TNPSC Current Affairs 2019 in Tamil 23.03.2019 – Download as PDF

0
49
CA TAMIL MARCH 24

முக்கிய தினங்கள்

உலக வானியல் தினம் – மார்ச் 23 (World Meteorological Day)

  • உலக வானியல் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 அன்று கடைபிடிக்கப்படுகிறது. 2019ம் ஆண்டிற்கான உலக வானியல் தின மையக்கருத்து:- “சூரியன், பூமி மற்றும் வானிலை” (The Sun, The Earth and The Weather) என்பதாகும்.

தமிழக நிகழ்வுகள்

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு (2018) வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைப்பொழிவை குறைவாகப் பெற்றுள்ள சென்னை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, விருதுநகர் உட்பட “24” மாவட்டங்கள் நீரியல் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • மேலும் கோவை, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள “38 வட்டாரங்கள்” வறட்சி வட்டாரங்களாகஅறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நிகழ்வுகள்

1919ம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையில், பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய் தாக்கி கொல்லப்பட்டதால், பகத்சிங் (பஞ்சாப்), ராஜகுரு (மராட்டியம்), சுக்தேவ்(பஞ்சாப்) ஆகிய சுதந்திர போராட்ட வீரர்கள் ஸாண்டர்ஸ் என்ற ஆங்கில போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றனர்.

  • இதனால் இம்மூன்று பேரும் 1931ம் ஆண்டு மார்ச் 23 அன்று தூக்கிலிடப்பட்டன. பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோரின் நினைவு தினத்தை (மார்ச் 23) பஞ்சாப் அரசு சார்பில் இளைஞர் அதிகாரமளித்தல் தினமாக (Youth Empowerment Day) கடைபிடிக்கப்படுகிறது.

உலக நிகழ்வுகள்

ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சிக்கான தீர்வுகள் அமைப்பு (UNSDSN – United Nations Sustainable Development Solution Network) வெளியிட்டுள்ள, உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவானது 140வது இடத்தில் உள்ளது.

  • 156 நாடுகள் கொண்ட இப்பட்டியலில் பின்லாந்து முதலிடத்திலும், டென்மார்க் 2வது இடத்திலும், நார்வே மூன்றாம் இடத்திலும் உள்ளது. தெற்கு சூடான் 156வது (கடைசி) இடத்தில் உள்ளது.

அறிவியல் & தொழில்நுட்பம்

சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி கடல்நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருளை உற்பத்தி செய்யும் வழிமுறையை ஸ்டான்போர்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

  • இவர்கள் கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் வாயு மற்றும் ஆக்ஸிஜன் வாயுக்களை தனித்தனியாக பிரிப்பதற்கான ஒரு புதிய வழியைக் கண்டறிந்துள்ளனர். நீர் மூலக்கூறுகள் மின்சாரத்துடன் கூடிய ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவையாக பிரிக்கப்படுவது “எலக்ட்ரோலைசிஸ்” எனப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here