TNPSC Current Affairs 2019 in Tamil 19.03.2019 – Download as PDF

0
33

இந்திய நிகழ்வுகள்

  • புவிசார் குறியீட்டு பதிவகம் 5 வகையான காபிகளுக்கு புவிசார் குறியீடுகளைஅளித்துள்ளது.
    • கூர்க் அராபிகா காபி – கர்நாடகா
    • வயநாடு ராபஸ்டா காபி – கேரளா
    • சிக்மளுர் அராபிகா காபி – கர்நாடகா
    • பாபா புடங்கிரி அராபிகா காபி – கர்நாடகா
    • அரக்கு பள்ளத்தாக்கு அராபிகா காபி – ஆந்திர பிரதேசம்
    • புவிசார் குறியீட்டு பதிவகம், சென்னையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக நிகழ்வுகள்

மும்பை பயங்கரவாத தாக்குதல்கள் மிகவும் மோசமானது என சீனா அறிவிப்பு

  • பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு நடத்திய 2008 மும்பை பயங்கரவாத தாக்குதல் மிகவும் மோசமானது என சீனா அறிவித்தது.

இடாய் சூறாவளியால் மூன்று தென் ஆப்பிரிக்க நாடுகளில் 1.5 மில்லியனுக்கும் அதிகமானமக்கள் பாதிப்பு

  • மொசாம்பிக், ஜிம்பாப்வே மற்றும் மலாவி ஆகிய நாடுகளில் இடாய் புயலின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளனர்; நூற்றுக்கணக்கானவர்கள் காணவில்லை மறறும் பின்தங்கிய கிராமப்புறப் பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கானோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
  • அருகருகே உள்ள மூன்று தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 1.5 மில்லியன் மக்கள் இடாய் புயலில் சிக்கி கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக ஐநா மற்றும் அரசு உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு

தி.மு.., ...தி.மு.தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன

  • தி.மு.க. தலைவர் எம்.கே. ஸ்டாலின் சென்னையில் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அ.இ.அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

மதுரை மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டது

  • மதுரை மக்களவை தொகுதிகளில், கூடுதலாக இரண்டு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இந்த தகவலை சென்னையில் வழங்கினார். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுகூடும் உலகப்புகழ்பெற்ற மதுரை மாநகரில் நடைபெறும் பிரபலமான கள்ளழகர் திருவிழாவைக் கருத்தில் கொண்டு இந்தமுடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அறிவியல் & தொழில்நுட்பம்

  • இந்தியாவின் முதல் மூன்று சுற்றுவட்டப் பாதையில் செயற்கைகோளை நிலைநிறுத்தும் இராக்கெட் “PSLV C-45” மூலம், இந்தியாவின் DRDO உருவாக்கிய எமிசாட் (EMISAT) மற்றும் இந்திய விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின்(IISC) நானோ செயற்கை கோள் உட்பட 30 செயற்கைகோள்கள், ஏப்ரல் 01, 2019ல் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

வணிகம் & பொருளாதாரம்

குடியிருப்பு மனைகளுக்கான புதிய ஜிஎஸ்டி வீதங்களின் மாற்றீட்டு திட்டத்திற்கு ஜிஎஸ்டிகவுன்சில் அனுமதி

  • ஜிஎஸ்டி கவுன்சில் புதிய கட்டணங்கள் மற்றும் சேவை வரி விகிதங்களை மாற்றுவதற்கான திட்டத்தை ஒப்புக் கொண்டது, இதன் கீழ் கட்டப்பட்டு வரும் கட்டடங்களை திருத்தப்பட்ட குறைந்த கட்டணத்தில் [உள்ளீட்டு வரிக் கடன் இல்லாமல்] மாற்றலாம் அல்லது முந்தைய விகிதங்களை பின்பற்றலாம்.

மாநாடுகள்

இந்தியாவில்ஆப்பிரிக்கா திட்டக் கூட்டுறவுக்கான 14 வது CII-EXIM வங்கிக் கூட்டம்

  • இந்தியா-ஆப்பிரிக்கா திட்டக் கூட்டுறவுக்கான 14 வது CII-EXIM வங்கிக் கூட்டம் புது தில்லியில் முடிவடைந்தது. இந்திய தொழில்துறை கூட்டமைப்பு, இந்திய EXIM வங்கி மற்றும் இணைந்து இந்த மூன்று நாள் மாநாட்டை ஏற்பாடு செய்தது.

நியமனங்கள்

  • புதிய கோவா முதல்வராக பதவியேற்றார் – பிரமோத் சாவந்த்
  • மகாராஷ்டிராவுக்கு சிறப்பு செலவின கண்காணிப்பாளர் – ஷைலேந்திர ஹந்தா
  • தமிழ்நாட்டிற்கான சிறப்பு செலவின கண்காணிப்பாளர் – மது மஹாஜன்

பாதுகாப்பு செய்திகள்

IND-INDO CORPAT

  • 19 மார்ச் முதல் 04 ஏப்ரல் 2019 வரை இந்திய-இந்தோனேசியா ஒருங்கிணைந்த ரோந்துப் பிரிவின் (IND-INDO CORPAT) 33வது பதிப்பின் திறப்பு விழாவில், பங்கேற்பதற்காக இந்தோனேசியா கடற்படை கப்பல் மற்றும் கடல்வழி ரோந்துக்கப்பல் போர்ட் பிளேர், அந்தமான் & நிக்கோபார் தீவிற்கு வந்தடைந்தது.

விளையாட்டு செய்திகள்

ஆப்கானிஸ்தான் முதல் டெஸ்ட் வெற்றி பெற்றது

  • உத்தராகாண்ட் டெஹ்ராடூனில் நடைபெற்ற ஆட்டத்தில் அயர்லாந்து அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் அணி தனது முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது.

ஐஎஸ்எஸ்எஃப் ஷாட்கண் துப்பாக்கிச்சூடு உலகக் கோப்பை

  • மெக்ஸிகோவின் அசபுல்கோவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் ஷாட்கண் துப்பாக்கிச்சூடு உலகக் கோப்பை ஆண்கள் டிராப் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் பிரித்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றார்.

பிசிசிஐக்கு ரூ.11 கோடி இழப்பீடு தொகையை பிசிபி செலுத்தியது

  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சர்ச்சை தீர்ப்புக் குழுவிடம் தொடுத்த வழக்கில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை [இந்திய ரூபாய் மதிப்பில் பதினொரு கோடிக்கு மேல்] இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு (BCCI) இழப்பீடாக செலுத்தியது.

WF பேட்மிண்டன் தரவரிசை

பெண்கள்

1) தை சூ யிங் 6) பி வி சிந்து 9) சாய்னா நேவால் 94) ரியா முகர்ஜி

ஆண்கள்

1) கெண்டோ மொமொட்டா 7) கிதாம்பி ஸ்ரீகாந்த் 14) சமீர் வர்மா 19) பி சாய் பிரணீத்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here