TNPSC Current Affairs 2019 in Tamil 15.03.2019 – Download as PDF

0
14
CA TAMIL - 15 MARCH

முக்கிய தினங்கள்

மார்ச் 15 – உலக உறக்க தினம்

 • உலகளாவிய உறக்க சமூகத்தால் உருவாக்கிய இந்த உலக உறக்க தினம், உறக்கத்தின் முக்கியத்துவம் மற்றும் அதனால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் தாக்கம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் ஆராய்ச்சியாளர்கள், உடல்நல வல்லுநர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உறக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.
 • அனைத்து வயதிலும் ஆரோக்கியமான உறக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கத்தில் ‘Healthy Sleep, Healthy Aging,’ என்ற முழக்கத்தை இணைத்துள்ளது.

உலக நுகர்வோர் உரிமைகள் தினம் – மார்ச் 15

  • நுகர்வோர்களின் அடிப்படை உரிமைகளை ஊக்குவிப்பதற்காக 1983ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15ம் தேதி, உலக நுகர்வோர் உரிமைகள் தினம் (World Consumer Rights Day) கடைபிடிக்கப்படுகிறது.
  • 2019ம் ஆண்டின் உலக நுகர்வோர் உரிமைகள் தின மையக்கருத்து:- “நம்பகமான திறன்மிகு உற்பத்திகள்” (Trusted Smart Products) என்பதாகும்.
  • நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
 • தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம் – டிசம்பர் 24ல் கொண்டாடப்படுகிறது.

இந்திய நிகழ்வுகள்

விஷ்ணு நிவாஸம்‘ ISO சான்றிதழை பெற்றுள்ளது

 • திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் (டி.டி.டி) ‘விஷ்ணு நிவாஸம்’ என்ற ஓய்வு விடுதி மற்றும் யாத்திரை விடுதி வளாகத்திற்கு சர்வதேச தரநிர்ணய அமைப்பு (ISO) சான்றிதழ் அளித்துள்ளது. இந்தச் சான்றிதழை பெறும் முதல் TTD விடுதி வளாகம் இதுவாகும்.

அறிவியல் & தொழில்நுட்பம்

 • இந்தியாவின் பாதுகாப்பு ஆய்வகமான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வழிகாட்டு ஏவுகலன் அமைப்பான“பினாகாவை” இராஜஸ்தானில் உள்ள பொக்ரானில் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

TNPSC Current Affairs: March 2019 – Science and Technology News Image

 • இந்தியாவில் பல்வேறு அலைநீளம் கொண்ட விண்வெளி ஆய்வகமான “ஆஸ்ட்ரோசாட்”-ஐப் பயன்படுத்தி கோள வடிவ நட்சத்திரங்களான NGC 2808-ல் உள்ள புதிய புற ஊதா நட்சத்திரக் கூட்டங்களை திருவனந்தபுரம் மற்றும் மும்பையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்கண்டறிந்துள்ளனர்.
   • ஆஸ்ட்ரோசாட் என்பது இந்தியாவின் முதலாவது பல்வேறு அலைநீளம் கொண்ட விண்வெளி ஆய்வகமாகும்.
  • இது 2015ம் ஆண்டு செப்டம்பர் 28 அன்று பிஎஸ்எல்வி – எக்ஸ்எல் (PSLV-XL) மூலம் ஏவப்பட்டது

நியமனங்கள்

 • எம்.ஆர்.குமார் – இந்திய லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனின்(LIC) புதிய தலைவர்

பாதுகாப்பு செய்திகள்

ஆஸ்திரேலியா இலங்கையுடன் மிகப்பெரிய இராணுவப் பயிற்சியைமேற்கொள்ளத் திட்டம்

 • இந்திய-பசிபிக் 2019 இராணுவப்பயிற்சியின் ஒரு பகுதியாக இலங்கையுடன் மிகப்பெரிய இராணுவப் பயிற்சியை மேற்கொள்ள 1000 க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய கடற்படை, இராணுவம் மற்றும் விமானப்படை அதிகாரிகளை ஈடுபடுத்த ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.

புத்தகங்கள்

“Tiger Woman” என்ற தலைப்பிலான புத்தகம், பெங்காலி நாவலாசிரியர் சிர்ஷோ பந்தோபதியா (Sirsho Bandopadhyay) என்பவரால் எழுதி வெளியிடப்பட்டுள்ளது.

 • இந்த புத்தகமானது, அருணாவா சின்ஹா என்பவரால் எழுதப்பட்ட “Shardul Sundari”என்ற நூலின் மொழிபெயர்பாகும்.

விளையாட்டு செய்திகள்

தீபா கர்மாகர் ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பை இறுதிச்சுற்றுக்குதகுதி

 • அசர்பெய்ஜானில் நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டியில் 3வது இடம் பிடித்து ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பை ‘வால்ட்’ பிரிவு இறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் தீபா கர்மாகர் தகுதிபெற்றார்.

ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்

 • ஸ்பாட் பிக்சிங் வழக்கினால் கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எஸ். ஸ்ரீசாந்த் மீதான ஆயுட்கால தடை மீதான வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அதன் கடும் தண்டனையை மறு ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here