TNPSC Current Affairs 2019 in Tamil 02.02.2019– Download as PDF

0
25
current affairs

உலக நிகழ்வுகள்

  • தனிம வரிசை அட்டவணை கண்டுபிடிக்கப்பட்டு 150வது ஆண்டை நினைவு கூறும்வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை மற்றும் யுனெஸ்கோ அமைப்பு ‘2019ம் ஆண்டை சர்வதேச தனிம வரிசை அட்டவணை (The International Year of the periodic table 2019)ஆண்டாக’ அறிவித்துள்ளது.
    • தனிம வரிசை அட்டவணை 1869ம் ஆண்டு ரஷ்ய அறிவியலாளர்கள் ‘டிமிட்ரி மெண்டலீவ்’என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா (UAE and Saudi Arabia) ஆகிய நாடுகள் இணைந்து ‘அபெர்’(Aber) என்ற பொதுவான டிஜிட்டல் நாணயத்தை தொடங்கியுள்ளன.

இந்திய நிகழ்வுகள்

  • இந்தியாவின் ‘இரண்டாவது துலிப் மலர் பூங்கா’ வானது உத்திரகாண்ட் மாநிலத்தின்,பித்தோராகர் மாவட்டத்தில் 50 ஹெக்டர் நிலப்பகுதியில் அமைய உள்ளது (India’s second tulip Garden, Uttarakhand).
    • இந்தியாவின் ‘முதலாவது துலிப் மலர் பூங்கா’, ஸ்ரீ நகரில் (ஜம்மு & காஷ்மீர்) அமைந்துள்ளது.
  • தெலுங்கானா மாநில அரசு, புலிகளின் எண்ணிக்கையை பாதுகாப்பதற்காக, மாநில புலிகள் பாதுகாப்புப் படையை (State tiger Protection Force) உருவாக்க முடிவு செய்துள்ளது.
    • புலிகள் பாதுகாப்புப் படையை உருவாக்கும் இந்தியாவின் முதல் மாநிலம் தெலுங்கானா ஆகும்.
  • தேசிய உப்புச் சத்தியாகிரக நினைவகமானது, தண்டியில் (குஜராத்) அமைக்கப்பட்டுள்ளது.
    • காந்தியின் 71வது நினைவு நாளின் போது இந்நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.
    • உப்புச் சத்தியாகிரக போராட்டம் 12 மார்ச் 1930 முதல் 6 ஏப்ரல் 1930 வரை நடைபெற்றது. இதில் 78 பேர் கலந்து கொண்டனர் இதில் பங்கேற்ற ஒரே பெண் சரோஜினி நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது.
  • அமைப்பு சார நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு மாதம் ரூபாய் 3000 ஓய்வூதியம்வழங்குவதற்காக மத்திய இடைக்கால பட்ஜெட்டில், ‘பிரதான் மந்திரி ஸ்ராம் யோகி மந்தன்’ என்ற திட்டம் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

  • இந்தியக் கடற்படையின் துணைத் தளபதியாக, தேசிய பாதுகாப்பு கல்விக் கழகத்தின் தலைமைப் பொறுப்பாளராக உள்ள ஜி. அசோக் குமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இந்தியக் கடற்படையின் தளபதியாக சுனில் லம்பா உள்ளார்.

விருதுகள்

  • புது டெல்லியில் நடைபெற்ற 6வது பொதுத் துறை விருதுகள் வழங்கும் விழாவில், யுக்தி சார் செயல்பாடுகள் நிதியியல் பிரிவில் சிறந்த மினி ரத்னா பொதுத்துறை நிறுவனத்திற்கான விருதை, நுமாலிகார்க் சுத்திகரிப்பு நிறுவனம் (Numaligarh Refinery Limited) பெற்றுள்ளது.
    • NRL என்பது பாரத் பெட்ரோலியத்தின், மினி ரத்னா நிறுவனமாகும் (அசாம்).

TNPSC Current Affairs: February 2019 – Awards News Image

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here