TNPSC Current Affairs 2019 in Tamil 25.01.2019– Download as PDF

0
69
current affairs tamil jan 25

தமிழக நிகழ்வுகள்

  1. பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்தில், பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களிடம் விழிப்புணர்வையும் நல்ல சிந்தனையையும் வளர்க்கும் வகையில்தமிழக காவல் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணைந்து, தமிழகத்தில் முதன் முதலாக சென்னையில் “மாணவர் காவல்படையை” தொடங்கியுள்ளது.
    • மாணவர் காவல்படை திட்டம் மத்திய உள்துறை அமைச்சகத்தினால் 2018 ஜூலை-ல்அறிமுகம் செய்யப்பட்டது.

இந்திய நிகழ்வுகள்

  1. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 122வது பிறந்தநாள் விழாவை (ஜனவரி 23, 2019)நினைவு கூறும் வகையில் செங்கோட்டையில்(புதுடெல்லி) சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகத்தை இந்திய பிரதமர் திறந்து வைத்துள்ளார்.
  2. மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் உற்பத்தியாகும் முக்கிய பொருளை காட்சிப்படுத்துவதற்காக “ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு (One district one product)” என்ற திட்டத்தை உத்திரப் பிரதேச அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
    • இதன் மூலம் அம்மாநிலத்தின் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படும்.

உலக நிகழ்வுகள்

  1. உலக பொருளாதார மன்றம் (WEF) வெளியிட்டுள்ள, முதலீடுகளை ஈர்க்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவானது, நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
    • பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்த நாடுகள்:-
      1. அமெரிக்கா
      2. சீனா
      3. ஜெர்மனி
    • உலக பொருளாதார மன்ற மாநாடு நடைபெற்ற இடம் – தவோஸ்(சுவிட்சர்லாந்து).
TNPSC Current Affairs: January 2019 – World News Image

விளையாட்டு நிகழ்வுகள்

  1. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் மூன்று விருதுகளை விராட் கோலி (இந்திய அணியின் கேப்டன்) பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
    • 2018-ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர்
    • 2018-ன் சிறந்த ஒருநாள் தொடர் வீரர்
    •  2018-ன் சிறந்த வீரருக்கான கேரி சோபர்ஸ் விருது.
  2. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின், 2018ம் ஆண்டுக்கான “வளரும் வீரர் விருது” ரிஷப் பந்த்-க்கு (இந்திய இளம் விக்கெட் கீப்பர்) வழங்கப்பட்டுள்ளது.

அறிவியல் & தொழில்நுட்பம்

  1. இஸ்ரோவானது, சதிஸ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் (ஆந்திரப் பிரதேசம்) இருந்து, “கலாம் சாட் மற்றும் மைக்ரோசாட்-R” என்ற இரு செயற்கை கோளை, PSLV C- 44 (பி.எஸ்.எல்.வி சி-44) என்ற இராக்கெட் மூலம் ஜனவரி 24, 2019ல் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
    • கலாம் சாட் செயற்கைகோளின் எடை – 34g
    • எல்லை கண்காணிப்பு இமேஜிங் செயற்கைகோளான மைக்ரோசாட்-R ன் எடை – 690 kg.

பொருளாதார நிகழ்வுகள்

  1. சர்வதேச செலவாணி நிதியம் (IMF) வெளியிட்டுள்ள சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறித்த அறிக்கையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2019ஆம் ஆண்டில் 7.5சதவீதமாகவும், 2020ல் 7.7 சதவீதமாகவும் இருக்கும் என கணித்துள்ளது.
    • 2018ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here