TNPSC Current Affairs 2019 in Tamil 04.02.2019– Download as PDF

0
7
current affairs tamil 04 feb

தமிழக நிகழ்வுகள்

  • ஐ.சி.டி அகாடெமி பிரிட்ஜ் 2019 என்ற மாநாட்டை தமிழ்நாட்டின் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர். மணிகண்டன் தொடங்கி வைத்தார்.
    • இம்மாநாட்டின் 37வது பதிப்பின் கருப்பொருள் – “Fostering India Industry 4.0” என்பதாகும்.

இந்திய நிகழ்வுகள்

  • பியூஷ் கோயல் IEA யின் ‘இரயிலின் எதிர்காலம்’ (The future of Rail) என்ற அறிக்கையை ஜனவரி 30 (2019) அன்று வெளியிட்டார்.
    • இரயில் சேவையின் தற்போதைய மற்றும் எதிர்கால முக்கியத்துவத்தை பகுப்பாய்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்து.
    • IEA – International Energy Agency.

உலக நிகழ்வுகள்

  • மலேசியாவில் “சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா” மன்னராக பதவி ஏற்றார். துணை மன்னராக “சுல்தான் நஸ்ரின் ஷா” பதவி ஏற்றுள்ளார்.
    • மன்னர் முடியாட்சியின் கீழ், கூட்டாச்சி முறையிலான அரசியல் சட்டம் அமலில் உள்ளது.
    • 2016ம் ஆண்டு இறுதியில் பதவி ஏற்ற மன்னர் ஐந்தாம் சுல்தான் முகமது. தனது பதவிகாலம் முடிவதற்கு முன்பாகவே கடந்த 6ம் தேதி பதவி விலகினார்.
  • அமெரிக்கா மற்றும் சீனா இடையே நடந்த வர்த்தகப் போர் தொடர்பாக கடந்த மாதம் அர்ஜெண்டினாவில் நடந்த “ஜி 20 உச்சி மாநாட்டின்” போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜிக்பிங்கும் சந்தித்து பேசினர். அப்பொழுது இருதரப்பு வர்த்தகப் போரும் மார்ச் 1ம் தேதி வரை 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வியட்நாம் துறைமுக நகரான “டா நாங்கில்” வருகிற 27, 28ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

அறிவியல் & தொழில்நுட்பம்

  • பெங்களுரிவில் புதிய “மனித விண்வெளி விமான மையத்தை” இஸ்ரோ அறிமுகம் செய்துள்ளது. இந்த மையம் இஸ்ரோவின் தலைமையகம் அருகில் அமைக்கப்பட்டுள்ளது.
    • இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே. கஸ்தூரிரங்கன் மற்றும் தற்போதைய இஸ்ரோ தலைவர் கே.சிவன் ஆகியோர் இந்த மையத்தை துவக்கி வைத்தனர். இந்த மையம் எஸ். உன்னிகிருஷ்ணன் நாயர் தலைமையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

  • தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறை (DIPP)- யின் செயலாளரான ரமேஷ் அபிஷேக்,சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளராக கூடுதல் பொறுப்பை பெற்றுள்ளார்.

பொருளாதார நிகழ்வுகள்

  • INSTEX – ஈரான் வர்த்தக மேம்பாட்டு திட்டம் ஈரானை அமெரிக்காவின் வர்த்தக தடைகளிடமிருந்து காப்பாற்ற ஐக்கிய நாடுகள், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி இணைந்த செயல்படுத்தும் திட்டமே INSTEX என்னும் திட்டமாகும்.
    • INSTEX – Instrument is Support of Trade Exercise.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here