TNPSC Current Affairs 2019 in Tamil 27.01.2019– Download as PDF

0
99
current affairs jan 27 tamil

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அடிக்கல்நாட்டினார்

  • மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
  • மதுரை, தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிகளில் மேம்பாட்டுத் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
  • 12 அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களும் திறந்துவைக்கப்பட்டன. 

இஸ்ரேல் நிலைப்பாட்டால் மலேசியாவில் நடைபெற இருந்த உலகபாரா நீச்சல் போட்டி ரத்து

  • 2019 உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப்பை நடத்தும் உரிமையை இஸ்ரேலிய வீரர்கள் பங்கேற்க அனுமதிக்க மறுத்ததால் மலேசியா இழந்து விட்டது.

உத்தரா தேவி

  • ‘உத்தரா தேவி’ கொழும்பு – கங்கசந்துரை இரயில் இந்தியாவிலிருந்து புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட லோக்கோமோட்டிவ் பவர் செட்டை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்தார்.

இடைநிலை அமர்வு ஆலோசனை குழு கூட்டம்

  • இந்திய உணவுத் துறை மற்றும் இந்திய தரக்கட்டுப்பாடுகளின் செயல்பாட்டை ஆய்வு செய்வதற்காக, பெங்களூரில் ஒருங்கிணைந்த குழு ஆலோசனை குழுக் கூட்டம், நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்திற்கான மத்திய அமைச்சர், ராம் விலாஸ் பஸ்வான் தலைமையில் நடைபெற்றது.

புலிகளின் பாதுகாப்பு குறித்த சர்வதேச மாநாடு

  • புலிகள் பாதுகாப்பு குறித்த 3 வது சர்வதேச மாநாடு புது தில்லியில் துவங்கியது. உலக அளவில் 13 நாடுகளில் தான் தற்போது வனத்தில் புலிகள் உள்ளன. உலக அளவில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கையில் இந்தியாவில் 70 சதவீத புலிகள் உள்ளன.

திட்டங்கள்

வந்தே பாரத எக்ஸ்பிரஸ்

  • இந்திய இரயில்வே உள்நாட்டிலேயே தயாரான ட்ரெயின் 18க்கு – வந்தே பாரத எக்ஸ்பிரஸ் என்று பெயரிட்டுள்ளது.
  • இது உலக நாடுகளில் உள்ளது போன்ற ‘வைபை’ வசதி, ஜிபிஎஸ் தகவல், ‘டச் பிரீ’ பயோ டாய்லெட், எல்இடி லைட்டுகள், வசதியுடன் இயங்கும் இந்தியாவின் முதல் அதிவேக ரயிலாகும். டெல்லி மற்றும் வாரணாசி இடையே 160 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும். 

விருதுகள்

  • இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.ஏ.ஆர்), குடியரசு தின அணிவகுப்பு-2019ல், ‘கிசான் காந்தி’ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அட்டவணைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ICAR அணியிடம் விருதை ஒப்படைத்தார்.
  • ஐ.சி.ஏ.ஆர்.-ன் அட்டவணை பால் பண்ணைகளின் முக்கியத்துவம், கிராமப்புற செழிப்புக்காக நாட்டு இனங்களைப் பயன்படுத்துதல் மற்றும் கால்நடை வளர்ப்பு சார்ந்த கரிம விவசாயத்தைக் காட்டியது..

மொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்

‘RDP இந்தியா 2019′

  • அரசின் டிஜிட்டல் இந்தியா பிரச்சாரத்துடனான ஒத்திசைவில் ஒரு புதிய முயற்சியாக, குடியரசு தின நிகழ்ச்சியின் சிறப்புகளை உலகில் உள்ள அனைத்து மக்கள் காணும் நோக்கத்துடன், பாதுகாப்பு அமைச்சகம் குடியரசு தினத்தன்று ‘RDP இந்தியா 2019’ என்ற மொபைல் செயலியை தொடங்கி வைத்தது.

விளையாட்டு செய்திகள்

அமெச்சூர் கோல்ஃப் சாம்பியன்ஷிப்

  • இந்தியாவின் கார்திக் சர்மா ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நியூ சவுத் வேல்ஸ் ஆண்கள் அமெச்சூர் கோல்ஃப் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றார் .

வேலம்மாள்ஏஐசிஎஃப் சர்வதேச பெண்கள் கிராண்ட் மாஸ்டர் சுற்றுராபின் சதுரங்கப் போட்டி

  • வேலம்மாள்-ஏஐசிஎஃப் சர்வதேச பெண்கள் கிராண்ட் மாஸ்டர் சுற்று-ராபின் செஸ் போட்டி சென்னையில் தொடங்க உள்ளது.
  • இது அனைத்து இந்திய சதுரங்க சம்மேளனத்தின் ஒரு புதிய முயற்சியாகும், இது நம் நாட்டின் இளம் சர்வதேச பெண் போட்டியாளர்களுக்கு உள்ளூரில் WGM தகுதி பெற வாய்ப்புகளை வழங்கும்.

இந்தியா Vs நியூஸிலாந்து ஒரு நாள் தொடர்

  • மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி, 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 3-0 என முன்னிலை வகிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here