TNPSC Current Affairs 2019 in Tamil 24.03.2019 – Download as PDF

0
50
CA TAMIL 24 MARCH

முக்கிய தினங்கள்

மனித உரிமை மீறல்களால் உரிமை மற்றும் கண்ணியத்திற்கான சர்வதேச தினம் – மார்ச் 24 (International Day for the Right to the truth concerning Gross Human Rights Violations and for the Dignity of Victims)
  • மொத்த மனித உரிமை மீறல்களின் உண்மைக்கான உரிமை மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியத்திற்கான சர்வதேச தினம் ஆண்டுதோறும் மார்ச் 24 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
உலக காசநோய் தினம் – மார்ச் 24 (World Tuberculosis Day 2019)
  • காசநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மார்ச் 24 அன்று, கடைபிடிக்கப்படுகிறது.
  • 2019ம் ஆண்டின் உலக காசநோய் தின கருப்பொருள் (World Tuberculosis Day 2019 Theme) : இதுதான் நேரம் – தேவை – காசநோய் இல்லா ஓர் உலகிற்கான தலைவர்கள் (It’s time wanted : Leaders for a TB-Free world) என்பதாகும்.

தமிழக நிகழ்வுகள்

  • தமிழ்நாட்டின் தேர்தல் செலவினங்களின் சிறப்புக் கண்காணிப்பாளராக முன்னாள் இந்திய வருவாய் பணி அதிகாரியான மது மகாஜன் என்பவரை இந்தியத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இவர் வாக்காளர் புகார் எண் 1950 மற்றும் சி-விஜில் செயலி ஆகியவற்றின் மூலம் பெறப்படும் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய நிகழ்வுகள்

  • குறைந்த செலவில் விமானச் சேவையை அளிக்கும் நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் இந்தியாவின் முதலாவது நிறுவனமாக சர்வதேச வான்வழிப் போக்குவரத்து மன்றத்தில்(International Air Transport Association – IATA) இணைந்துள்ளது.

உலக நிகழ்வுகள்

  • இந்தியா மற்றும் ராயல் மலேசியா விமானப்படை பங்கேற்கும் “LIMA – 2019” (Langkawi International Maritime Aero Expo) என்ற விமானப் படை கண்காட்சியானது மலேசியாவின் லாங்குவாய் நகரில் மார்ச் 26 முதல் மார்ச் 30 வரை நடைபெற உள்ளது.

புத்தகங்கள்

  • “The Great Disappointment: How Narendra Modi Squandered a unique opportunity to transform the Indian Economy” என்ற தலைப்பிலான புத்தகத்தை பொருளாதார, அரசியல் விமர்சகர் சல்மான் அனீஸ் சோஸ் அவர்களால் எழுதி வெளியிடப்பட்டுள்ளது.

விளையாட்டு நிகழ்வுகள்

  • கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னீஸ் போட்டியானது பாரீஸ் நகரில் மே 26ல் தொடங்குகிறது.
    • 2018 பிரெஞ்ச் ஓபன் டென்னீஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்கள்.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு – ரபேல் நடால் (ஸ்பெயின்)
    • பெண்கள் ஒற்றையர் பிரிவு – சிமோனா ஹாலெப் (ருமேனியா)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here