புவி வெப்பமடைவதை தடுக்க அவசர நடவடிக்கையாக பெல்ஜியத்தில் காலநிலை அணிவகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வானது பெல்ஜியத்தின் மிகப்பெரிய காலநிலைப் பேரணியாக விளங்கியது.
மாநாடுகள்
ICAR NAHEP ஐஅறிமுகப்படுத்தியது
இந்திய விவசாய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR) திறமையை ஈர்க்க மற்றும் நாட்டில் அதிக விவசாய கல்வியை வலுப்படுத்துவதற்காக நாட்டின் விவசாய வேளாண் கல்வி திட்டத்தை (NAHEP) அறிமுகப்படுத்துகிறது.
நாட்டின் இரண்டாவது வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (IARI) ஜார்கண்டிலுள்ள பாரஹியில் நிறுவப்பட்டது.
தொழில்நுட்பஜவுளிபற்றியதேசியகூட்டம்
2019 ஜனவரி 29 ஆம் தேதி மும்பையில் ஜவுளித்துறை அமைச்சகம் டெக்னிக்கல் ஜவுளி பற்றிய தேசியக் கூட்டத்தை நடத்தவுள்ளது. டெக்னோடெக்ஸ் 2019 க்கு ஒரு ஒத்திகை நிகழ்ச்சியாக இது இடம்பெறும். மத்திய ஜவுளித்துறை அமைச்சரான ஸ்மிருதி ஸுபின் இராணி தலைமையில் இந்த மாநாடு நடைபெறும்.
வேளாண் துறையில் திறமையை மேம்படுத்துவதற்காக வேளாண் அமைச்சகம் & விவசாயிகளின் நல்வாழ்வு மற்றும் திறன் மேம்பாட்டு & தொழில்முனைவோருக்கான அமைச்சகம் ஆகியவற்றிற்கு இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
விளையாட்டுசெய்திகள்
ஆஸ்திரேலியஓபன்டென்னிஸ்
மெல்போர்னில் நடைபெற்ற 7 வது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை ரபேல் நடாலை வீழ்த்தி நோவக் ஜோகோவிக் வென்றார்.
உலக டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் முதல் இடம் பிடித்த ஆசிய வீரர் எனும் சாதனை படைத்தார் நவோமி ஒசாகா.
இந்தோனேசியாமாஸ்டர்ஸ்பேட்மிண்டன்
மூன்று முறை உலக சாம்பியனான கரோலினா மரின் காலில் காயம் காரணமாக இறுதிப்போட்டியில் இருந்து விலகியதால் சாய்னா நேவால் தனது முதல் இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்றார்.