TNPSC Current Affairs 2019 in Tamil 24.01.2019– Download as PDF

0
35
current affairs jan 24

முக்கிய தினங்கள்

  • 47வது மாநில தினம் – ஜனவரி 21.
    • மணிப்பூர், மேகாலயா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் தங்கள் 47வது மாநில தினத்தை 21 ஜனவரி(2019) கொண்டாடின. 1972ம் ஆண்டில், வடகிழக்குப் பிராந்திய மறுசீரமைப்பு சட்டம் 1971-ன் படி ஜனவரி 21ம் தேதி இம்மூன்று மாநிலங்களும் முழுமையான மாநிலங்களாக மாறின.

தமிழக நிகழ்வுகள்

  • இந்தியாவிலேயே முதன்முறையாக, தமிழகத்தில் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
    • முதற்கட்டமாக, சென்னை எழும்பூரில் செயல்படும் மாநில மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டது.

இந்திய நிகழ்வுகள்

  • ஜி.எஸ்.டி அமலாக்கத்திற்கு பிறகு மாநிலங்கள் எதிர்கொள்ளும் வருவாய் பற்றாக்குறையை ஆய்வு செய்வதற்காக, பீகார் துணை முதல்வாரன “சுஷில் மோடி”தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
    • யூனியன் பிரதேசங்களில் புதுச்சேரியானது அதிகபட்சமாக 43% பற்றாக்குறையைஎதிர்கொண்டுள்ளது.
  • உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் 15வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாட்டை (பிரவாசி பாரதிய திவாஸ் மாநாடு) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
    • இம்மாநாட்டின் கருத்துரு: “புதிய இந்தியாவை உருவாக்குவதில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு” என்பதாகும்.

அறிவியல் & தொழில்நுட்பம்

  • கைத்தறி நெசவாளர்களுக்கு உதவுவதற்காக மைக்ரோசாப்ட் இந்தியாவானது, அதன் ரீவேவ் (re-weave) திட்டத்தின் கீழ், re-weave.in என்ற மின்னனு வர்த்தக தளத்தை தொடங்கியுள்ளது.
    • ரீவேவ் திட்டமானது மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனத்தால், மக்கள் சேவை முயற்சியின் ஒரு பகுதியாக 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

விருதுகள்

    • இந்தியப் பெண்களின் ஆக்கப் பூர்வமான எழுத்துக்களை அங்கீகரிப்பதும் ஊக்குவிப்பதுமே நோக்கமாகக் கொண்ட, மகளிருக்கான குரல் விருதானது, அபீஜெய் கொல்கத்தா இலக்கிய திருவிழாவில், அமெரிக்காவில் உள்ள இந்திய கவிஞரான “ரஞ்சனா முரளிக்கு”வழங்கப்பட்டுள்ளது.
      • இவரின் இரண்டாவது புத்தகமான “Clearly you are ESL” என்ற புத்தகம் சிறந்த இந்திய கவிதை சேகரிப்பு என்ற விருதை வென்றுள்ளது.
  • குறிப்பு:
    • இவரின் முதல் புத்தகம் “பார்வையற்ற திசைகள்” என்பதாகும்.

விளையாட்டு நிகழ்வுகள்

  • 2020ல் நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய தலைவராக, பிரேந்திர பிரசாத் பைஷ்யா(இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பின் தலைவர்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • ஒலிம்பிக் போட்டிக்கான இந்தியத் தலைவர் கௌரவமானது, முதன்முறையாகபளுதூக்கும் அணிக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • மலேசியாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான உலக கோல்ஃப் சாம்பியன் ஷிப் போட்டியில் 8 வயதிற்குட்பட்டோர் பிரிவில் இந்தியாவின் “கார்த்திக் சிங்” சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
    • இதன் மூலம், உலக பட்டத்தினை வென்ற இளவயது இந்தியர் என்ற பெருமையை “கார்த்திக் சிங்” பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here