TNPSC Current Affairs 2019 in Tamil 03.02.2019– Download as PDF

0
73
current affairs tamil

உலக நிகழ்வுகள்

  • ரஷ்ய அரசால் தடை செய்யப்பட்ட தளங்கள், “கூகுள்” தேடுபொறியில் தொடர்ந்து இடம்பெற்று வந்ததைத் தொடர்ந்து சட்ட விதிகளை மீறிய குற்றத்திற்காகக் “கூகுள்” நிறுவனத்திற்கு 7 ஆயிரத்து 600 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.5.4லட்சம்)அபராதம் விதிக்கப்பட்டது.

இந்திய நிகழ்வுகள்

  • இந்திய ராணுவத்துக்கு அமெரிக்காவில் இருந்து 73 ஆயிரம் ‘சிக் சவர்’ துப்பாக்கிகள்வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • இன்சாஸ் துப்பாக்கிகளுக்கு பதிலாக இந்த துப்பாக்கிகளை வீரர்கள் பயன்படுத்த உள்ளார்கள் என ராணுவம் தெரிவித்துள்ளது.

அறிவியல் & தொழில்நுட்பம்

  • கணினிகளில் “விண்டோஸ் 7,8.1,10” இயக்க முறைகளை இலக்கு வைத்து “ரம்பா” வைரஸ்தாக்குதல் நடத்தி வருகிறது.
    • இந்த வைரஸானது கணினிகளில் இலவசமாக தரையிறக்கம் செய்யப்படுகின்ற லிங்குகளின் (Link) ஊடாக கணினிக்கு நுழைவதாக அறியப்படுகின்றது.

நியமனங்கள்

  • சி.பி.ஐ யின் புதிய இயக்குனராக ரிஷி குமார் சுக்லா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
    • இவருக்கு முன் இடைக்கால சி.பி.ஐ இயக்குநராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டிருந்தார்.

பொருளாதார நிகழ்வுகள்

  • நடப்பு நிதி ஆண்டில் (2018-19) நாட்டின் நிதிப் பற்றாக்குறை, நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 3.3 சதவீத அளவுக்கு இருக்கும் என சுபாஷ் சந்திர கார்க் (பொருளாதார விவகாரத் துறைச் செயலர்) தெரிவித்துள்ளார்.
    • 2020ம் ஆண்டில் பற்றாக்குறை இலக்கு 3 சதவீதமாக குறைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு நிகழ்வுகள்

ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி 2ம் இடமும், மேக் லேனிங் 3ம் இடமும் பிடித்துள்ளனர். நியூசிலாந்தின் எமி சாட்டர்வொயிட் 4ம் இடம் பிடித்துள்ளார்.ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின்ஸ்மிரிதி மந்தனா முதலிடம் பிடித்துள்ளார்.

இந்தியாவின் மிதாலி ராஜ் 5ம் இடத்தில் உள்ளார்.

  • “அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள” மிதாலி ராஜ் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கியதன் மூலம், “200 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய” முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here