TNPSC Current Affairs 2019 in Tamil 21.03.2019 – Download as PDF

0
18
CA TAMIL- 21 MARCH

முக்கிய தினங்கள்

மார்ச் 21 –இனவாத பாகுபாடை நீக்குவதற்கான சர்வதேச தினம்

 • இனவாத பாகுபாடை நீக்குவதற்கான சர்வதேச தினம் ஆண்டுதோறும் 21 மார்ச் அன்று அனுசரிக்கப்படுகிறது. 1966 ஆம் ஆண்டு இந்த தினத்தை ஐ.நா. பொதுச் சபை பிரகடனப்படுத்தியது. சர்வதேச சமூகம் அனைத்து வகையான இனப் பாகுபாட்டையும் அகற்றும் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும் என்று கோரியது.
 • 2019 தீம்உயரும் தேசியவாத மக்கள்தொகை மற்றும் தீவிர மேலாதிக்க சித்தாந்தங்களைக்கையாளுதல் மற்றும் எதிர்ப்பது

மார்ச் 21 – உலக கவிதை தினம்

 • உலகக் கவிதை தினம் 21 மார்ச் அன்று கொண்டாடப்படுகிறது. யுனெஸ்கோவால் (ஐ.நா. கல்வி, விஞ்ஞானம் மற்றும் கலாச்சார அமைப்பு) 1999 ஆம் ஆண்டில் இந்த தினம் அறிவிக்கப்பட்டது. அதன் நோக்கம் உலகம் முழுவதும் கவிதை வாசிப்பு, எழுத்து, வெளியீடு மற்றும் போதனைகளை ஊக்குவிப்பதாகும்.

மார்ச் 21 – உலக டவுன் சிண்ட்ரோம் தினம்

 • உலக டவுன் சிண்ட்ரோம் தினம் (WDSD) மார்ச் 21 ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. உலகெங்கிலும் வாழும் மற்றும் வேலை செய்யும் டவுன் சிண்ட்ரோம் பாதித்த மக்கள் குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், டவுன் சிண்ட்ரோம் கொண்ட மக்களின் உரிமைகள், அவர்களின் நன்மைக்காக ஒரு உலகளாவிய குரலை உருவாக்கவும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

மார்ச் 21 – சர்வதேச காடுகள் தினம்

 • ஐ.நா. பொதுச் சபை 2012ஆம் ஆண்டில் 21 மார்ச்-ஐ சர்வதேச காடுகள் (ஐ.டி.எஃப்) தினமாக அறிவித்தது. இந்த தினம் அனைத்து வகையான காடுகளின் முக்கியத்துவத்தையும் அது பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த கொண்டாடப்படுகிறது.
 • ஒவ்வொரு சர்வதேச காடுகள் தினத்திற்கான தீம்-ஐ காடுகள் மீதான ஒத்துழைப்பு கூட்டமைப்பு தேர்வு செய்கிறது.
 • 2019 தீம் – காடுகள் மற்றும் கல்வி.

இந்திய நிகழ்வுகள்

 • தேசிய மீத்திறன் கணினி திட்டத்தின் கீழ் (NSM-National Supercomputing mission) இந்தியாவின் முதலாவது 1.3 பெட்டபிளாப் உயர் செயல்திறன் கொண்ட கணினி வசதியை அமைப்பதற்காக ITI-கராக்பூர், மேம்படுத்தப்பட்ட கணினி வளர்ச்சி மையத்துடன் (C-DAC-Centre For Development of Advanced Computing) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இளம் வாக்காளர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வி வளாக தூதர்கள் நியமனம்

 • லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக அசாமில் இளம் வாக்காளர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வி வளாக தூதர்கள் நியமனம். 12 கல்வி வளாக தூதர்கள் தெரு நாடகங்கள், சுவரொட்டி தயாரித்தல், மாவட்டத்தின் கல்வி நிறுவனங்களில் VVPAT செயல் விளக்கம் போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

உலக நிகழ்வுகள்

நியூசிலாந்து தாக்குதல் ஆயுதங்களை தடை செய்தது

 • நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற மோசமான துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, கடுமையான புதிய துப்பாக்கிச் சட்டங்களின் கீழ் இராணுவ பாணி அரை தானியங்கி மற்றும் தாக்குதல் துப்பாக்கிகள் போன்ற தாக்குதல் ஆயுதங்களை உடனடியாக தடை செய்ய உத்தரவு பிறப்பித்தார் நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா அர்டெர்ன்.

அறிவியல் & தொழில்நுட்பம்

முதன்மை சுகாதார அமைப்புடன் TB சேவைகளை ஒருங்கிணைக்கவும்

 • உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி 2017ம் ஆண்டில் உலகம் முழுவதிலும் இருந்து 10 மில்லியன் பேர் புதிதாக காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில்74 மில்லியன் மக்கள் இந்தியாவில் இருந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2016ல் 2.79 மில்லியனாக இருந்தது குறிப்படத்தக்கது. “2025 ஆம் ஆண்டளவில் டிபி ஐ அகற்றுவதற்கான” அதிகபட்ச லட்சிய இலக்கை அரசு நிர்ணயித்துள்ளது.

நியமனங்கள்

 • இந்திய அமெரிக்கன் நியோமி ராவ் – கொலம்பியா மாவட்டத்திற்கான அமெரிக்க சர்க்யூட்நீதிபதி

விருதுகள்

 • இந்திய எழுத்தாளர் ரகு கர்நாட், 2019 ஆம் ஆண்டின் வின்ட்ஹாம்-காம்ப்பெல் பரிசை (Windham-Campbell Prize) வென்றுள்ளார்.
  • இந்த விருதானது, அவரது முதல் புத்தகமாக “Farthest Field: An Indian Story of the Second World War” என்ற புத்தகத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.
 • ஆண்டின் சிறந்த வீரருக்கான சர் ரிச்சர்ட் ஹாட்லி பதக்கம் – கேன் வில்லியம்சன்

விளையாட்டு செய்திகள்

சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

 • ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அபுதாபியில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டுப் போட்டி 2019ல் 368 பதக்கங்களை இந்தியா வென்றது. 85 தங்கம், 154 வெள்ளி மற்றும் 129 வெண்கலப் பதக்கங்கள் இதில் அடங்கும்.

SAFF மகளிர் சாம்பியன்ஷிப்

5வது தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் SAFF மகளிர் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நேபாளத்தை இந்தியா எதிர்கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here