TNPSC Current Affairs 2019 in Tamil 20.03.2019 – Download as PDF

0
19
CA TAMIL - MARCH 20

முக்கிய தினங்கள்

உலக சிட்டுக்குருவிகள் தினம்-மார்ச் 20 (World Sparrow Day)

  • சிட்டுக் குருவிகளைப் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் தேதி உலக சிட்டுக்குருவி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2019 உலக சிட்டுக்குருவிகள் தின மையக் கருத்து: “நான் விரும்பும் சிட்டுக்குருவி” (I Love Sparrow) என்பதாகும்.

TNPSC Current Affairs: March 2019 – Important Days News Image

சர்வதேச மகிழ்ச்சி தினம்-மார்ச் 20 (International Day Of Happiness)

  • உலகளாவிய அளவில், சர்வதேச மகிழ்ச்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 அன்று கடைபிடிக்கப்படுகிறது. 2019-ஆம் ஆண்டின் சர்வதேச மகிழ்ச்சி தின மையக்கருத்து: “மகிழ்ச்சியாக சேர்ந்திருப்போம்” (Happier Together) என்பதாகும்.

இந்திய நிகழ்வுகள்

  • மக்களிடையே டிஜிட்டல் முறையில் தேர்தல் கல்வியறிவை மேம்படுத்துவதற்கான முதல் முயற்சியாக, அசாம் மாநிலம் பொதுசோவை மையம் (Common Service Center) “i-help” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

TNPSC Current Affairs: March 2019 – National News Image

  • இந்திய இராணுவம் மற்றும் மியான்மர் இராணுவம் ஆகியவை இணைந்து, கலாதான் பல்முனைய போக்குவரத்து திட்டத்திற்கு அச்சுறுத்தல் கொடுத்து வந்த கிளர்ச்சி குழுக்களின் முகாம்களை மியான்மரில் அழித்துள்ளது. இந்த நடவடிக்கையானது “சன்ரைஸ் நடவடிக்கை” (Operation Sunrise) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

உலக நிகழ்வுகள்

30 ஆண்டுகள் பதவி வகித்த கஜகஸ்தான் ஜனாதிபதி பதவி விலகினார்

  • கஜகஸ்தான் உதயமானது முதல் 30 ஆண்டுகள் அதிபராக பதவிவகித்த நர்ஸுல்தான் நாஸர்பாயெவ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இடைக்கால அபதிராக காஸிம் ஜோமார்ட் டாகாயெவ் பதவியேற்றுள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்தார்.

கஜகஸ்தான் நாட்டின் தலைநகரான அஸ்தானாவுக்கு நர்ஸுல்தான் எனப் பெயர்சூட்டப்பட்டது

  • புதிய அதிபர் பதவியேற்றவுடன் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த நீண்டகாலம் ஆட்சி புரிந்த முன்னாள் அதிபரின் பெயரை கஜகஸ்தான் நாட்டின் தலைநகரான அஸ்தானாவுக்கு சூட்ட கஜகஸ்தான் பாராளுமன்றத்தில் வாக்களித்தது. அவரை கவுரவிக்கும் விதமாக அஸ்தானாவுக்கு நர்ஸுல்தான் எனப் பெயர் சூட்டப்பட்டது.

அறிவியல் & தொழில்நுட்பம்

செவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்ப நாசா திட்டம்

  • “செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பவுள்ள ஹெலிகாப்டர், ஒரு சிறிய, தன்னியக்க ரோட்டார்கிராப்ட் அமைப்புடன், நாசா ஏஜென்சியின் செவ்வாய் கிரகத்திற்கான 2020 ரோவர் திட்டத்துடன் பயணிக்கவுள்ளது, ஜூலை 2020 இல் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வணிகம் & பொருளாதாரம்

ஐரோப்பிய ஒன்றிய கட்டுப்பாட்டாளர்கள் கூகுளிற்கு 1.49 பில்லியன் யூரோவை அபராதமாகவிதித்தது

  • ஐரோப்பிய ஒன்றியம் (EU) நம்பகத்தன்மை கட்டுப்பாட்டு அதிகாரிகள், ஆன்லைன் தேடல் விளம்பரதார போட்டியாளர்களை தடுத்ததற்காக கூகுள் நிறுவனத்திற்கு49 பில்லியன் யூரோவை அபராதமாக விதித்தனர், இது கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறுவனத்திற்கு விதிக்கப்படும் மூன்றாவது அபராதம் ஆகும்.

நியமனங்கள்

  • முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பினாக்கி சந்திர கோஸ் – இந்தியாவின் முதல்லோக்பால்
  • மும்பை சமூக தொழிலாளி கவுரி சாவந்த் – முதல் திருநங்கை தேர்தல் தூதர்

விருதுகள்

  • கணிதத்திற்கான ஏபெல் பரிசு – அமெரிக்காவின் கரென் உல்லென்பெக் [பகுதி வித்தியாசசமன்பாடுகளில் தனது பணிக்காகஇந்த விருதை வெல்லும் முதல் பெண்]

விளையாட்டு செய்திகள்

டோக்கியோ 2020 ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • 2020ம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒலிம்பிக் ஜோதி கோப்பையை டோக்கியோ ஒலிம்பிக் நிர்வாகிகள் நேற்று அறிமுகம் செய்து வைத்தனர். ஜப்பானில் பிரபலமான சக்குரா(செர்ரி பிளாசம்)வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here