TNPSC Current Affairs 2019 in Tamil 23.01.2019– Download as PDF

0
28
current affairs tamil jan 23
  • தமிழ்நாட்டில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2019 (Tamil Nadu Global Investor Meet 2019), ஜனவரி 23 அன்று தொடங்குகிறது.
    • தமிழ்நாட்டில் 2015 ஆம் ஆண்டு முதன் முறையாக “உலக முதலீட்டாளர்கள் மாநாடு” நடத்தப்பட்டது.
  • 25-வது “தரைவழி மற்றும் செயற்கைக்கோள் ஒளிபரப்பு மீதான சர்வதேச மாநாடு” மற்றும்“BES கண்காட்சி” ஆகியவை புதுடெல்லியில் நடைபெற்றது.
    • கருத்துரு : தகவல் தொழில்நுட்ப உலகில் அடுத்த தலைமுறை ஒளிபரப்பு என்பதாகும்.

TNPSC Current Affairs: January 2019 – National News Image

  • நகர்ப்புற சூழலில் “கட்டிடக்கலை பாரம்பரியத்தை பாதுகாக்கும், நகரம்” குறித்த ஆய்வில், பிரேசிலின் “ரியோ டி ஜெனீரோ” நகரை “கட்டிடக் கலையின் உலகத் தலைநகராக”யுனெஸ்கோ அறிவுத்துள்ளது.
    • யுனெஸ்கோ ஆரம்பிக்கப்பட்ட நாள் – 16 நவம்பர் 1945
    • யுனெஸ்கோவின் தலைமையகம் – பாரிஸ் (பிரான்ஸ்).
  • புனே (மகாராஷ்டிரா) நகரில் நடைபெற்ற, இரண்டாவது “கேலோ – இந்தியா இளையோர் விளையாட்டு போட்டியில்”(Khelo Inida Youth Games – 2019) மகாராஷ்டிரா மாநிலம் 85 தங்கம் உட்பட மொத்தம் 228 பதக்கங்கள் குவித்து சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது.
    • தமிழகம் 27 தங்கப்பதக்கத்துடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

TNPSC Current Affairs: January 2019 – Sports News Image

  • அமெரிக்காவில் “சீக்கியர்களுக்கு எதிராக இருந்த கொள்கைகளுக்கு” எதிராக பிரச்சாரம் செய்த இந்திய அமெரிக்கரும் சீக்கியருமான “குரிந்தர் சிங் கல்சா” – விற்கு, இன்டியானா நாளிதழ்“ரோசா பார்க்ஸ் முன்னோடி விருதை (Rosa Parks Award – 2019) வழங்கி கௌரவித்துள்ளது.
  • சர்வதேச முகவாண்மை நிறுவனமான பி.டபிள்யூ.சி வெளியிட்டுள்ள, “உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிப் பட்டியலில்” இந்தியா 5-வது இடத்தைப் பிடித்துள்ளது.
    • இப்பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும் சீனா 2-வது இடத்திலும் உள்ளது. ஜப்பான், ஜெர்மனி முறையே 3 மற்றும் 4வது இடத்தில் உள்ளது.
    • கடந்த ஆண்டு இந்தியா 7வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நியமனங்கள்

  • ஸ்வீடன் நாட்டின் புதிய பிரதமராக இடதுசாரி சோஷியலிஸ்ட் ஜனநாயகக் கட்சியின் தலைவர் “ஸ்டீஃபன் லோஃப்வென்” (Stefan Lofven) நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here