TNPSC Current Affairs 2019 in Tamil 01.02.2019– Download as PDF

0
30
current affairs tamil feb 1 2019

இந்திய நிகழ்வுகள்

1.உத்திரபிரதேச மாநிலம் 600கி.மீ தூரத்திற்கு உலகின் மிக நீளமான (World’s longest Express way) “எக்ஸ்பிரஸ் சாலை” அமைக்க முடிவு செய்துள்ளது.

  • இதற்கு “கங்கா எக்ஸ்பிரஸ் சாலை” என பெயரிடப்பட்டுள்ளது.

2.மூன்றாவது புலிகள் கணக்கெடுப்பு பற்றிய சர்வதேச மாநாடு (International Stock Taking Conference on Tiger Conservation – 2019) புதுடெல்லியில் ஜனவரி 28 – 29ம்; தேதிகளில்; நடைபெ ற்றது.

3.வடகிழக்கு மாநிலங்களின் முன்னேற்றத்திற்காக ‘ஸ்வதேஷ் தர்ஷன்’ என்ற திட்டத்தை சுற்றுலாத்துறை தொடங்கியுள்ளது.

  • இத்திட்டத்தை, சிக்கிம் மாநிலம் முதன் முதலில் அமல்படுத்தியுள்ளது.

தமிழக நிகழ்வுகள்

4. நடைபெற்ற குடியரசு தின விழாவில் “சிறந்த அணிவகுப்பில்” தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகமானது முதல் பரிசினை வென்றுள்ளது.

  • வேளாண் மற்றும் தோட்டக்கலை துறையானது 2வது பரிசினையும் சுகாதாரத்துறை 3வது பரிசினையும் பெற்றுள்ளது.

விருதுகள்

5.இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தின் (FSSAI) 100 நாள் நுகர்வோர் சேவை திட்டமான “ஸ்வஸ்த் பாரத் யாத்ரா” (Swasth Bharat Yatra) தேசிய பிரச்சார இயக்கத்தில் தமிழ்நாடு ஒட்டு மொத்த அளவில் சிறந்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • இத்திட்டம் அக்டோபர் 16, 2018ல் தொடங்கப்பட்டது.

நியமனங்கள்

6.மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் (UPSC) உறுப்பினராக “ராஜீவ் நயன் சௌபே” (Rajiv Nayan Choubey) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தில் ஒரு தலைவர் மற்றும் 10 உறுப்பினர்கள் உள்ளனர்.
  • இதன் தலைவர் “அரவிந்த் சக்சேனா”.

புத்தகங்கள்

7.ண்ட்ரி மேகின் என்பவர் எழுதிய லா வி டி’வின் ஹோம் இன்கோன்னு (Andrei Makine’s “La Vie d’un homme inconnu” – தெரியாத மனிதனின் வாழ்க்கை) எனும் புத்தகத்தின் மொழி பெயர்ப்பானது இலக்கிய மொழிபெயர்ப்பிற்கான “ரோமைன் ரோலண்ட் புத்தக பரிசினை” வென்றுள்ளது.

  • இந்த புத்தகமானது S.R. கிச்சன மூர்த்தியால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here