TNPSC Current Affairs 2019 in Tamil 12.02.2019– Download as PDF

0
30
current affairs tamil feb 12
தமிழக நிகழ்வுகள்
  • நாட்டில் ஒட்டுமொத்தமாக சரக்கு மற்றும் சேவை வரி வசூலித்தலில் தமிழ்நாடு 4வதுஇடத்தைப் பிடித்துள்ளது.
    • ஒட்டு மொத்தமாக ரூபாய் 70.792 கோடிகள் வரி வசூலித்து மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் உத்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
இந்திய நிகழ்வுகள்
  • ஆந்திரப் பிரதேச மாநில அரசானது விவசாயிகளுக்கு நிதியுதவி அளிப்பதற்காக‘அன்னதத்தா சுஹிபாவா’ (Annadata Sukhibhava Scheme) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய பெண்களிடையே புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் அந்நோயின் ஆரம்பகால நிலை பற்றிய அறிதலை ஏற்படுத்துவது ஆகியவற்றுக்காக “சுவஸ்த் நாரி – சக்தி ஹமாரி” என்ற பிரச்சாரத்தை இந்திய புற்றுநோய் சமூகம் (Indian Cancer Society – ICS) தொடங்கியுள்ளது.
    • இது உலக புற்றுநோய் தினத்தின் (பிப்ரவரி 4) போது தொடங்கப்பட்டது.
 உலக நிகழ்வுகள்
  • தைவானில் தற்போது உள்ள பிரதமர் வில்லியம் லாய் தனது பதவியை ராஜனாமா செய்வதால்,புதிய பிரதமராக சூ செங் – சங்கை, அதிபர் சை இங் – வென் நியமித்துள்ளார்.
    • இதற்கு முன் சூ செங் – சங் கடந்த 2006ம் ஆண்டு பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தார்.
  • இந்திய நாட்டின் கடவுச்சீட்டை பயன்படுத்தி ஒருவர் 61 நாடுகளுக்கு நுழைவு இசைவு இல்லாமல் பயணம் செய்ய இயலும். இப்பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது.ஜப்பான் கடவுச்சீட்டை பயன்படுத்தி 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். 189நாடுகளுடன் சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் இரண்டாவது இடத்தில் உள்ளன. 158 நாடுகளுடன் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் மூன்றாவது இடத்தில் உள்ளது.
நியமனங்கள்
  • மூத்த இந்தியக் காவல் பணி அதிகாரி ஏ.பி. மகேஸ்வரி மத்திய உள்துறை அமைச்சகத்தின்சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அறிவியல் & தொழில்நுட்பம்
  • நாசா, தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் தகவலின்படி, 1880 ஆம் ஆண்டு முதல் 4வது வெப்பமான ஆண்டாக, 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 2015, 2016, 2017 ஆகியவை இதற்கு முன்பிருந்த 3 வெப்பமான ஆண்டுகளாகும்.
    • 2018ம் ஆண்டில் உலக வெப்பநிலையானது 20ம் நூற்றாண்டின் சராசரி வெப்பநிலையை விட 1.42 டிகிரி பாரன்ஹீட் அதிகமாகும்.
விருதுகள்
  • கனடாவின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தால் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனட திரைப்படத் தயாரிப்பாளர்தீபா மேத்தா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு நிகழ்வுகள்
  • சர்வதேச குத்துச்சண்டை சங்கம் வெளியிட்டுள்ள உலக குத்துச்சண்டை தரவரிசைப் பட்டியலில்45 – 48 கி.கி., ‘Light fly’ ’ பிரிவில், 1700 புள்ளிகள் பெற்று இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் முதலிடம் பிடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here