TNPSC Current Affairs 2019 in Tamil 16.03.2019 – Download as PDF

0
13
CA TAMIL 16 MARCH

முக்கிய தினங்கள்

தேசிய தடுப்பூசி தினம் – மார்ச் 16 (National Vaccination Day)

 • இந்தியாவில் முதன்முதலாக 1995ம் ஆண்டு மார்ச் 16ந் தேதி முதல் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டதன் நினைவாக ஆண்டுதோறும் மார்ச் 16ம் தேதி தேசிய தடுப்பூசி தினமாக (National Vaccination Day) கடைபிடிக்கப்படுகிறது.

இந்திய நிகழ்வுகள்

SVEEP – தேர்தல் ஓட்டளிக்கும் விழிப்புணர்வு முகாம்

 • மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க, சீர்திருத்த வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்களிப்பு (SVEEP) பிரச்சாரத்தின் கீழ் தாலுக் மட்டத்தில் இளைஞர் மத்தியில் விழிப்புணர்வு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இளம் பருவத்தினர்களுக்கு ஊட்டச்சத்து திட்டம்

 • இளம் பருவத்தினர் மத்தியில் ஊட்டச்சத்து பிரச்சனைக்கு தீர்வு காண, ICRISAT, தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (NIN) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) இணைந்து ‘Iron for Adolescents’ or ‘FeFA’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. FeFa என்பதின் விரிவாக்கம் Fe – இரும்பு, FA – For Adolescents’ என்பதை குறிக்கும்.

உலக நிகழ்வுகள்

ஐ.நா. 1267 தடைகளின் கீழ் மசூத் அசாரை பட்டியலிடும் முயற்சிகளை இந்தியா தொடர உள்ளது

 • ஜெ.எம். தலைவர் மசூத் அசாரை ஐ.நா. வின் 1267 தடை செய்யப்பட்டோர் பட்டியலில் சேர்க்க புது தில்லியில் முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச தீவிரவாதியாக மசூத் அசாரை அறிவிக்க இந்தியாவின் முயற்சிக்கு 15இல் 14 ஐ. நா பாதுகாப்பு உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

 ஸ்லோவாகியாவின் ஜனாதிபதி தேர்தல் 2019

 • ஸ்லோவாகிய ஜனாதிபதித் தேர்தல் 2019, மார்ச் 16 மற்றும் 30 ஆம் தேதி என இரண்டு சுற்றுகளாக நடைபெறுகிறது. இது ஸ்லோவாகியாவின் ஐந்தாவது நேரடி ஜனாதிபதி தேர்தல் ஆகும்.

அறிவியல் மற்றும் விஞ்ஞானம்

3 விண்வெளி வீரர்கள் ISS ஐ வெற்றிகரமாக அடைந்தனர்

 • ஒரு ரஷ்ய விண்வெளி வீரர் மற்றும் இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்கள் ரஷ்ய சோயிஸ் விண்கலத்தில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். இரண்டு பயணிகளை ஏற்றிச் சென்ற ராக்கெட் தோல்வியடைந்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு ISS ஐ அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநாடுகள்

முதல் BRICS ஷெர்பா கூட்டம் முடிவடைந்தது

 • பிரேசில் நாட்டை தலைமையக கொண்ட முதல் BRICS ஷெர்பா கூட்டம் பிரேசிலின் குரிடிபாவில் முடிவடைந்தது.

நான்காவது ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் சபை கூட்டம்

 • ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் சபையின் (UNEA) நான்காவது கூட்டம் 2019 மார்ச் 11 முதல் 15 வரை நைரோபியில் நடைபெற்றது. இதில் ஒற்றை-பயன்பாட்டு பிளாஸ்டிக் மற்றும் நிலையான நைட்ரஜன் மேலாண்மை தொடர்பான இரண்டு முக்கிய பூகோள சூழல் பிரச்சினைகள் பற்றிய தீர்மானங்களை இந்தியா முன்வைத்தது.
 • Theme – Innovative Solutions for environmental challenges and sustainable production and consumption.

பாதுகாப்பு நிகழ்வுகள் 

தளவாடங்களுக்கு உதவும் வகையில் பல்நோக்கு கப்பலை கடற்படை நியமித்துள்ளது

 • தெற்கு கடற்படை கட்டளைப் பணிப்பாளர் ஆணையம் லக்ஷத்வீப் மற்றும் மினிகோய் தீவுகளுக்கு சேவைகளை வழங்குவதற்காகவும், கேரளா மற்றும் மாஹே ஆகியவற்றிற்கான தளவாட உதவிகளை வழங்குவதற்காக, கடற்படை துறைமுக நடவடிக்கைகளுக்கு உதவும் வகையிலும் மார்ச் மாதத்திலிருந்து ஒரு வருட காலத்திற்கு மார்டிமென்ட் பிரைவேட் லிமிடரிடமிருந்து, எம்.வி. ட்ரிடான் லிபர்ட்டியை பயன்படுத்த நியமித்துள்ளது.

விருதுகள்

டி.டி மகளிர் கிசான் விருது

 • மகாராஷ்டிரா புனேவின் ஸ்வாட்டி ஷிங்கடே, 2018-19 ஆம் ஆண்டுக்கான டிடி மகளிர் கிசான் விருதிற்கான முதல் பரிசை பெற்றார்.

விளையாட்டு நிகழ்வுகள்

கமல்ப்ரீத் கவுர் பெண்கள் தட்டெறிவதில் தங்கம் வென்றார்

 • பாட்டியாலாவில் நடைப்பெற்ற கூட்டமைப்பு கோப்பை தடகளத்தில், கமல்ப்ரீத் கவுர் தட்டெறியும் போட்டியில் 60.25 மீட்டர் எறிந்து தங்கப்பதக்கத்தை வென்றதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார், இதன் மூலம் ஆசிய சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெற்றார்.பாட்டியாலாவில் நடைப்பெற்ற கூட்டமைப்பு கோப்பை தடகளத்தில், கமல்ப்ரீத் கவுர் தட்டெறியும் போட்டியில் 60.25 மீட்டர் எறிந்து தங்கப்பதக்கத்தை வென்றதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார், இதன் மூலம் ஆசிய சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெற்றார்.

2020 ஆம் ஆண்டில் யு -17 மகளிர் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளை இந்தியா நடத்தவுள்ளது

 • யு -17 மகளிர் கால்பந்து உலகக் கோப்பை 2020 போட்டிகள் இந்தியாவில் நடக்கவுள்ளது. இது 2017 ல் U-17 ஆண்கள் உலகக் கோப்பைக்குப் பிறகு இந்தியாவில் நடைபெறும், இரண்டாவது FIFA போட்டியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here