வர்த்தக பேச்சுவார்த்தைக்கு தயார் செய்கின்றன. 

PISA 2021 இல் பங்கு பெறுவதற்கு OECD உடன் இந்தியா உடன்படிக்கை

 • சர்வதேச மாணவர் மதிப்பீடு திட்டம் – PISA 2021 இந்தியாவின் பங்கேற்புக்கான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) உடன் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

பாரத் யாத்ரா

 • ஸ்வஸ்த் பாரத் யாத்ரா, உலகின் மிகப்பெரிய சைக்லோத்தான் மக்கள் சரியான உணவை சாப்பிடுவதற்கான விழிப்புணர்வுக்காக புது தில்லியில் முடிவடைந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி உலக உணவு தினத்தன்று இந்தப் பிரச்சாரம் தொடங்கப்பட்டது. செய்தி – ‘பாதுகாப்பனதை சாப்பிடுங்கள், ஆரோக்கியமானதை சாப்பிடுங்கள், சத்துக்கள் நிறைந்ததை சாப்பிடுங்கள்’.

ஹஜ் மீதான ஜிஎஸ்டி 18% முதல் 5% வரை குறைக்கப்பட்டது

 • ஹஜ் மீதான ஜி.எஸ்.டி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார். இதனால் இந்த வருடம் ஹஜ் யாத்ரீகர்களுக்கு விமான கட்டணத்தை கணிசமாகக் குறைத்து 113 கோடி ரூபாய்களை சேமிக்க உதவும்.

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு ரூ.7,214.03 கோடிநிதியுதவி வழங்க ஒப்புதல்

 • மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்நிலைக் குழு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, கூடுதல் நிதியாக, ஆறு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கு ரூ.7214.03 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

விருதுகள்

நியூயார்க் டைம்ஸ் டிராவல் ஷோ 2019

 • ‘சிறந்த ஷோவுக்கான’ சிறப்பு விருது – இந்தியா

விளையாட்டு செய்திகள்

சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீச அம்பத்தி ராயுடுவுக்கு ஐசிசி தடைவிதித்தது

 • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராகிய அம்பத்தி ராயுடுவின் பந்துவீச்சு விதிமுறைக்கு புறம்பாக இருப்பதால் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பந்து வீச ஐசிசி தடை விதித்துள்ளது.

இந்தியா Vs நியூசிலாந்து பெண்கள் ஒருநாள் தொடர்

 • இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here