TNPSC Current Affairs 2019 in Tamil 18.03.2019 – Download as PDF

0
14
CA TAMIL - MARCH 18

முக்கிய தினங்கள்

உலகளாவிய மறுசுழற்சி தினம் – மார்ச் 18 (Global Recycling Day)

  • மறுசுழற்சி செய்வதன் மூலம் ஏற்படும் எதிர்கால பயன்பாடு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 2018ம் ஆண்டு முதல் மார்ச் 18ம் தேதியை உலகளாவிய மறுசுழற்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 2019ம் ஆண்டின் உலகளாவிய மறுசுழற்சி தினத்தின் கருத்துரு : – “எதிர்காலத்திற்காக மறுசுழற்சி” (Recycling into the Future)

இந்திய நிகழ்வுகள்

  • மிகவும் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞரான டி.கே. பட்டமாளின் 100வது நினைவுதினம் மார்ச் 19 அன்று அனுசரிக்கப்படுகிறது. இசைக் கச்சேரிகளில் ராகம், தாளம் மற்றும் பல்லவி ஆகிய மூன்றையும் நிகழ்த்திய முதலாவது பெண்மணி இவரே ஆவார்.

உலக நிகழ்வுகள்

  • BRICS – Brazil, Russia, India, China, South Africaபிரேசில் தலைமையில் நடைபெறும் முதல் பிரிக்ஸ் (BRICS) மாநாடானது கியூரிடிபா (Curitiba) என்ற இடத்தில் நடைபெற்றது. BRICS அமைப்பு ஜூன் 2006ல் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் “ஷாங்காய்” – இல் உள்ளது. 2010ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்கா இந்த அமைப்பில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
  • தென்-மேற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான ஐடாய் (Idai cyclone) புயலானது பெய்ரா (Beira) நாட்டின் மொசாம்பிக் நகரத்தை தாக்கியது.

TNPSC Current Affairs: March 2019 – World News Image

விருதுகள்

  • சிறந்த வணிக மாற்றுவோருக்கான ஆண்டு விருதானது மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் வழங்கப்பட்டது. GST வரியை நடைமுறைப்படுத்தியதற்காக இவ்விருது வழங்கப்பட்டது.
  • DD மகிளா கிஷான் விருதானது ஸ்வாதி ஷிங்கடே என்பவருக்கு வழங்கப்பட்டது.

நியமனங்கள்

  • மலாவி குடியரசு நாட்டிற்கான இந்திய உயர் ஆணையராக அனுராக் பூஷன்நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் உஷ்பெகிஸ்தான் நாட்டிற்கான இந்தியத் தூதராக சந்தோஷ் ஜா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டு நிகழ்வுகள்

  • ESPN என்ற அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள உலகப் புகழ்பெற்ற 100 வீரர்களின் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடம்பிடித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஏழாவது இடம் பிடித்துள்ளார்.

TNPSC Current Affairs: March 2019 – Sports News Image

தரவரிசையில் 84 வது இடத்திற்கு உயர்ந்துள்ளார் இந்தியடென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன்

  • இந்தியன் வேல்ஸ் தொடரில் சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தையும் பெற்ற இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தனது டென்னிஸ் வாழ்க்கையில் முதன்முறையாக தரவரிசையில் முன்னேறி 84வது இடத்ததை பிடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here