TNPSC Current Affairs 2019 in Tamil 13.02.2019 –Download as PDF

0
43
current affairs tamil feb 13
முக்கிய தினங்கள்

உலக வானொலி தினம் (World Radio Day) – பிப்ரவரி 13.

ஐக்கிய நாடுகள் சபையானது 2013-ஆம் ஆண்டில் பிப்ரவரி 13-ஆம் தேதியை உலக ரேடியோ தினமாக அறிவித்தது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் உலக ரேடியோ தினம் பிப்ரவரி 13 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

தமிழக நிகழ்வுகள்

தமிழகத்தின் கூடுதல் தேர்தல் அதிகாரியாக எம்.பாலாஜி மற்றும் வி.ராஜாராமன்நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி “சத்ய பிரத சாகு” (MP மற்றும் MLA தேர்தலை நடத்துகிறார்). தமிழகத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஷ்கான் (உள்ளாட்சி தேர்தலை நடத்துகிறார்).

இந்திய நிகழ்வுகள்
  • இமாச்சலப் பிரதேசத்தின் உணவு சேகரிக்கும் முறைக்கு ஊக்கமளித்து, உணவு வீணாவதை தடுப்பதற்காக, அம்மாநிலத்தின் முதல் மெகா உணவுப் பூங்காவானது “உனா மாவட்டத்தில்”அமையவுள்ளது.
    • மாச்சலப் பிரதேசத்தின் குளிர்கால தலைநகர் – தர்மசாலா மற்றும் கோடைக்கால தலைநகர் – சிம்லா.
  • இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கிடையே மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மரபுசார் அமைப்புகளின் துறைகள் மீது ஒத்துழைப்பு நல்கிடுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
உலக நிகழ்வுகள்
  • உலக நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு சிறந்த நடைமுறைகள் மற்றும் தீர்வுகளைவெளிப்படுத்துவதற்கான ஒரு தனித்துவமான தளத்தை வழங்குவதற்காக, உலக அரசின் உச்சி மாநாட்டின் (World Government Summit) ஏழாவது பதிப்பு துபாயில் (ஐக்கிய அமீரகம்) நடைபெறவுள்ளது.
    • இந்த மாநாடானது, உலகம் முழுவதும் அரசாங்கங்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் தளமாக உள்ளது.
புத்தகங்கள்
  • ராகேஷ் ஆனந்த் பக்ஷி (Rakesh Anand Bakshi) என்பவர் எழுதிய, “Let’s talk On Air : Conversation with Radio Presenters” என்ற புத்தகம் உலக வானொலி தினமான (World Radio Day) பிப்ரவரி 13ல்(இன்று) வெளியிடப்படுகிறது.
நியமனங்கள்
  • பூடான் நாட்டிற்கான இந்திய தூதராக “ருச்சீரா காம்கோஜ்” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • தற்போது தென் ஆப்பிரிக்காவிற்கான உயர் கமிஷனராகவும் செயல்படுகிறார்.
விளையாட்டு நிகழ்வுகள்
  • சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி 2019ல்; கோரென்டின் மவுட்டெட் (பிரான்ஸ்) சாம்பியன்பட்டம் வென்றுள்ளார்.
  • உலக டென்னிஸ் வீரர்களின் (ATP Ranking 2019) தரவரிசைப் பட்டியலை சர்வதேச டென்னிஸ் கழகம் வெளியிட்டுள்ளது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் “ஜோகோவிச்” (செர்பியா) முதலிடத்திலும் ரபெல் நடால்(ஸ்பெயின்) 2-ஆம் இடத்திலும் உள்ளனர்.
    • இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 97-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here